சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத் , திருச்சி.
தொடர்.......
நூற்றாண்டு அதிபதிகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அருளுகிறார்கள்: “இன்னல்லாஹத ஆலா யு ஜத்திது லி ஹாதிஹில் உம்மத்தி, மன் யு ஜத்திது லஹா அலா ரஃஸி குல்லி மிஅதி ஸனதின்“...
பொருள் : இந்த உம்மத்துக்காகஅவர்களுடைய மார்க்கத்தை புதிதாக்கி வைப்பதற்காக நூறு நூறு ஆண்டுகளுக்கு ஒருவரை நிச்சயமாகஅல்லாஹு தஆலா புதிதாக அனுப்பி வைக்கின்றான்.
இர்ஷாத் என்னும்கிதாபில் கூறப்படுகிறது : மேற்கண்ட ஹதீதின்படி முதல் நூற்றாண்டின் அதிபராக ஹள்ரத் உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்களும் இரண்டாவது நூற்றாண்டின் அதிபராக இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்களும் மூன்றாம் நூற்றாண்டின் அதிபராக ஹள்ரத் அபுல் ஹஸனில் அஷ்அரி (ரஹ்) அவர்களும் நான்காம் நூற்றாண்டின் அதிபராக அபூபக்ரில் பாகிலானீ (ரஹ்) அவர்களும் ஐந்தாம் நூற்றாண்டின் அதிபராக “ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” ஹள்ரத் ஹாமிதில் கஜ்ஜாலி (ரஹ்) அவர்களும் ஆறாம் நூற்றாண்டின் அதிபராக இமா பக்ருத்தீன் (ரஹ்) அவர்களும் ஏழாம் நூற்றாண்டின்அதிபராக ஹள்ரத் தகிய்யுத்தீன் இப்னு தகீகில் ஈத் (ரஹ்) அவர்களும் எட்டாம் நூற்றாண்டின் அதிபராக அப்துல்லா இப்னு அஸ்அத் இப்னு அலிய்யில் யாஃபியிய்யி(ரஹ்) அவர்களும் திகழ்ந்தார்கள்.நூற்றாண்டுகளின் அதிபர்கள் மறைந்ததும் அவர்களிடத்தில் அடுத்த நூற்றாண்டின் அதிபரை அல்லாஹு தஆலா, நியமனஞ் செய்து விடுகின்றான்.
(முக்கியக் குறிப்பு: “இந்த நூற்றாண்டுக்கும் நாமேயாவோம். இனிவரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும்” என்பதாக சங்கைமிகு கண்மணி வாப்பா நாயகம் அவர்கள் அருளிய அமுத மொழிக்கு மேற்கண்ட ஹதீதே தலீலாக(ஆதாரமாக)த் திகழ்கின்றது என்பதனை நாம் பேருவகையுடன் விளங்கிக் கொள்கின்றோம்.)
ஹள்ரத் பைஹகீ (ரஹ்)கூறுகின்றார்கள : இமாம் ஹன்(ம்)பலி (ரஹ்) அவர்களிடம், ஒரு வினா தொடுக்கப்பட்டு, அதற்கான சரியான ஹதீது அவர்களுக்குக் கிடைக்கவில்லை யானால், அப்பொழுது அவர்கள், அவ்வினாவிற்கு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் அளித்த ஃபத்வாவைக் கொண்டு தீர்ப்பளிப்பார்கள். யாராவது ஒருவர், இமாம் ஹன்(ம்)பலி (ரஹ்) அவர்களிடம், “நீங்களே இமாமாக இருக்க, மற்றவருடைய சொல்லை எடுத்து, ஃபத்வா கொடுப்பானேன்?” எனக் கேட்டால், எடுப்பதற்குக் காரணம், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ‘ஆலிமுல் குறைஷ்’ (குறைஷ் வம்சத்தின்அறிஞர்) என வர்ணிக்கப்பட்டதால் தான்” என பதிலளிப்பார்கள்.
ஹள்ரத் அலிய்யிப்னு அஹ்மத் தைனூரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் மக்காவிலிருந்த போது கனவில் ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டேன். அன்னவர்களிடம் “நான் யாருடைய சொல்லைக் கொண்டு, அமல் செய்ய வேண்டும்” எனக் கேட்டேன். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில், ஹள்ரத் அலீ (ரலி) அவர்களும் வீற்றிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹள்ரத் அலீ (ரலி) அவர்களிடம் “இந்த மனிதரை நம்முடைய சிறிய தகப்பனார் பேரரானஇமாம் ஷாஃபிஈயிடம் கொண்டு போய் விடுங்கள். இவர், ஷாஃபிஈ மத்ஹபைப் பற்றிப் பிடித்து, அமல் செய்து, சொர்க்கத்தின் வாசலை எட்டி விடட்டும்” என்றார்கள். நான் “அல்ஹம்து லில்லாஹ்” எனக் கூறியபடி கண்விழித்துவிட்டேன்.
இமாம் மாலிக் (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்: :
இமாம் ஷாஃபிஈ (ரஹ்)அவர்களைக் காண, விளக்க ஞானம் உள்ள ஒரு குறை´யை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை.
உமர் இப்னு ஸுஃப்யான் இப்னு முஹம்மதுஷ் வ்ரிய்யி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஓரிடத்தில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும், ஸுப்யான் இப்னு உயைனா அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒருவர் இப்னு உயைனாவிடம் “இவ்விடத்தில்சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் யோசனையால்சிலவற்றை சரி என்றும், சிலவற்றை சரியில்லை என்றும் சொல்லுகின்றார்கள். (அவர் இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்களைக் குறித்துமே தான் இவ்வாறு கூறினார்).
அப்போது இப்னு உயைனா சொன்னார்கள் : இவ்விதம் தங்கள் யோசனைப்படி, மார்க்க விளக்கங்களைக்கூறுபவர்களை நான் விரும்ப மாட்டேன்.
உடனே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கோபத்துடன் கூறினார்கள் : ஓ உயைனாவே!இது உங்கள் வேலையல்ல. உங்களுடைய வேலையயல்லாம், படித்த ஹதீதைச்சொல்வது தான் (கிளிப்பிள்ளை போல்) ஹதீதுகளை ஆய்வு செய்வது உங்கள் வேலையுமல்ல,அது உங்களுக்குத் தெரியவும் தெரியாது. அவ்வாறு ஆய்வு செய்பவர்களைக் குறை கூறுவதற்கு,உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
இதைக்கேட்டவுடன் இப்னு உயைனா, வாய்மூடி தலை கவிழ்ந்தார்கள். இந்தச் சம்பவத்திற்குப்பிறகு, இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களை, இப்னுஉயைனா எங்கு கண்டாலும், மரியாதையாக நடந்து கொண்டார்கள்.