பூரணமான அறிவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்!
29.10.95 ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி தியாகி, ஜனாப் S. சிராஜுத்தீன் B.Sc. அவர்கள் இல்லத்தில் நடைபற்ற ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில் - குத்புஸ்ஸமான் ஸம்ஸுல் வுஜூத் ஜமாலியா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் அருளிய ஆன்மீகச் சொற்பொழிவு.
(உரைத் தொகுப்பு : ஆஷிகுல் கலீல் )
பிஸ்மில்லாஹ் வல்ஹம்து லில்லாஹ்.வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ். (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).
எமது அன்பிற்குரிய முரீத்களே... பக்தர்களே... இங்கு பலரும் கூடி நல்லவிசயங்களைக் கேட்க ஆவலோடு கூடியிருக்கிறீர்கள். இதுவரை உங்களுக்குக் கூறப்பட்ட விசயங்கள் மிகச் சிறந்த முறையில் அமைந்திருந்தன. எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையை எவ்வாறெல்லாம் பின்பற்றவேண்டும் என்பதனைப் பற்றி பிள்ளை (மதுரை) ஜின்னா கூறினார்கள். இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயமாகும். எமது முரீத்களுக்கு முக்கியமானதாகும்.
மனிதர்களின் நிலை!
எனவே,வாழ்க்கை முறை என்பது பலவகைப்படும். பொதுவாகச் சொன்னால், மனிதன் பிறக்கிறான்; சாப்பிடுகிறான்; இறந்து விடுகிறான்! அம்மனிதன் தான் எதற்காகப் பிறந்தோம் என்பதனை அறியாமல் இறந்து விடுகிறான். இன்னும் சிலர் தாங்கள் உண்மையை விளங்கிக் கொண்டோம் எனக் கூறிக் கொண்டு அதற்கு மாற்றமாக நடந்து கொள்கின்றனர்.
இன்னும் சிலர் தாம் பிறந்த தாற்பரியம் என்ன? நோக்கம் என்ன? என்பதனை அறிய வேண்டும் என்னும் ஆசையினால் உந்தப்பட்டு பல இடங்களுக்குச் சென்று - பல விசயங்களை யறிந்து அவர்கள் எவ்வளவோ கற்று மனித இனம் சம்பந்தப்பட்ட விசயங்களை அறிந்து தாம் பிறந்த தாற்பரியத்தை விளங்கிக் கொள்கிறார்கள். அந்தத்தாற்பரியத்தை அறிந்தும் அடைந்தும் மறைகிறார்கள்.
எனவே பிறப்பிற்கும் இறப்பிற்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு.
இறப்பதும் - மறைவதும்!
இறப்பவர்கள் தங்கள் உண்மையை அறியாமல் இறக்கின்றனர். மறைபவர்கள் - அவர்களுக்கு மறைவு இல்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் தாற்பரியத்தை அறிந்தவர்கள். எனவே, இந்நிலையில் தான் நாம் ஒரு சிலரைப் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகின்றது. அவற்றிலே ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றியவர்கள் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது விசயத்தில் விளக்கத்தைத் தெளிவாக அறிவதற்காக தலைவர்களை (ஷைகுமார்களை) அடைந்து, அவர்கள் மூலமாக அதிகமான நன்மைகளைப் பெற்று உள்விளக்கங்களை அறிந்துவாழ்ந்து மறைபவர்களும் உண்டு.
முறையோடு வாழ்பவர்கள் யார்?
இவ்வகையான கூட்டத்தார்களிலே வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் உண்டு.
ஒரு பகுதியினர் எதைச் செய்தாலும் சரி; எப்பாபத்தைச் செய்தாலும் சரி எனும் முடிவோடு போவோரும் உண்டு. இன்னொரு பகுதியினர் அப்படியல்ல. நாங்கள் எப்படி வாழ வேண்டும்? அதற்கு ஒரு முறை இருக்கின்றதல்லவா? ரஸூல் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் முறையை அமைத்திருக்கிறார்கள் அல்லவா? அந்த முறையின்படி நடந்தால் நமக்குநன்மை கிடைக்குமல்லவா? எனும் உண்மையான கருத்துக்களை ஆராய்ந்து அதன்படி நடக்கின்றனர்.
நேர்மைக்கோர் உதாரணம்!
மனித வாழ்வில் மனிதனுக்கு மிக முக்கியமானது நேர்மையாகும். ஒருவரிடம் ஓர் ஏழை வருகிறார். ஒரு ‘கைலி’ யை இனாமாகக் கேட்கிறார். உடனே அம்மனிதர் உபயோகமற்ற - பழைய - கந்தலான கைலியைஎடுத்துக் கொடுத்து விடுகிறார்! இது ஒரு வகையில் அவரை ஏமாற்றுவது தான்! இஃது நேர்மையல்ல!
அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அவர் பாவிக்கக் கூடிய உபயோகிக்கக் கூடியகைலியைக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது அக்கைலியின் தன்மையை எடுத்துக் கூறி அதனை அவர் (ஏழை) விரும்பினால் எடுத்துச் செல்லும்படி கூறியிருக்கவேண்டும். இதுதான் நேர்மையாளர்கள் நடந்து கொள்ளும்முறையாகும்.
நேர்மையான வியாபாரம் வேண்டும்!
கடைகளில் சில பொருட்களை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து குறைகளை மறைத்துவிற்கிறார்கள். பொருட்களை வாங்கியவர் வீட்டிற்குச்சென்று குறைகளைக் கண்டு கடைக்காரரிடம் திரும்பக் கொடுத்தால் - வியாபாரி வாங்குவதில்லை. இவ்விசயத்தில் கடைக்காரர் செய்தது நேர்மையல்ல.
நேர்மையின் அவசியம்!
நேர்மை, நீதம் மனிதர்களுக்கு மிக முக்கியம். மிகமிக முக்கியமாக
அமுத மொழிகள்
நமது முரீத்களிடம் நேர்மையும் மற்றமற்ற நல்ல குணங்களும் இருக்க வேண்டும்.நேர்மை எல்லா விசயத்திலும் அமைந்திருக்கின்றது. நேர்மையுள்ளவன் ஒரு பாபத்தைச் செய்ய விரும்பமாட்டான். ஒரு பொய்யைச் சொல்ல விரும்பமாட்டான். நேர்மைக்குப் பொருத்தமற்ற எந்தவொரு செயலையும் செய்யவிரும்பமாட்டான்.
பொருத்தமற்ற செயலை வெறுத்தொழிக்கவேண்டும்!
அடுத்து - ஒரு முரீதானவர் தனது ஷைகின் வார்த்தையைப் பின்பற்றி அப்படியேநடக்க வேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம். அவ்வாறில்லாமல் அதற்கு மாற்றமாக நடப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
ஆகவே, முதலாவதாக மனிதன் நேர்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.கோபமுள்ளவனாக இருக்கக் கூடாது. ஒருவருக்குப் பொருத்தமில்லா கொடிய செயலைச் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. பொருத்தமில்லாததை விட்டுவிட வேண்டும்.
பொருத்தமற்ற செயலை மேற்கொண்டு அதில் வெற்றி பெறுவதாக நினைத்துக் கொண்டு- அல்லாஹ்விற்குப் பொருத்தமானதைத் தான் செய்கின்றேன் என எண்ணுவாரேயானால் அவரை முஸ்லிம் என்றே சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு சகோதரர் இன்னொரு சகோதரனுக்கு அநியாயம் செய்தல் கூடாது என்பது ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையாகும்
முஸ்லிம்கள் பேண வேண்டிய வழி முறைகள்!
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரன். ஒரு சகோதரனுக்கு அநியாயம் செய்ய விரும்பக் கூடாது. அவ்வாறு (அநியாயம்) செய்வானேயானால் அவனை - ‘ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றியவன்’ - எனக் கூறவியலாது. ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்? என்பதனையறிந்து அதனைப் பின்பற்றி நடப்பது தான் முஸ்லிமுக்கு மிக அவசியமாகும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நாவாலோ செயலாலோ துன்புறுத்தக்கூடாது. முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கவேண்டும். பிறரைத் துன்புறுத்துவது கொடிய பாபமாகும். ஒரு கொலையைவிட மோசமாகும். ஒரு சித்ரவதை செய்வது போன்றாகும்..
நேர்மையே முரீத்களின் இலட்சணம்!
இவ்வகையில் - எம் முரீத்கள் எது தியாகம்?எது நியாயம்?எது நேர்மை? எது உண்மை? என்பதனை உணர்ந்துதான் எந்தவொன்றையும் செய்தல் வேண்டும். அப்படியின்றி- (நேர்மைக்கு) மாற்றமாக நடந்தால் அவர்களின் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற இயலாது.
இவ்வாறு சிலர் நேர்மையற்ற செயலைச் செய்துவிட்டு ‘தங்களை பெரியவர்களாக’ கருதிக் கொள்கிறார்கள்; அவர்கள் ஜெயம் பெற்றவர்களல்லர்.
எமது முரீத்களுக்கு நாம் சொல்லக்கூடிய முக்கியமான வார்த்தைகள் இவைகள்தாம்!
நாம் அனுதினமும் ஓதிவரும் திருவசனம்!
நமக்கு மத்தியில் பேசிய பிள்ளை அப்துஸ்ஸலாம் ஆலிம் அவர்கள் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ் வல்லதீன மஅஹு அ´த்தாஉ அலல் குய்ப்பாரி ருஹமாஉபைனஹும்” எனும் திருமறை வசனத்திற்குக் கருத்து கூறினார்.
இவ்வசனத்தைத் தான் நாம் அனுதினமும் காலையில் ஓதி வருகிறோம். அப்போது நமது முரீத் பிள்ளைகளையும் நினைத்துக் கொள்கிறோம்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - அதாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்.
வல்லதீன மஅஹு: ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனே இருப்பவர்கள்- அதாவது ஸஹாபாக்கள்.
அ´த்தாஉ அலல் கு(ய்)ப்(ய்))பாரி; கு(ய்)ப்(ய்)பார்களிடம் மிகக் கடுமையாகவிருந்தார்கள்.
கு(ய்)ப்(ய்)பார்கள் என்றால் யார்?
அல்லாஹ்விற்கு மாற்றமாக நடப்பவர் எவராயிருப்பினும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாற்றமாக நடக்கக் கூடிய எவராயிருப்பினும் நாம் கு(ய்)ப்(ய்)பார்கள் என்று தான் கூறுவோம். அவர்களை ஈமான் உள்ளவர்கள் எனச் சொல்ல முடியாது.
ஸஹாபாக்களின் நிலை எவ்வாறிருந்தது?
எந்நேரமும் கு(ய்)ப்(ய்)பார்களிடம் கடுமையாகவேயிருந்தார்கள்.எந்த நேரம் போர் வந்தாலும் எதிரிகளை வெட்டி வீழ்த்தினர்.
ருஹமாஉ பைனஹும் :
அவர்களுக்கிடையில் கிருபை உடையோராகவும் அன்புடை யோராகவு மிருந்தார்கள்.
அப்படியானால்.. எமது முரீத்கள் எப்படி இருக்க வேண்டும்? (ஸஹாபாக்கள் போன்று)எமது முரீத்களும் தங்களுக்கு மத்தியில் கிருபையுடையோராகவும் இருத்தல் வேண்டும்.
அனைவர் மீதும் அன்பு பாராட்டுங்கள்!
ஒருவர் முஸ்லிமாக இருந்தால் அவருக்கு உதவி செய்ய வேண்டும்; முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அவர் நண்பராக இருக்கக் கூடும் - அவரிடமும் அன்பாகவே பழக வேண்டும். எனவே,ருஹமாஉ பைனஹும் என்பது தான் மிக முக்கியமாகும். இந்த வசனத்தின் தொடர்ச்சியாக இறை கூறுகிறது:
தராஹும் ருக்கஅன் ஸுஜ்ஜதன்: அவர்களை ருகூஉ செய்பவர்களாகவும் ஸஜ்தா செய்பவர்களாகவும் நீங்கள் காண்பீர்கள்!
அதாவது - தொழுபவர்களாக - அல்லாஹ்விற்குப் பயந்தவர்களாக அவர்களைக் காண்பீர்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டவர்களாகக்காண்பீர்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தான் எமது முரீத்கள் இருக்க வேண்டும். மேலும் யப்தகூன ஃபளுலன் மினல்லாஹி வரிளுவானா; பொருத்தத்தையும்சிறப்பு வரிசையையும் அல்லாஹ்விடத்தில் தேடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலைதான் எமது முரீத்களுக்கும் மிக முக்கியமாகும். முஹம்மதுர் ரசூலுல்லாஹ் எனத் தொடங்கும் திருமறை வசனத்தை பிள்ளை அப்துஸ்ஸலாம் கூறும் போதே அதன் கருத்தைவிரிவாகக் கூற வேண்டும் என நினைத்தோம்.
இத்திருவசனம் மிக அழகாக நேர்த்தியாக எங்களுக்காகவே கூறப்பட்டதாகவே உணர்கின்றோம்.
இதுவரை... பொதுவாக எமது முரீத்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைப்பற்றிக் கூறினோம்.
அடுத்தபடியாக....
நாம் சொல்லிக் கொண்டிருக்கும் தவ்ஹீத்... எதுதான் பிழை? எது தான் தவறு?(எல்லாமே சரியானவை தாம்).
நாம் சொல்வதெல்லாம் உண்மையே!
எங்கள் பாட்டனார் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்கள்கூறிய அனைத்து விசயங்களையும் தாம் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். சங்கைமிகு எங்கள் வாப்பா (குத்புல் அக்தாப் ஜமாலியாஸய்யித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய்) நாயகம் (ரலி) அவர்களின் ரிஸாலாகெளதிய்யாவில் என்னவெல்லாம் கூறப்பட்டனவோ அவற்றையேதாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இவ்விசயங்கள் சில பிள்ளைகளிடம் பரீட்சிக்கப்படுகின்றன. அட்வகேட் லியாகத் அலியிடம் ஒரு பரீட்சை நடந்திருக்கின்றது. எங்கள் வாப்பா நாயகம் (ரலி) பரீட்சை நடத்தியிருக்கின்றார்கள். இன்னொருவரிடம் இன்னொரு பரீட்சை நடத்தியிருக்கிறார்கள். இவ்வாறு பிள்ளைகளிடம் கேட்கப்பட்டபோது எமது முரீத்கள்சரியான பதில்கள் தருகிறார்கள்.
அவற்றைக் கூறியவுடன் எமது தந்தை நாயகம் (ரலி) அவர்கள் மிக சந்தோமடைந்து - இங்கு நடைபெறும்வியங்கள் (நாம் போதித்து வரும் விசயங்கள்) உண்மையானவையே என்பதனை எமது தந்தை நாயகம் (ரலி) அவர்கள் உணர்த்தி வருகிறார்கள்.
உண்மையாக எந்த வழியும் தவறிப் போகவில்லை. நாங்கள் சரியான பாதையில் தான் நடந்து கொண்டிருக்கிறோம். இது தான் உண்மை!
உண்மையைத் தவிர வேறில்லை!தவ்ஹீத் சம்பந்தமாக நாம் கூறுவது சரி எனக் கருதினால் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘பிழை’ எனக் கருதினால் வெளியேறி விடுங்கள்.அறிந்த, அனுபவித்த அனைத்தையும்வெளியிடுகிறோம்!
சிலர் ஏமாற்றுவர், சிலர் சொல்லமாட்டார்கள்! நாங்கள் அப்படியல்ல. எமக்குத் தெரிந்த அவ்வளவும், நாம் எந்தெந்த நிலையில் இருக்கின்றோமோ அந்தந்த நிலைகளையும், அந்தந்த நேரங்களில் முரீத்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம்.
எனவே எல்லாப் பிள்ளைகளும் “தவ்ஹீத்” உடைய இல்மை - அறிவை கற்றவர்களாகஇருக்க வேண்டும். தொழில் தான் முக்கியம் எனக்கருதி விடக் கூடாது.
நாம் அறிய எல்லாப் பிள்ளைகளும் தவ்ஹீதை விளங்க ஆர்வமுடையோராக இருப்பதைக்காண்கிறோம்.
ஆரம்ப காலத்தில் திண்டுக்கல்...!
நமது பிள்ளைகள் தவ்ஹீதையே தமது வாழ்வாக எடுத்து வந்தார்கள். நாம் முன்பொருமுறை திண்டுக்ல் சென்றிருந்த போதுஎமது முரீத்கள் முதலாளி (வீ.லு. ஷாகுல் ஹமீது) ) S.காஜா நஜ்முத்தீன். P.K.S.குத்புத்தீன் போன்றோர் ஒரு நூலைப் பார்த்து பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்நூல் ‘ஹகாஇகுஸ்ஸபா’என்பதை அறிந்தோம். அந்தப் பிள்ளைகள் எவ்வளவு ஆர்வமாக தவ்ஹீதை விளங்க முயல்கிறார்கள் என்பதையும் கண்டோம்.
இன்று மதுக்கூர் - துபை!
அதைப் போல் இன்று மதுக்கூர் மற்றும் துபையில் உள்ள முரீத்கள் எந்தஅளவு தவ்ஹீதை விளங்க ஆசையோடும் - ஆவலோடும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
மதுக்கூர் - துபை முரீத்கள் தங்கள் தொழிலோடு தவ்ஹீதையும் இணைத்து வாழ்கிறார்கள்.
எந்த நேரத்திலும் தவ்ஹீதைத் தான் பேசி வருகின்றனர்!ஆகவே இஃது மிகுந்த சந்தோமான விசயமாகும்!
எல்லாப் பிள்ளைகளும் இதனைப் பின்பற்ற வேண்டும்! என்னென்ன விசயங்களை அறிய முடியுமோ அவற்றைஅறிய வேண்டும். அதற்கு வயது வரம்பில்லை! ஒருசிறிய பிள்ளைக்குச் சக்தியிருந்தால் அறிந்து கொள்ளலாம். ஆசையிருந்தால் யாரும் தவ்ஹீதை அறிந்து கொள்ளலாம்!
இவற்றையயல்லாம் அறிந்து முரீத்கள் தவ்ஹீதடைய இல்மை (ஞான அறிவை) விளங்கிக்கொள்ளல் வேண்டும்.
ஞான மார்க்கம்!
அட்வகேட் லியாகத் அலி கூறியது போல் ஞான மார்க்கத்தில் செல்லும் போது நாஸ்திகர்களாக ஆகிவிடக் கூடாது. எதனையும் ஆராய்ந்தறிய வேண்டும்.
ஆராய்ச்சி என்னும் படியில் சந்தேகமிருப்பின் கேட்டு நிவர்த்தி செய்து ஆஸ்திகத்தில் இருக்க வேண்டும்.ஆஸ்திகம் என்பது - ஹக்கு ஒன்று என்பது தான்.
எல்லாம் அது தான் எனச் சொல்லும்போது தனியாக ஒரு பொருளை விளங்கக் கொள்ளக் கூடாது.
ஹக்கின் தாற்பரியம்!
எல்லாமே அது (ஹக்கு) தான். அந்த மேஜையும் அது தான்! ஆனால் இதனைஅல்லாஹ் எனக் கூற முடியுமா? இதனை வணங்க முடியுமா? முடியாது. இஃது அதில் (ஹக்கில்) ஒரு பகுதி தான்! இருப்பினும் அதனை (மேஜையை) வணங்க முடியாது. ஏனெனில் இதற்குமேஜை (Table) என்று பெயர்!
நாம் அமர்ந்திருப்பதற்கு (Chair) ‘நாற்காலி’ என்று பெயர். எனவே (பகுதி பகுதிகளான) மேஜையையோ நாற்காலியையோ இவை போன்ற குறிப்பிட்ட பொருளைமட்டுமோ இறையயனக் கருதி நாம் வணங்க முடியாது.
நாம் பரிபூரணமான ஒன்றிற்கு வணங்குகின்றோம். எல்லாம் சேர்ந்த ஒன்று தான் அது (ஹக்கு). இதிலும் ஷிர்க் (இணை வைத்தல்) உண்டாகும்! எப்படி?
எல்லாம் ஒன்று எனச் சொல்லும்போது பரிபூரணமாகின்றது. எல்லாமே சேர்ந்ததிலே இஃதும் ஒன்று தானே? என வேறுபடுத்திப் பார்க்கும் போது ஷிர்கு உண்டாகின்றது.
அடுத்து - ஒன்றுமேயில்லை...!
ஒன்றுமேயில்லை என்பது தான் முடிவு. நாம் முன்பொரு முறை கூறியது போல் றீஉஷ்eஐமிஷ்விமிவி எனும் விஞ்ஞானிகள்பூமியில் தேடுகிறார்கள்... கடலில் தேடுகிறார்கள்... தேடித் தேடி - ஆகாயம் சென்று அங்கும்தேடி ‘ஒன்றுமே இல்லை’ எனும் முடிவுக்கு வருகின்றனர். அவர்கள் ஒன்றுமே இல்லை எனச் சொல்லக் கூடிய ‘ஒன்று’தான் உள்ளது என நாம் கூறுகிறோம். ஒன்றுமேயில்லைஎன்று கூறிவிட்டால் நாஸ்திகத்தில் கொண்டு விட்டு விடும்.
எதைத் தான் நீ ‘இல்லை’ என்கிறாயோ அதனையே ‘உண்டு’ என்கிறோம்.
இதுதான் ஆஸ்திகம் ஆகும்.
இந்த வகையில் பூரணமான அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஷரீஅத் மிகவும் முக்கியமாகும்!
தவ்ஹீதுடைய இல்மை (ஞான அறிவை) கற்றுக் கொள்வது போல் ஷரீஅத்துடைய விசயங்களையும் அறிந்து அவ்வாறுவாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வெறுமனே சரித்திரங்களைக் கதைப்பதாலும் படிப்பதாலும் மிகுந்த புண்ணியமொன்றுமில்லை.ஒரு ஷெய்கு என்ன சொல்கிறாரோ அதன்ப்டி நடந்தாலே போதுமானது.
முத்துக்கள் பத்து போதும்!
ஒரு ஷெய்குக்கு மாற்றமாக நடந்து விடாதீர்கள். அவ்வாறு மாற்றமாக நடந்தவர்கள் தூக்கியயறியப்பட்டார்கள்.
எல்லா ஷெய்குமார்களிடமும் இது போன்று நடைபெற்றுள்ளது. நேர்மையற்றோர் எங்கள் சபைக்கே பொருத்தமற்றோராவர். அப்படிப்பட்டோர் எத்தனை பேர் இருப்பினும் வெளியேற்றி விடுவோம்!.உண்மையை நேர்மையாக விளங்கக் கூடிய பத்துப் பேர் எங்களுக்கு இருந்தால்போதுமானது.
உண்மையே மேன்மை!
ஆகையால்,உண்மை மிக முக்கியம். பொய் பேசாதீர்கள். சிலரின் ஸிஃபத் (குணாதிசயம்) பொய். உண்மையைச் சொல்லுங்கள். ஏன் பொய் சொல்ல வேண்டும்?
சத்தியமே ஜெயம்!
எங்கள் பாட்டனார் கெளதுல் அஃளம் (ரலி) அவர்கள் சிறிய வசயதில் கள்ளர் கூட்டத்தில் சிக்கிய போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொற்காசுகளை மறைக்காமல் - உண்மையைச்சொன்னதால் ஜெயம் அடைந்தார்கள்.
ஓர் உண்மை எத்தனை பேருக்கு ஈமானை - இறை நம்பிக்கையை அளித்தது என்பதனை உற்றுணர்ந்து பாருங்கள். உண்மையைச் சொல்ல வெட்கப்பட்டால் நீங்கள் அக்காரியங் களைச்செய்ய மாட்டீர்கள். எனவே உண்மையைப் பேசுங்கள்.எப்போதும் பொய் சொல்லமாட்டேன் என்பதனை மனதில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
‘பொய்’ என்பது என்ன?
ஒரு வியாபாரி உண்மையாகத் தான் வாங்கிய பொருளின் விலையைக்கூறினார்.அதனைவிடக் குறைவாகவே மக்கள் விலை கேட்டனர். அதனால் வியாபாரி தான் வாங்கிய விலையை விட கொஞ்சம்கூடுதலாக விலை வைத்துக் கூறுவது பொய் அல்ல. அது வியாபாரம். பொய் என்பது - அல்லாஹ்விற்குப்பொருத்தமில்லாத கடும் பொய் கூறி ஒருவரை மோசடி செய்வது.
இப்படிப்பட்ட தீய குணமான ‘பொய்’ கொடிய பாபமாகும். அதனை விட்டுத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
தியாகம் என்பது என்ன?
அனைவரும் தியாக மனப்பான்மையோடு நடந்து கொள்ள வேண்டும். நிறைய பணத்தைவந்து கொட்டுவது தான் தியாகம் என நினைத்துக் கொள்ளாதீர்கள்.
தியாகம் என்பது (முரீத்களைப் பொருத்த வரை) உயிரையும் ஷெய்கிற்காகத் தருவேன் எனும் நிலைக்கு வருவதுதான். ஷெய்கு என்ன சொன்னாலும் அதனை அப்படியே பின்பற்றுவேன் எனும் நிலைக்கு வருவது தான்தியாகம்!
பெருமைமிக்க ஸஹாபாக்கள்!
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணிக்கும் நிலையில் வாழ்ந்த அருமைமிக்க கலீபாக்கள் ஹள்ரத் அபூபக்ர் ஸித்தீக்(ரலி) ஹள்ரத் உமர் (ரலி) ஹள்ரத் உதுமான் (ரலி) ஹள்ரத் அலி (ரலி) மற்றம் ஏனைய பெருமைமிக்கஸஹாபாக்கள் போன்று உங்கள் நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இஃது ஒரு பொது நியதி!
இந்த நிலை எமக்கு மட்டுமன்று! எந்தெந்த ஷைகுமார்கள் இருக்கிறார்களோஅவர்களின் முரீத்களும் தங்களின் ஷெய்கிடம் இந்நிலையில் இருந்தால்தான் ஜெயம் பெறமுடியும். அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான். அல்லாஹ் எங்குமுள்ளான்; உங்களிலு முள்ளான் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வீர் களாயின் நீங்கள் உண்மையாய் நீதியாய் நடந்து கெள்வீர்கள்! இவைகள் தாம் மிகவும் முக்கியமானவை!!
துஆ
எல்லா நன்மைகளும் நல்வாழ்வும் உங்களுக்குக் கிடைக்கவும் உங்கள் குடும்பத்தாரின்ஹயாத் நீடிக்கவும் தொழில் சிறக்கவும் சுகவீனங்கள் நீங்கவும் பரிபூரண அல்லாஹ்வை வேண்டிநிறைவு செய்கிறோம்.