இஸ்லாத்தில் ஆன்மீக நெறி
காயல் ஆலிமா பேரவை(விசுவாசிகளே) நீங்கள் யாவரும் (ஒரே மார்க்கத்தைப்பின் பற்றக்கூடிய) ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள்தாம். உங்கள் யாவர்க்கும் இறைவன் நான் ஒருவனே, ஆகவே என்னையே நீங்கள் வணங்குங்கள்! என்று வல்லவனாம் அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
மக்களின் ஒருமைப்பாட்டுக்கு மார்க்கங்கள் புரிந்துள்ள தொண்டு மகத்துவமிக்கது. ஒரு மொழிக்குரியவர், ஓர் இனத்திற்குரியவர்எனும் பிரிவினரை விட ஒரு மார்க்கத்திற்குரியவர்களிடம் ஒற்றுமை பலமானதாகக் காணப்படுகிறது. உலகில் தோன்றிய மக்களினம் அனைத்திற்குமே இறைவனால்வழங்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் உறுதியாக இஸ்லாம் தான் என்று இறை மறை குறிக்கிறது. இம் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்க்கை முறைகளை அமைத்துக்கெண்டோரை முஸ்லிம்கள் என்றழைப்பர். “நபியே! நிச்சசயமாக நாங்கள் முஸ்லிம்கள் என சாட்சியம்கூறுவீர்களாக” என்று இறைவன் தன் திருமறையில் உறுதிப் படுத்தி அருளுகிறான். ஏகத்துவக் கொள்கையை உள்ளத்தால் உணர்ந்து, தூதர்களை ஏற்று வாழ்க்கையை வகுத்துக் கொள்ளும் மனிதர்கள் அனைவருமேமுஸ்லிம்கள் தாம். இவர்கள்அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்கள்தாம்.
இஸ்லாம் என்னும் சொல்லுக்கு ‘அடிபணிதல்’ என்றும் முஸ்லிம் என்னும்செல்லுக்கு ‘அடிபணிபவர்’ என்றும் பொருள் ஆகும். இஸ்லாம் என்பதற்கு ‘சாந்தி’ என்றும் முஸ்லிம் என்பதற்கு சாந்தமானவர் என்றும்வேறு பொருள்கள் இருக்கின்றன. மேலும் இதற்கு ஈடேற்றம் பெறச் செய்வது என்னும் பொருளும்உண்டு. இவைகளை இணைத்துப் பார்க்கும் பொழுதுஇஸ்லாம் என்பதற்கும் முஸ்லிம் என்பதற்கும் பொருள் இறைவனுக்கு சம்பூர்ணமாக அடிபணிந்துஒழுகி அதன் காரணமாக சாந்தியைப் பெற்று உலகிலும் சாந்தம், அமைதி ஆகியவற்றை நிலவச் செய்து இம்மை மறுமைகளில்ஈடேற்றம் பெறுபவர் என்பதேயாகும் என இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் விளக்குகிறது.
தொன்மை வழிபாடு
மனித இனத்தை ஒழுங்குபடுத்தமார்க்கங்கள் தோன்றுவதற்கு முன், இயற்கை வழிபாடேமுதல் நிலையிலிருந்தது. இயற்கைகையத் தன் வலிமையால்அடக்கி ஆள முற்பட்டு வெற்றி பெறும் போது மகிழ்ந்த மனித மனம், தோல்வியுற்ற போது. அஞ்சி, இயற்கையின் அதிவல்லமையைக் கண்டு வியந்து நின்றது. இவ்வியப்பே இயற்கையின் பல கூறுகளை தேவதைகளாகத் தெய்வங்களாக வழிபடவைத்தது. இவற்றின் சிறப்புக்களை எடுத்துக் கூறுமுகமாகத்தான்அறிவிற்கு எட்டிய அளவிற்குத் தத்துவங்களைத் கூறிவைத்தான்.கிரேக்கர்களும், ஜெர்மானியர்களும், ஸ்காந்த நேவியர்களும் இதே நிலையில் மார்க்கத்தை வளர்த்தனர்.
மாண்டுவிட்ட முன்னோர்களைவணங்கி வழிபாடு செய்த நிலையில் மனிதமனம் வேறு மார்க்கத்தை வளர்த்துவிட்டது. பிதிர்களைப் போற்றும் நிலை எகிப்திலும், பாபிலோனியாவிலும், சீனாவிலும்இந்தியாவிலும் இருந்து வந்துள்ளது. சீன நாட்டின்மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவமாக இன்றும்இத்தகு வழக்கம் இருந்து வருகிறது.
இறைத்தூதர்கள் + தேவர்கள்
நாம் பறவைகள் போன்றுவிண்ணிலே பறக்கக் கற்றுக் கொண்டோம். மீன்கள்நீரிலே நீந்துவது போன்று நீந்துவதற்கும் கற்றுக் கொண்டோம். ஆனால் மண்ணிலே எவ்வாறு நடப்பது என்பதுதான் நமக்குத்தெரியவில்லை என்று ஜோம் என்ற அறிஞன் கூக்குரலிட்டான். இறைவன் தன் ஆற்றலைப் படைப்புக்களாலும் கொடைத்தன்மையைஅவைகளுக்கு உணவளிப்பதாலும் அடக்கியாளுந் திறனால் படைப்புக்களை அழிப்பதாலும் மனிதனுக்குத்தொன்மைக் காலம் முதல் உணர்த்தி வந்தான். இவற்றையயல்லாம்இறைவன் செய்ததின் நோக்கம். படைப்புக்கள் தன்னை வணங்க வேண்டுமென்பதே. ஆய்ந்து பார்க்கும்
அறிவாழம் இல்லாத காலங்களில் மனிதன் தன் நோக்கத்திற்கேற்ப வழிபட்டான். மனிதன் புரியும் எந்தத் தவறையும் மன்னிக்கும் மாண்பாளனானஇறைவன், தனக்கு இன்னொன்றை இணை வைப்பதை மட்டும்பொறுத்துக் கொள்வதில்லை. அறியாமையாலும் மூடத்தனத்தாலும்மனிதன் புரிந்து வந்த வணக்க முறைகளை நீக்கி, வணங்குவதற்கு ஒரேஇறைவன் தான் உண்டு என்று எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த இறைத்தூதர்களை (நபிமார்களை)மண்ணில் அருளினான். இவ்வுலகின் எந்த பாகத்திற்கும்நபிமார்கள் அனுப்பப்படாத பாகமே இல்லை. 1,24,000 நபிமார்கள் இவ்வுலகில் வாழும் மக்களின் அஞ்ஞான இருள் நீக்க இறைவனால் அனுப்பப்பட்டார்கள். திருக் குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்கள் இறைவனால் சுட்டப்பட்டுள்ளன. நபிமார்களுக் கெல்லாம் தலைவராகவும் இறுதி நபியாகவும்முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றினார்கள்.
மனித சமுதாயம் வரம்பற்றுவாழ்ந்துவரின் இல்லாதொழிந்து விடும்.இதனைப்பாதுகாக்கவும், சீரியவழியில் நடத்தவும் வேதங்கள் இறைவனால்வழங்கப்பட்டன.இவ்வேதங்களில் இம்மைக்கும் மறுமைக்கும் உரிய வாழ்வியல் கோட்பாடுகள் வகுத்தளிக்கப் பட்டுள்ளன. இவ்வேதங்களைத் தன் நபிமார்கள் வழியாக மக்களினத்திற்கு வழங்கினான். நன்மையானவை, தீமையானவை, விலக்கப்படவேண்டி யவைகள், கடைப்பிடிக்க வேண்டியவைகள்முதலியவற்றைக் குறிப்பிட்டான். மனிதன் நல்லவற்றைச் சாரும் போது தன்னருள் கிட்டும்என்ற வாக்கையும், தீயதை நாடினால்தண்டிக்கப்படுவான் எனும் எச்சரிக்கையையும் தந்தான். இத்தகைய வாழ்வியல் அறங்களையே வேதநூல்கள் என்று குறிப்பர்.
ஹஜ்ரத் இப்ராஹீம்நபி (அலை) அவர்களுக்கு இருபது வேதப்பிரிவுகள் இறங்கின. ஹஜ்ரத் மூசா நபி (அலை) அவர்களுக்குப் பத்துக்கட்டளைகள்அடங்கிய ‘தெளராத்’ எனும் வேதம் அருளப்பட்டது. ஹஜ்ரத் தாவூத் நபி (அலை) அவர்களுக்கு ‘ஜபூர்’ எனும் வேதம் வழங்கப்பட்டது. ஹஜ்ரத் ஈசா நபி (அலை) அவர்களுக்கு ‘இன்ஜீல்’ எனும்வேதம் அருளப்பட்டது. எம்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘அல்குர்ஆன்’ இறக்கி வைக்கப்பட்டதை, ‘தன்ஜீலும் மின் ரப்பில் ஆலமீன்’ என்று இறைமறையில்இறைவன் குறிப்பிடுகிறான்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்வத்துன் ஹஸனா(மனித இனத்திற்கு அழகிய முன்மாதிரி) ரஹ்மத்துன்லில் ஆலமீன் (அகில உலகங்களுக்கும் அருட்கொடையாகஅருளப் பெற்றவர்) என்று இறைவனால் சிறப்பித்துக் கூறப் பெற்றுள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கி.பி. 571 ஏப்ரல், 20 ஆம் நாள் திங்கட்கிழமை காலை5.30மணிககு மக்காவில் பனூஹா´ம் கிளையில் பிறந்தார்கள். நாற்பது வயதில் நுபுவ்வத்தைப் பெற்று இருபத்து மூன்று ஆண்டுகள் ‘லாயிலாஹ இல்லல்லாஹு’எனும் மூலப்பொருளை உலகோர்க்கு உணர்த்தி வாழ்ந்தார்கள்.
இவர்களின் இறுதியாண்டில் இறைவன் ‘உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தைத்தேர்ந்து உங்களுக்கு அருட் செய்து அங்கீகரித்துக் கொண்டேன்’ எனும் திருவசனங்களை அருளினான்.ஆதம் நபி முதற்கொண்டு ஓர் இறைத்தத்துவம் மண்ணில் மக்களுக்கு உணர்த்தப்பட்டு வந்திருப்பினும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில்தான் பூரணத்துவம் பெற்றது. இவர்களுக்குப் பின்நபிமார்கள் தோன்றவும் இல்லை. வேதங்கள் இறைவனால்அருளப்பெறவும் இல்லை. இஸ்லாமிய உலகு அன்றும், இன்றும், எல்லோரும் ஒரேஅணியில், ஒரே குரலில், ஒரே மொழியில்,ஒரே இறைவனை, ஒரே இறைத்தூதுவரை முன்மாதிரியாகக்கொண்டு ஒரே மறையைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வுலகின் இறுதிநாள் வரை இந்நிலை தொடர்ந்து இருந்துவரும். இறைவனும் தன் திருமறையில் இஸ்லாத்தை அன்றி (வேறொரு)மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், நிச்சயமாக அவனிடமிருந்து(அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில்அவன் நஷ்டமடைத்தோரில்தான்” இருப்பான் என்று எச்சரிக்கின்றான்.
முஸ்லிம்கள்
தெளஹீதை நெஞ்சில் நிறுத்திநபிகள் நாயகம் வாழ்வையும் வாக்கையும்வாழும் நெறியாகக் கொண்டவர்களே முஸ்லிம்களாவர். முஸ்லிம் எனப்பெயரிட்டவர் இப்ராஹீம் நபி ஆவார்கள். முஸ்லிம்கள் பாவமான காரியங்களி லிருந்து முற்றும்விலகி, உண்மையாகவேஅல்லாஹ்வை ஈமான் கொள்கின்ற காரணத்தால் ‘நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களில்எல்லாம் மிக்க மேன்மை யானவர்கள்’ என்று இறைவன் குறிப்பிடுகிறான். இதனை ஓதி உணர்ந்து பீர் முகம்மது அப்பா அவர்கள்,
ஆதம்பெறு மக்க ளெல்லாத்திலும் நமை அன்பு கொண்டு
வேத நபி உம்மத்தாக்கின அந்தவொரு நன்றிக்குப்பாதங்கள் மேலும் சிரங்கீழுமாய்ப் பத்து நூறாயிரமாண்டு
ஓதித்தவம் செய்தாலும் போதாது அவன் அன்று உவந்ததற்கே என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார்.
உண்மையான முஸ்லிம் யார்? பெயரளவாலும் தோற்றப்பொலிவாலும் இறைநாமம் உச்சரிப்பதாலும்ஒருவன் முஸ்லிம் ஆகிவிட இயலுமா? இவைமட்டும் போதாது. இவை இவ்வுலகில் வாழ்ந்துவரும் மனிதர்களின் உவப்பிற்குஉரியவைகளாகும். இவற்றையா இறைவன் உவந்து போற்றுகிறான்? உறுதியாக இல்லை எனலாம். உண்மையான முஸ்லிம் வாய் திறந்து பேசுவானாகில் அதுஇறைத் தியானமாக இருக்கவேண்டும். அவன் தன் கண்களால்ஒருபொருளைப் பார்த்தால் அதில் படிப்பினை இருக்க வேண்டும். அவன் மெளனமாகஅமர்ந்திருந்தால் அவனுடய உள்ளத்தில் தூய்மையான சிந்தனை பரவிப்படிந்து இருக்க வேண்டும்.இறைவனின் படைப்பினங்களைப்பார்க்குந்தோறும் படிப்பினை பெற்றுப்பயன் அடைய வேண்டும். திருமறையின் ஏவல், விலக்கல்களை நெஞ்சில்கொண்டு, அண்ணலாரின் வாழ்வை வாழும் நெறியாகக் கொண்டு ஒழுகவேண்டும். மனதை அடக்கியாள வேண்டும்.
மனதை அன்றாடம் விசாரணை செய்ய வேண்டும். மறுமையின் விசாரணை ‘சுயவிசாரணையால் அச்சப்படும்நிலையில் இருக்காது. ஒவ்வொரு பணியையும் வெளியரங்கில்மனிதர்களும் அந்தரங்கத்தில் அல்லாஹ்வும் கண்காணித்து வருகின்றனர் எனும் அச்சம் எப்போதும்இருந்து வரவேண்டும். தன்னை மீறி மனம் தவறுசெய்யும்போது மனதைத் தண்டிப்பவனாக இருக்கவேண்டும். இத்தகைய நிலையை எய்தப்பெற்றவனே உண்மையான முஸ்லிம்ஆவான்.
முஸ்லிமானவனை இறைவன் ஏழு படித்தரங்களில் வைத்துள்ளான். முதலாவது: இதில் கலிமா, தொழுகை முதலியனஅடங்கும். இரண்டாவது ஈமான். இதில் ஈமானின் ஆறு பர்ளுகளும் அடங்கும். மூன்றாவது ஸலாஹு, இதில் ஈமான்,இஸ்லாம் ஆகிய இரண்டுடன் அச்சத்துடனும் ஆதரவுவைத்தும் வணக்கத்தை நடத்திவருவதாகும். நான்காவதாக இஹ்ஸான் (பயபக்தி)முற்கூறிய மூன்றுடன் தெளபா, இனாபதத்து, ஸுஹ்து, தவக்குல், ரிளா,தப்வீன், இக்லாஸ் முதலியன இணைந்துவரும். ஐந்தாவது ஹாதத்து (சாட்சி பகர்தல்)முற்கூறிவற்றுடன் இறைவனையே சதா சிந்திப்பதும் தியானித்தலும், கீழான எண்ணங்களைநீக்குதலும் ஆகும். ஆறாவதாக சத்தியம் (ஸித்கியா). முற் கூறியவனவற்றுடன் இல்முல்யகீன், ஐனுல்யகீன்,ஹக்குல் யகீன் அடையப்பெறுவதாகும். ஏழாவது குர்பத்து என்னும் தெய்வ நெருக்கமாகும். இந்த ஏழு படித்தரங்களைத் தாண்டினால்தான் நபிமார்களின்படித்தரங்களை அறிந்து கொள்ள இயலும். ஒரு முஸ்லிம்தன் நேரத்தை நான்காகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் பாகம் இறை சிந்தனைக்கும் இரண்டாம் பாகம் சுயசிந்தனைக்கும்மூன்றாம் பாகம் இறைவனின் படைப்புக்கள் பற்றிய சிந்தனைக்கும் நான்காம் பாகம் உணவு உறக்கத்திற்கும்அமைய வேண்டும். இம்முறையில் தன்வாழ்நாளின்நேரத்தை நெறிபடப் பிரித்துக் கொள்ளும் போது, உண்மையான ஞானம் கைவரக்கூடும் வாழ்நாள் முழுமையும் ஜடப்பொருளென. வாழ்ந்து மடிதல் மனிதப் படைப்பின்பயனல்ல. பொழுதுகளைப் புலன்வழிக் கழிப்பதோ, குறிக்கோளின்றிக்கழிப்பதோ ஒரு முஸ்லிமின் வாழ்நெறியல்ல. ஒவ்வொருஅசைவிற்கும், எண்ணத்திற்கும் சொல்லிற்கும் செயலுக்கும் மறுமையில்விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் இறைவன் முன் நிற்க வேண்டியுள்ளது எனும் ஆழிய சிந்தனை,நம்பிக்கை உள்ளத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.
மெய்ஞ்ஞானம்
எவருடைய இருதயத்தை இஸ்லாத்தை அடைவதற்கு அல்லாஹ் விசாலப்படுத்தியிருக்கிறானோஅவர் (அதனால்) தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார் என்று அல்குர்ஆன் வாக்களிக்கிறது.
(இன்ஷா அல்லாஹ் இன்னும் வழங்குவோம்.)