மறப்பீரோ காயிதே மில்லத் மாண்பாளரை
காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் அரசியலில் புகுந்தபோது ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் அரசியலை விட்டும் உலகை விட்டும் பிரியும்போது குரோம்பேட்டை “தயா மன்ஜிலை”த் தவிர வேறு எதுவும் வைத்திருக்கவில்லை. (தமிழக சட்டசபையில் காயிதே மில்லத் அவர்களின் திரு உருவப்படத்தைத் திறந்து வைத்துப்பேசிய
அரசியலும் மார்க்கமும் வெவ்வேறானதல்ல.அரசியல் நடத்துவதற்கும் சிலநெறிமுறைகள்- வரம்புகள் உள்ளன என்பதை உணர்த்தும் வண்ணம் ஒரு முஸ்லிம் அரசியலில் ஈடுபடும்போது தன்னுடைய கொள்கைகளைகோட்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் காயிதேமில்லத் அவர்கள் ஒரு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும்திகழ்ந்தார்கள்.
மலேஷிய பெர்மிம் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது இஸ்மாயில் ஷரீப்.சமுதாயத் தலைவர் என்பவர் சமுதாய ஊழியராகவும் இருக்கவேண்டும் என்பது நபிமொழி. அதற்கேற்ப வாழ்ந்தவர்கள் காயிதேமில்லத்அவர்கள்.
அல்லாஹ்ஒருவனைத்தவிர அவர்கள் உலகில் வேறு யாருக்கும் பயப்படுவது கிடையாது. அந்த உறுதியும் திடமனமும் தான் அவர்களைக் கண்டதும் எவ்வளவு பெரிய இந்தியத் தலைவரையும் அஞ்சச் செய்தது.
இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வலி என காயிதே மில்லத் அவர்களைக் குறிப்பிடலாம்.
என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையில் நான்பெற்ற எல்லாப் பதவிகளுக்காகவும் நான் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
நான் இறந்து அவர் பிழைத்திருக்கக் கூடாதா?
(காயிதே மில்லத் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேள்விப்பட்டபோது தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள்.
காயிதே மில்லத் அவர்கள் நம்முடன் உரையாடும்போதும் பொதுக் கூட்டங்களில் பேசும்போதும் திருக்குர் ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் நிறைய மேற்கோள்கள் காண்பிப்பார்கள். பள்ளிப்பருவத்திலிருந்தே அரசியல் ஈடுபாடு- கிலாபத் போன்ற இயக்க ஈடுபாடு கொண்டிருந்த அவர்களுக்கு சமயத்துறையில் பற்றும் தேர்ச்சியும் எப்படி வந்தது? என நான் எண்ணிப்பார்ப்பதுண்டு.
தாதா தங்கள் வேலையைத் தாங்களே செய்து கொள்வார்கள். பணியாளர்களிடம் வேலை கூறும்போது கூட அவர்கள் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் கூறமாட்டார்கள். தன்னோடு பயணத்தில் ஊசி, நூல், பட்டன் எடுத்துச்சென்று தன் தேவையுடன் பிறருக்கும் உதவுவார்கள்.
சென்னை மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த மாநிலத்தில்ஓர் உருக்கு ஆலை வேண்டுமென்று ஓங்கிக் குரல் எழுப்பியதும், நெய்வேலி பழுப்புநிலக்கரியை வெட்டி எடுக்கும் பணி பற்றி தொடர்ந்து சட்ட சபையில் பேசி சாதித்ததையும் சட்டசபைக் குறிப்புகள் நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன.
பாக்கிஸ்தானியப் படையயடுப்பின் போது பாராளுமன்றத்தில் பேசிய கனல் கக்கும்பேச்சை இந்திய அரசு பதிவுசெய்து ஐக்கிய நாடுகள் சபையில் ஒலி பரப்பியது.
இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 21 - 30 ஆவது விதிகளின் வடிவமைப்பில் அவர்களின் பங்கு மகத்தானது. ஹஜ்கடமையை நிறைவேற்றச் சென்ற போது உடல்நலம் குன்றிய நிலையில் பாகிஸ்தானிய அரேபிய மருத்துவமனைகளில் மிக உயர்ந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை மறுத்து இந்திய மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்ட தேசப்பற்று மிக்கவர்.
தமிழகத்தில் ஒரு மாவட்டம் அவர்களது பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு கல்லூரிகள் அவர்களது பெயரைத்தாங்கியுள்ளன. எத்தனையோ காயிதேமில்லத் நகர்கள், தெருக்கள்,தொழில் நிலையங்கள், மன்றங்கள், நூலகங்கள், இவையயல்லாம் அந்த லட்சியத் தலைவரின் செயல்முறைக்கு மக்கள் தந்த ஏற்புடைமையின் வெளிப்பாடு அல்லவா?
- டாக்டர் ஹிமானா சையித் -