• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Apr 2012   » ஹதீஸ் பக்கம்


ஹதீஸ் பக்கம்


 

ஆலிம் புலவர்,

 

ஒரு விச­யம் நல்லதா கெட்டதா என்பது தெரியவேண்டுமானால் இஸ்லாம் அந்த வி­சயத்தில் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்து விடும்.  குறிப்பாக உடல் நலம்பற்றி, அறிவியல் முடிவுகளைப்பற்றியயல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களும் இந்தக் கண்ணோட்டத்தால் பயன் பெறுகிறார்கள்.


ஒரு தடவை,மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாராயணன், பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் போன்றோர்.  “மனிதனின் சிறுநீரைக் குடிப்பது நோய் நீக்கும்  என வாதிட்டுதாங்கள் தினமும் அதனைப் பருகிவருகிறோம்” என்றும் பேட்டியளித்தார்கள்.  அந்த நாளில் இந்த விச­யம் பெரிதாகப் பேசப்பட்டு, இது நலமாதீங்கா? என பத்திகைகள் சூடாக விவாதித்துக் கொண்டிருந்தன. 


இதுபற்றி டாக்டர் கலைஞர் அவர்களிடம் கேட்டபோது அவர் அழகாக இப்படிச்சொன்னார். “இஸ்லாம் - முகமது நபிகள் - அதனை நஜீஸ் - அசுத்தம் என முடிவு செய்து விட்டார்கள். அதற்கு மேல்  அது பற்றி விவாதிக்கத் தேவையில்லை”  என்று.


இது போன்ற இன்னொரு விச­யம் தான் நாய் வளர்ப்பு பற்றியது.  இஸ்லாம் எதை எதை எங்கெங்கே வைக்க வேண்டுமோ அதை அதை அங்கங்கே வைக்கச்சொல்கிறது.  காவலுக்கு நாய் வைத்துக் கொள்ள அனுமதித்த இஸ்லாம்கட்டில் வரை அதை அனுமதிக்க அனுமதி மறுக்கிறது.


இன்று  இந்த செல்லப்பிராணி- இல்லப் பிராணியாக மாறி - கடைசியில் அது இல்லாமல் ரிலாக்ஸ் கிடைக்காது என எண்ணும் உள்ளப் பிராணியாக- தொல்லைப் பிராணியாக மாறிவிட்டது. விளைவு?


அதன் கிருமிகளினால் மனிதர்களுக்கு பாதிப்பு! கொடிய ரேபிஸ் நோய்!


நாய்க் கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பத்திரிகைகளில் செய்திகள்வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து மருத்துவர்களின் எச்சரிக்கையும் ஆலோசனைகளும் பதிவுசெய்யப்படுகிறது.


சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த செய்தி!


உலக சுகாதார  அமைப்பில் ரேபிஸ் நோய் ஆலோசகராக உள்ள மதுரை மூளை நரம்பியல் சிகிச்சை மருத்துவர் வி.நாகராஜன் கூறியதாவது:


நாய் மட்டுமல்ல, எந்த மிருகம் கடித்தாலும், கீறினாலும் ரேபிஸ் கிருமி நரம்பு வழியாக தண்டுவடத்திற்குச் செல்லும். பின், மூளைக்குச்சென்று முகுளம்  நடு மூளையில் சுவாசிக்கத் தூண்டும் நரம்பை பாதிக்கும். நினைவுகளைக் கொண்ட மூளைப் பகுதியைப் பாதிக்காது. மிருகங்களின் வாயில்கூட ரேபிஸ் கிருமி ஒட்டியிருந்து ஆபத்தை ஏற்படுத்தும்.


கடிபட்ட இடத்தில் உடனடியாக சலவை சோப்பால் கொட்டும் குழாய் நீரில்15 முறை திரும்பத் திரும்ப கழுவ வேண்டும். இதனால் 98 சதவீதம் ரேபிஸ் கிருமி இறக்க வாய்ப்புண்டு.  பின் கடியின் தன்மையைப் பொறுத்து மூன்று முறை அல்லதுஅதற்கு மேல் தடுப்பூசி போடவேண்டும். (செய்தி: தினமலர்.)


இங்கே நாம் கவனிக்கவேண்டிய செய்தி, இத்தகைய கொடிய நஜீஸை ( அசுத்தத்தை ) எப்படிநீக்குவது என ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே அண்ணலார் அறிவித்துவிட்டார்கள்.  அந்த அறிவுறுத்தலின்படி மத்ஹபு வகுத்த இமாம்கள்தெளிவான சட்டங்களையும் இதற்கு வகுத்தளித்திருக்கிறார்கள்.

ஒரு நாய் பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் ஹனஃபி மத்ஹபின் வழிகாட்டலின்படி  மூன்று முறை கழுவவேண்டும்.


ஷாஃபி மத்ஹபின் வழிகாட்டலின்படி    ஆறு  முறைகழுவி விட்டு ஏழாவது முறை கடல் உவர் மண்ணால் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். கடல் உவர் மண்ணிற்கு கொடிய கிருமியை அழிக்கும் ஆற்றல் இருப்பதை இமாம்கள் கண்டுபிடித்திருப்பது விந்தையல்லவா?