• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Apr 2012   »  மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


தமிழகத்து வலிமார்கள்.


மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி.  திருச்சி


 

அல்லாமா மாப்பிள்ளைலெப்பைஆலிம் அவர்கள் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து எப்போதும் ஓதிவரும் வகையில் ஒரு சிறப்பான மெளலிதை அரபியில் கோர்வை செய்து அதற்கு “மின்ஹத்துஸ்ஸரந்தீப் ஃபீ மவ்லிதில் ஹபீப்” எனும் பெயர் சூட்டினார்கள்.

ஒரு சமயம் அப்பா அவர்களுக்கு அலகுக்கட்டு நோய் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். எவ்வளவோ மருந்து செய்தும் அது குறையவே இல்லை. அப்போது அவர்கள் அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைத் திருப்பேரர்களான இமாம் ஹஸன் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் பொருட்டால் தமக்கு நலன் எற்பட வேண்டுமென வேண்டிக்கொண்டு அவர்களின் பெயரால் ஒரு மவ்லிதை எழுதத் தொடங்கினார்கள்.  அப்படிஅவர்கள் எழுதி வரும்போது “பஸ்ஸிரன்னீ வ ஆஃபானீ” எனும் வரியை எழுதியதும் திடீரென அவர்களுக்கு சுகம் ஏற்பட்டுவிட்டது.  சுப்ஹானல்லாஹ்! இந்த மவ்லிதை அவர்கள் இயற்றியதால் அவர்களுக்கு “மாதிஹுஸ் ஸிப்தைன்”  என்ற புகழ்ப் பெயர் வழங்கலாயிற்று.

இதுதவிர இவர்கள்அரபியில் இமாம் ஷாஃபியீ (ரஹ்,) கெளதுல்அஃலம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி), இமாம் அபுல்ஹஸன் ஷாதலி (ரலி), செய்யிது முஹம்மது புகாரீ தங்ஙள் (ரஹ்),செய்யது காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி), ஏர்வாடிசெய்யிது இப்ராஹீம் ­ஹீது (ரலி), காயல்பட்டினம்தைக்கா சாஹிபு (ரஹ்), கீழக்கரை தைக்கா சாஹிபு (ரஹ்), இலங்கை அலுத்காமத்தில் அடங்கப் பெற்றுள்ள முஹம்மது ஹஸன் (ரஹ்) ஆகியோர் மீதும்புகழ்ப்பாக்களும் இரங்கற் பாக்களும் இயற்றியுள்ளார்கள்.  இவர்கள் கெளதுல் அஃலம் (ரலி) அவர்களைப் பற்றி எழுதிய புகழ்ப்பாவில் தாம் துன்புற்ற வேளைகளில் அவர்கள் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.  மேலும் தொண்டியில் அடங்கப் பெற்றுள்ள குதுபுஸ்ஸமான்ய­ய்கு அபூபக்கர் வலீ அவர்கள் மீது ஒரு மெளலிதும், பாசிப்பட்டினம் நெய்னா முஹம்மது ஒலியுல்லாஅவர்கள் மீது ஒரு மெளலிதும் இயற்றியுள்ளார்கள். தொண்டியின் பக்கத்தில் உள்ள முத்துராமலிங்கப்பட்டினம் என்ற சின்னவலசைப் பட்டினத்தில் அடங்கப் பெற்றுள்ள செய்யிது முஹம்மதுஒலீ அவர்கள்மீதும் ஒரு மெளலிது இயற்றியுள்ளார்கள்.  அதில் அந்த இறைநேசச் செல்வர் அவ்வூரை ஆண்ட அரசன்மீது கோபமுற்று   மண்மாரி பெய்யுமாறு சபிக்க அவ்வாறே மண்மாரி பெய்த வரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள்.  இன்னும் அவ்வூரின் எதிரில் உள்ள பகுதிக்கு ‘மண்மழை’ கரை என்ற பெயர் வழங்கப்பட்டு வருவது அந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

முஸ்லிம்கள் திங்கள் வெள்ளி இரவுகளில் ஓதி மகிழும் வண்ணம் எழுதிய “ராத்திபத்துல் ஜலாலியா” மிகப் பிரபல்யமானதாகும். இன்றுவரை இந்த ராத்திப் மஜ்லிஸ் அனேக ஊர்களில்  பள்ளியில் வெகு சிறப்பாக ஓதப்பட்டு வருவதை அனைவரும் அறிவர். அப்பா அவர்கள் தமது பெற்றோர்கள் மீதும் அரபியில் இரங்கற்பா இயற்றி  உள்ளார்கள்.

 

அப்பா அவர்களின் தந்தையார் ஹிஜ்ரி 1262 ஆம் ஆண்டிலும் அவர்களின் தாயார் ஹிஜ்ரி 1298 ஆம் ஆண்டிலும் இறப்பெய்தினார்கள்.  அப்பா அவர்களின் அன்னையார் “முஸப்பஆத்து அஷ்ர்” எனும் விர்தை ஓதி வந்துள்ளார்கள்.  அதன் விரிவுரையில் கூறியுள்ளபடி அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அவர்களுக்கு சுவர்க்கத்துக்கனி ஒன்று அனுப்பப் பட்டதாகவும், அதை அவர்கள் சுவைத்து உண்டதாகவும்.  அவர்கள் கண் விழித்துப் பார்த்தபோது அக்கனியின் சிலபகுதிகள் அவர்கள் வாயருகில் ஒட்டிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.  அப்பழத்தை உண்ட பின் அவர் பூமியில் உள்ள எதையும் உண்ணவேயில்லையாம்.


(தொடரும்)