• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012  »  Apr 2012   » இன்றும் நாளையும்

இன்றும் நாளையும்


தொகுத்தவர்: யூ.அப்துல் காதர், மேலவாளாடி


 


  1. சிந்தித்து வாழ்பவன் வாழ்வில் முன்னேற்றம் அடைவான். சிந்திக்க மறப்பவன் வாழ்வையே துறந்தவனாவான்.
  2. வாழும் காலத்தில்ஏழைக்கு நல்லதைச் செய்து உதவிடு! ஏனெனில் நாளை இச்சமூகத்தில் நாம் வழுக்கி விழலாம்.
  3.  பசித்தவனுக்கு உன்னால்முடிந்த உதவியை செய்திடு! நாளை நமது நிலை  உத்தரவாதமில்லாதவை!
  4. எதிலும் நம்பிக்கையாடுஇன்று செயல்பட்டால் நாளை வெற்றி உன் வாசலைத் தட்டும்.
  5. எந்த நிலையிலும்பிறரிடம் நீ கையை ஏந்திடாதே! சிறிய உதவியானாலும் உனது கையால் கொடுத்து மகிழ்ந்திடு.
  6. இன்று நீ சோம்பலால்முடங்கி விட்டால் நாளை சோம்பலே உன்னை முடக்கி விடும்.
  7. தோல்வியில் மனச்சோர்வு அடைந்திடாதே. வெற்றியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடு.
  8. இருளைக் கண்டு ஒதுங்கிவிடாதே.  நாளைய ஒளிமயமான பாதைக்கு வழி தான்இருள்.
  9. இருப்பதை வைத்துமகிழ்ச்சியுடன் வாழ்ந்திடு. நாளை எதனையும் ஏற்று உயர்வுடன் வாழ்ந்திடலாம்.
  10. இன்று  இன்பத்தையும், துன்பத் தையும் ஏற்று நடந்தால் நாளைய இன்பம்துன்பம் வாழ்வை நெறிப்படுத்தும்
  11. வீழ்ந்தவனுக்குஇன்று உதவி செய்து வாழ்ந்திடு. நாளை நாமும் வீழ்ந்திடுவோம் என்று எண்ணி வாழ்ந்திடு.
  12. உழைக்கும் காலத்தில்உழைத்து வாழ்ந்திடு. காலமும், நேரமும்திரும்ப வராது. காலத்தே உழைத்திடு.
  13. வெற்றிப் பாதையைநோக்கி விரைந்து செல். தோல்வி உன்னைத் திரும்பிப் பாராது.
  14.  தர்மம் தலை காக்கும்.அதுவே சமயத்தில் உயிர் காக்கும். தர்மம். கொடுப்பவன் உயர்ந்த நிலை பெறுவான்.
  15.  தம்பி! இன்று உன்னால்முடியாதென்றால் நாளை இந்த உலகத்தின் தலையயழுத்தை யாரால் மாற்ற முடியும்?
  16.  மனதை உரப்படுத்திநடந்தால் வானத்தையும் நீ வில்லாக்கலாம்.  சாதிக்கப்பிறந்த உனக்கு நாளை சரித்திரம் எழுதப்படும்.
  17. உயர்ந்த நன்னெறியுடன்இன்று நீ வாழ்ந்து வந்தால் நாளை இந்த உலகம் போற்றும் உயர்ந்த மனிதனாவாய்.
  18.  தர்மம் கொடுத்தவன்வாழ்வு ஒளி தீபமாய் ஒளிர்ந்திடும். தானம் செய்யாதவன் வாழ்வு இருள் சூழ்ந்திடும்.
  19.  ஊனமுற்றவன், வாழ்வில் சரித்திரம் படைக்கின்றான். ஊனமற்றவன்வாழ்வில் சாதிக்க மறக்கின்றான்
  20. வளரும் காலத்தில் நல்ல பிள்ளைகளாக வளர்ந்திடு. நீ வளர்ந்தபின் அதுவே உனக்கு ஒரு பாடமாக அமையும்.
  21.  இன்பத்திலும் துன்பத்தைநினைத்து வாழ்ந்திடு. நாளை துன்பமும் நமக்கு இன்பமாய் மாறிடும்.
  22. பையில் பணம் உள்ளவரைஉன்னைச் சுற்றி நண்பர்கள் ஏராளம்.  பையில் பணம்இல்லையயன்றால் நண்பர்களெல்லாம் திசைமாறிய பறவைகளாய் மாறிடுவர்.
  23. தவறு செய்பவரை உடனேமன்னிக்கக்  கற்றுக் கொள். நாளை நாமும் தவறுகள்செய்யலாம். நாளை நாமும் மன்னிக்கப்படலாம்.
  24. தோல்வியைக் கண்டுஇன்று துவண்டு விடாதே! இன்றைய தோல்வியே நாளைய வெற்றியின் அஸ்திவாரமாகும்.
  25. முயற்சி இன்றி எந்தநிலையிலும் வெற்றி பெற முடியாத முயற்சியே நமது வாழ்வின் ஆதாரமாகும்.
  26. அன்பு உள்ளவரை இந்தஉலகம் போற்றி மதித்திடும். அன்பு இல்லாதோர் வாழ்வையே தொலைத்தவராவார்.
  27. மூச்சு உள்ளவரைநல்ல மனிதனாக வாழக் கற்றுக் கொள். மூச்சு நின்றவுடன் நல்லவர் என்ற பெயர் சிறக்க வாழ்ந்திடு.
  28. இன்று எதிலும் நாம்பொறுப்புடன் நடந்தால் நாளை நம் குழந்தைகள் பொறுப்புடன் வளர்ந்திடும்.
  29. முரட்டுக்குணம்உன்னையே அழித்து விடும்.  நற்பண்புடன் நீ நடந்தால்உலகம் உன்னை வாழ்த்திடும்  
  30. உடலில் ஊனம் உனக்குஒரு தடைக்கல் அல்ல. உள்ளம் ஊனமின்றி இருந்தால் நீ எதனையும் வெல்லலாம்.
  31. இன்று நீ ஒரு சிறியபொருளைத் திருடினால் நாளை நீ ஒரு பெரிய பொருளை இழந்திடுவாய்.
  32.  இன்று நீ எல்லோரிடமும்பணிவுடன் நடந்தால் நாளை உன் சந்ததியினர்கள் பணிவுடன் நடந்திடுவர்.
  33. வாங்கும் சம்பளத்திற்குநீ பணி பார்த்திடு. இல்லையேல் நாளை பணியே உனக்கு எதிரியாய் அமைந்துவிடும்.
  34. தெரிந்தும் தெரியாதுஎன்று சொல்பவன் முழு முட்டாளாவான். உண்மையில் தெரியாது என்று சொல்பவன் அப்பாவியாவான்.
  35. துணிவும், பணிவும் உள்ளவன் வாழ்வில் முன்னேறுவான். துளியும்அச்சமின்றி நடப்பவன் அழிவைத் தேடிச் செல்வான்.
  36. பணம் இருந்தால்இன்று நீ எதையும் வாங்கிடலாம். அதே பணத்தால் இன்று நீ தூக்கத்தை மட்டும் வாங்கிட முடியாது.
  37. நெறியுடன் வாழ்ந்தால்எல்லா வளங்களும் பெற்றிடுவாய். நெறி தவறி வாழ்ந்தால் வாழ்வே துன்பமாய் அமைந்திடும்.
  38. சரித்திரம் படைக்கப்பிறந்தவனே! தரித்திரம் பிடித்த தற்கொலை செய்வதை மறந்து விடு.
  39. இன்று நீ வேலையாட்களைகேவலப்படுத்திவிடாதே! நாளை நீயும் வேலையாளாக மாறும் காலம் வரலாம்.
  40. முயற்சிகள் தோல்விஅடைந்தாலும் முயல்வதில் தோற்று விடாதே.