• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012  »  Apr 2012   » ஊழலை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்!

ஊழலை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்!

மதமில்லா அறிவியல் குருடு;

அறிவியல் சாரா மதம்குற்றம்!

 

சென்னையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு!

 

“உதடுகள் உண்மையையும், கண்கள் இரக்கத்தையும், இதயம் பிரார்த்தனையையும் செய்வதே ஓர் ஆன்மாவிற்கு உண்மையான அணிகலன்.  தொண்டு செய்யவே நமக்கு பணி கிடைத்திருக்கிறது” என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் கூறினார்.

சென்னையில் ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது :

அழகான இரண்டு கண்கள் இருப்பதால், இந்த உலகத்தைக்கண்டு ரசிக்க முடிகிறது.விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னதைப் போல,  “மதமில்லாத அறிவியல் குருடு;அறிவியல் சாராத மதம் குற்றம்” ஆகும்.

பல மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்கள் நடத்தும்தேர்வில் தேர்ச்சி பெற்று வெளிவருகின்றனர். ஆனால், பொறுப்புள்ள குடிமகன் என்ற தேர்வில், தோல்வியடைகின்றனர்.  இன்றைய இந்தியாவின்வேகம் இளைஞர்களை நம்பியே உள்ளது.  இளைஞர்களுக்குவழிகாட்டும் பொறுப்பு நம்மிடையே உள்ளது.

ஊழலை எதிர்த்து இளைஞர்கள் போராட வேண்டும்.  நாள்தோறும், நீங்கள் பணிபுரியும் இடத்திற்குச் சென்றதும், கடவுளுக்குநன்றி சொல்லுங்கள்.  ஏனென்றால் இந்த வேலை வாய்ப்பைவழங்கியதே கடவுள்தான் என்பதனால். உங்கள் பணி இருக்கை, தொண்டுசெய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.  மாறாக,ஆட்சி செய்வதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பணி இருக்கையில் அமர்ந்தவுடன் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். மேற்கூறியவையே தரமுள்ள மனித வாழ்க்கைக்கு தேவை.  உங்கள் உதடுகள் உண்மையை பேசுவதற்கும், கண்கள் இரக்கத்தை காண்பிப்பதற்கும்,இதயம் பிரார்த்திப்பதற்கும் ஆக இருக்க வேண்டும்.
  

இதுவே ஆன்மாவிற்கு உண்மையான அணிகலன் ஆகும். இந்த அணிகலன் எந்தமார்க்கெட்டிலும் கிடைக்காது.  ஆண். பெண் இருபாலருக்கும்தேவையான அணிகலன் இதுவே ஆகும்.


இவ்வாறு, நீதிபதி சிவராஜ் பாட்டீல் பேசினார்.  ( நன்றி: மணிச்சுடர் )