• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012  »  Apr 2012   » வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..

தொடர்....                                                                                                               தொடர் எண்-23

வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..


மேற்சொன்ன விதமாக தேவ்பந்திகள் அனைவருடைய பீரும், முர்ஷிதுமாகிய ஆரிபு பில்லாஹ் ஹாஜி ஹாபிஸ், ஷாஹ் முஹம்மது இம்தாதுல்லாஹ் ஸாஹிபு, முஹாஜிர் மக்கீ (றஹ்) முறையீடு செய்துள்ளார்கள்.

குத்புஸ்ஸமான், தைக்கா ஸாஹிபு, வலியுல்லாஹ் (றலி) அவர்கள், தங்களது “அஹ்மதுல்லாஹல் வலீ” என்ற பைத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ‘யாகைரன்னபீ - யாகைரன்னபீ’ (நபிமார்களிலெல்லாம் சிரேஷ்டமான நன்னபியே)- என்று அழைத்து, அழைத்து இவ்வுலக சம்பந்தமான, மறு உலக சம்பந்தமான அத்தனை கோரிக்கைகளையும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே நேருக்கு நேர் வேண்டுதல் செய்து இறைஞ்சுகிறார்கள்.

வலிகள் திலகம் கெளதுல்அஃளம், யஸய்யிதுனா முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானீ  (றலி) அவர்களை, ­ரஹுப் புலி, ஷைகு ஸதக்கத்துல்லாஹ்அப்பா (றஹ்) அவர்கள் நேருக்கு நேரே அழைத்து,


(யா ஸையிதீ ஸனதீ கெளதீ வயாமததீ) எனது தலைவரவர்களே! எனது ஆதாரமே! எனதுஇரட்சகரே! எனது உதவியாளரே! பகைவர்களின் தீங்கு ஏதும் வந்தணுகாமல் என்னைக் காப்பாற்றி
, பாவத்தில் நான்சிக்கி மோசம் போய் விடாமல் என்னைக் கைப்பிடித்துப் பாதுகாத்து உதவி புரிவீர்களாக! அல்லாஹ்வுடைய கலீபாவெனும் பிரதிநிதியாக எங்கள் பால் வந்துதித்த முஹிய்யுத்தீன் ஆண்டகையவர்களே!” என்று முனாஜாத்து செய்துள்ளார்கள்.

ஞானக்களஞ்சியம், குணங்குடி மஸ்தான் ஸாஹிபு வொலியுல்லாஹ் (றஹ்) அவர்கள், இரட்சிப்புத் தேடியிருப்பதைப் பாருங்கள்!

            மன்னிய தவத்தினர்க் கருள் தந்த குருவும் நீ

          மாதா பிதாவும் நீயே!

                மட்டறு பவக்கடல் தொலைக்கு மொரு கவிழா

                  மரக்கலமும் நீயல்லவோ!

          அன்னியமதான பிரபஞ்சமாம் பெருநெருப்

                   படக்கும் பெரும் பாலமாய்

                 அன்புடன் எனைப் பெற்ற அப்பனே அருள் தந்த

                    ஆண்டவனும் நீயல்லவோ!

 

                      என்னை உனையன்றி இனி யாள்வரெவ ரையனே

              எந்தையே எம்பிரானே!

        இகபர மிரண்டினுஞ் சுகதுக்க மற்றுயான்

                    ஈடேற அருள் புரிவையே!

                           நன்னிலையமாக வென் முன்னிலையில் வந்து எந்

                         நாளும் ரட்சித்தருள்வையே!

             நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு

                   நாதன் முஹிய்யுத்தீனே!

என்று அவர்கள் உரைத்துள்ளார்கள்.

குத்புல் அக்தாபு, பர்துல் அஹ்பாபு, ஸையிதுஅப்துல் காதிர், மீரான் ஸாஹிப், ஷாஹுல்ஹமீது, நாகூர் ஆண்டகை (றலி) அவர்களை அழைத்து,


( யா ஸாஹிபன் னாஹூரீ குன்லீ நாஸிரீ)

“நாகூர் வாழும் எஜமானே! எனது கேள்விப் புலனும், பார்வைப் புலனும் உறுப்புக்களும் ஸலாமத்தாக இருக்க எனக்கு நல்லருள் செய்வீர்களாக! இன்னும் நான் குறைந்த அற்பாயுள் வயதுடைவனாக இல்லாமல் நீடித்த வாணாள் உடையவனாயிருக்க நீங்கள் நல்லுதவி செய்தருள்வீர்களாக !எல்லாவித நன்மைகளும் ஒருங்கே சேகரமாய் பொதிந்து அமைந்த அப்துல் காதிரு வொலி அவர்களே!” என்று காயல்பதியில் பிறந்து கீழக்கரையில் அடங்கி ஜோதி கொண்டிலங்கும்  கல்விக் கடல், ஷைகு ஸதக்கத்துல்லாஹ்அப்பா (றஹ்) அவர்கள் உதவி தேடியுள்ளார்கள்.                      


(தொடரும்)