• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012  »  Apr 2012   » அல்குர்ஆன் அறிவியல் துளிகள்....

அல்குர்ஆன் அறிவியல் துளிகள்....


 மேகங்கள்  பற்றி  குர்ஆன்

 

(1)அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

“அல்லாஹ் மேகத்தை மெதுவாக ஓட்டுவித்துப் பின்னர் (சிதறிக்கிடக்கிற) அதன் மத்தியில் ஒன்றாக இணைத்துப்பிறகு அடர்த்தியாக (அடுக்கடுக்காய்) ஆக்குவதை நீர் பார்க்க வில்லையா? பின்னர் அதனிடையிலிருந்து வெளியாகிற மழையை நீர் பார்க்கிறீர்” (24 : 43).

மேகங்கள் உருவாதல், அமைப்பு மற்றும் வேலை ஆகிய இந்த விபரங்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் தான் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.  (ஆந்தெஸும் மற்றவர்களும் எழுதியுள்ள “காற்று மண்டலம்” நூலைப் பார்க்கவும். (vide “Atmosphere”  Anthes and others).

“வியப்பூட்டும் குர்ஆன்”(The Amazing Quran) என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னும் சில அறிவியல் உண்மைகளைப்பார்ப்போம்.

"ஒரு பொருளின் மிகச் சிறிய அலகு (அதாவது மூலத்தின் குணங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் அணு) அதன் உள்ளடங்கிய பொருட்களாகப் பிரிக்கப்படலாம் என்று நவீன அறிவியல்கண்டுபிடித்துள்ளது.  இது ஒரு புதிய கருத்து.  இது சென்ற நூற்றாண்டின் கருத்திலிருந்து ஒரு வளர்ச்சியாகும்.  ஆனால் இச்செய்தி குர்ஆனில் பின்வருமாறு ஏற்கனவேபதிவு செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பிற்குரியதாகும் :

“சுவன  லோகங்களில் உள்ள மற்றும் பூமியின் மேலுள்ள அணுவின் எடையையும் அதைவிட மிகச் சிறியதாக உள்ளதையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக உள்ளான்”..
. 

இதே போன்று மற்றுமொரு அறிவியல் உண்மையை டாக்டர். M.U. காஸி எழுதியுள்ள “குர்ஆனில் காணப்படும் சுய நிரூபணம் கொண்ட அற்புதங்கள்” (Self evident miracles of the Holy Quran”) என்னும் நூல் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

மிக உயரமான இடங்களில் சுவாசிப்பதுபற்றி:      

“அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை விசாலமாக்குகிறான்.  எவரை அவன் வழிதவறச் செய்ய வேண்டுமென்று நாடுகிறானோ அவருடைய நெஞ்சத்தை  வானத்தில் ஏறுகின்றவன் போலச் சிரமத்துடன் கூடிய நெருக்கமானதாக ஆக்கி விடுகிறான்” (6:125) என்றுகுர்ஆன் குறிப்டுகிறது.     

காற்றழுத்தக் கொள்கை அடிப்படையில்  இவ்வசனம் எளிதில் புரிந்து கொள்ளப்படலாம்.  கடல் மட்டத்தைவிட உயர்ந்த இடங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கிறது என்பது இன்று அனைவரும் பரவலாக அறிந்த செய்தியாகி விட்டது.  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறான சுவாசித்தல் பிரச்சினை எதையும் அனுபவித்ததில்லை. எனவே அனைத்தையும் அறியும் ஆற்றலுள்ள அல்லாஹ்தான் இதனைக் கூறியுள்ளான்.

இதேபோன்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னும் சில அறிவியல் உண்மைகளை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ள புவி அறிவியல்கள் பேராசிரியர் ஸக்லுல் - அல் - நக்கார்“ குர்ஆனில் காணப்படும் அறிவியற் சான்றுகள்” (Scientific signs in Quran)  (மக்காவில் உள்ள முஸ்லிம் உலகப் பேரவையின் “அல்குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள அறிவியல் சான்றுகள் ஆணையம்” வெளியிட்டுள்ள “அல் - ஈஜாஸ்”(“Al - Eijaz”) என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது)  என்ற கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.  அவை வருமாறு :

1.  சூரா 86 : 11 மற்றும்12 - ஆம் வசனங்களான  “திரும்ப அனுப்பும் ஆற்றலுடைய வானங்கள் மீது சத்தியமாக! ஆகிய இரு வசனங்களையும்மேற்கோள் காட்டி : “முதலில் “வானங்களின் திருப்பித் தரும் ஆற்றல்” என்பதற்குக் குர்ஆனில் தொடக்ககால விரிவுரையாளர்கள் “வானங்கள் மழையைத் திருப்பித்  தருகின்றன”என்று விளக்கம் அளித்துள்ளனர்... அப்படியானால் ஏன் அல்லாஹ் திருப்பித் தரும் ஆற்றலுடைய வானங்கள் என்று கூறுவதற்குப் பதிலாக “மழையைத்திருப்பித் தரும் வானங்கள்” என்று கூறவில்லை? அது ஏன் என்று இப்போது நாம் புரிந்து கொள்கிறோம்! ஏனெனில், வானத்தில் - பூமியில் பாதுகாப்பிற்காக ஒன்றன் மேல் ஒன்றாகஅடுக்குகள் இருக்கின்றன என்பதை நாம் அறியத் தெடங்கியுள்ளோம்.

இந்த அடுக்குகள் உலகுக்குப்பயன்படும் ஜடப்பொருள்களையும் ஆற்றலையும் பூமிக்குத் திருப்பி அனுப்புகின்றன; தீங்கு தரும் அம்சங்கள்அனைத்தையும் வெளியில் உள்ள அண்டவெளிக்கு அனுப்பி விடுகின்றன” என்று அவர் கூறுகின்றார்.

       பின்னர் “பிளக்கப்படும் பூமி”என்னும் சொற்றொடர் குறித்து அவர் “குர்ஆனின் தொடக்க கால விரிவுரை யாளர்கள் விதைகள்முளைக்கும் போது நிலத்தை முளைகள் பிளந்து கொண்டு வருவதைப் பார்த்திருப்பார்களே யன்றிபிற அம்சங்களைப் பார்த்திருக்க முடியாது... முளையிடும் விதைகளால் பூமி பிளக்கப்படுவதுஎன்பது பிளக்கப்படும் பூமியின் எண்ணற்ற அம்சங்களில் ஒன்றே ஒன்று தான். 

 

இரண்டாம் உலகப் பெரும்போருக்குப்பிறகு... மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சி .. மிகப் பெரும்  எண்ணிக்கையிலான நெடும் பிளவுகள் (Faults) பூமியின் வெளிப்புறப் பாறை அடுக்குப் பிளவு படுத்தப்படுவதை  வெளிப்படுத்தின.  இப்பிளவுகள் ஏகப்பட்ட அளவிலான உருகிய பாறைக் குழம்பை ஆறுபோல ஓடவிடுகின்றன.  பெருங்கடல்  மத்தியில் பாறை முகடுகள் இவ்வாறுதான்  உருவாகின்றன... பூமியில் இப்பிளவுகள் இல்லாமலிருக்குமானால் பூமியில் வாழ்க்கை என்பதே உண்மையில் இயலாததாகிவிடும்...

குர்ஆன் ஏன் இவ்வாறு தெரியாத விஷ­யங்களையெல்லாம் குறிப்பிடுகிறது? அல்லாஹ்  தன் எல்லையற்ற அறிவினால் “ஒரு காலம் வரும். அப்போது அறிவியல் அறிஞர்கள் இந்த உண்மைகளைக் கண்டுபிடிப்பர்.  குர்ஆன் அல்லாஹ்வின் கூற்றே எனபதை உணர்வர்” என்று அறிந்துள்ள என்பதன்றி வேறு என்ன?” என்று விளக்கம் தருகிறார்.

 

(2) அடுத்து “மேலும் இரும்பையும் நாம் இறக்கினோம்.  அதில் (போர்களுக்கு வேண்டிய) கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பலன்களும் இருக்கின்றன”. (57 : 25)என்னும் வசனத்தை விளக்குகையில்,  “குர்ஆனின் தொடக்ககால விரிவுரையாளர்கள்.. இந்த வசனத்தில் உள்ள ‘அன்ஸல்னா’  என்னும் “நாம் கீழே அனுப்பியிருக்கிறோம்” என்றுபொருள்படும் அரபிச் சொல், பொருள் வடிவிலான அனுப்புதலைக் குறிப்பதல்ல.  ஆனால் பலன் மற்றும்  வலிமையால் இரும்பு உருவாக்கப்படுகிறது என்பதைக்குறிக்கிறது என்று விளக்கம் உரைத்தனர்.  ஆனால்இரும்பு நம் கோளத்திற்கு மட்டுமல்ல.  முழுச்சூரிய மண்டல அமைப்பிற்கும் வெளியே உள்ள அண்ட வெளியிலிருந்து கிடைக்கப் பெறுகிறது என்றுஅண்மையில் நிரூபிக்கப் பட்டுள்ளது.  நம் சூரியமண்டலத்திலுள்ள இரும்பு முழுவதும் சூரிய மண்டலத்துக்கு  உள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டதல்ல. அல்லது படைக்கப்பட்டதல்ல.  ஆனால் வெளியே உள்ள அண்டவெளியிலிருந்து வந்திருக்கிறதுஎன்பது இப்போது நிலை பெற்று விட்ட உண்மையாகி விட்டது.

குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமோர் அறிவியல் உண்மை - (மிகவும் பிற்காலத்தில் தான் அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை) அது தாய்ப்பாலைப் பற்றியதாகும். குர்ஆன் வசனம் இவ்வாறு கூறுகிறது :

     

“தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு முழு ஆண்டுகள்பாலூட்டுவார்கள்”  (2: 233).

தாய்ப்பாலின் ஒப்பற்ற தன்மையும் சிறப்புப் பயனும் மிக அண்மைக் காலத்தில்தான் அறிவியல் ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும் - திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கைக்குழந்தைக்கான ஊட்டச்சத்துணவின் இன்றியமையாமையை அறிவித்துவிட்டது.  தாய்ப்பாலுக்கு மாற்றே கிடையாது.  மாற்றாக எதைக் கொடுத்தாலும், குழந்தை வளர்ச்சிக்கு   என்னென்ன சத்துப் பொருள்கள் தேவை என்று இப்போதுஆய்ந்து காணப் பட்டுள்ளனவோ அந்தப் பொருள்களையயல்லாம் கொண்டு தயார் செய்யப் பட்டதாக இருந்தாலும் தாய்ப்பாலில் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிற சில இன்றியமையாச்சத்துப் பொருள்கள் இல்லாமல்தான் அந்த மாற்றுப்பால் இருக்கும். 

ராபித்தத்தில் - ஆலமில் - இஸ்லாமி (மக்கா உலக முஸ்லிம் பேரவை) வெளியிட்டுள்ள இதழில் முகம்மது மஸ்ஹர் ஹுசைனி என்பார் எழுதிய கட்டுரையில் (அ.ஐ.நாடுகள், இலிநாயிஸ்,ஓக் புரூக் என்னும் நகரில் இஸ்லாமிக் பெளன் டே­ன் கூட்டத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டது):

“உலகில் போதிய உணவு கிடைக்காத சமுதாயங்களில் கூட, குறைவான ஊட்டம் பெறுகிற தாய்மார்களுக்குக் கூட வியப்புறும் வண்ணம் பால் சுரக்கிறது.  4 முதல் 6 மாதக் குழந்தைகளின் வளர்ச்சியை உறுதிசெய்யப் போதுமான அளவுகளில் புரோட்டீன் சத்து தாய்ப்பாலிலே உள்ளது. 

குழந்தை பிறந்து 2 ஆண்டுகளுக்கு வேண்டிய கூடுதல் சிறப்புப் புரோட்டீன்சத்தும் தாய்ப்பாலில் உள்ளது என்று 1971-ல் சத்துணவு பற்றிய ய்.பு.நு. மற்றும் உலகசுகாதார அமைப்புகளின் (நி.க்ஷி.நு) கூட்டுக் குழு நிபுணர்களின் 8-வது அறிக்கை கூறுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குர்ஆனில் நாம் காணும்  மருத்துவவிந்தைகள்” (“Medical Miracles in the Quran”) என்னும் தலைப்பில் கெய்ரோவில் நடந்த மாநாட்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர். ஆர்தர். ஜே. ஆலிசன் என்பவர் ஓர் ஆய்வு அறிக்கையை வாசித்தார் (பார்க்க : “அல்கலம் ஜூன் 1986 இதழ். பக்கம்15).  அவ்வறிக்கையில் அவர் எடுத்துக் காட்டியுள்ளபடி- மற்றுமொரு அறிவியல் உண்மையை உள்ளடக்கிய அல்குர்ஆன் வசனம் (39:42) வருமாறு :

     

“உயிர்களை - அவற்றின் மரணத்தின் போதும், தம் உறக்கத்திலும்(மரிக்காமலுள்ளதை) - அல்லாஹ்வே கைப்பற்றுகிறான்; பிறகு எவற்றின்மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் தன்னிடமே தடுத்து நிறுத்திக் கொள்கிறான்; மற்றவற்றைக் குறிப்பிட்ட தவணைவரை வாழ்வதற்கு அனுப்பி விடுகின்றான்”.


டாக்டர். ஆர்தர். ஜே. ஆலிசன் தம் அறிக்கையில் ஆணோ பெண்ணோ தூங்கும்போது ‘ஏதோ ஒன்று’ மனிதஉடலை விட்டு வெளியே செல்கிறது.  பின்னர் திரும்பி வந்து அவனை எழுப்பி விடுகிறது என்றும் சாவில் அந்த ‘ஏதோ ஒன்று’ திரும்பி வருவதில்லை என்றும் இதை அவருடைய சோதனைகள் நிரூபித்துள்ளன என்றும் இதைத்தான் குர்ஆனின் மேற்குறித்த வசனம் மிகத் தெளிவான சொற்களில் தெரிவிக்கிறது என்றும் கூறுகிறார். 

 

புறவெளி உளவியல் ஆராய்ச்சியும் (Para Psychological research) குர்ஆன் ஒளியில் அவர் செய்துவந்த ஆன்மீகச் சிகிச்சையும்  அவருக்குக குர்ஆன் வசனங்களில் அடங்கியுள்ள  அறிவியல் உண்மைகள் மீது உறுதிப்பாடான நம்பிக்கையை   ஏற்படுத்தவே அவர் இஸ்லாத்தை தழுவினார்.  அவர் பிரிட்டிஷ் பல்கலைக் கழக மின்னியல் மற்றும் மின்னணுவியல்     துறைத் தலைவராக இருந்தார்.  பிரிட்டிஷ் உளவியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.


(நன்றி: நீதியரசர்  ஏ.அப்துல்ஹாதி அவர்களின் அல்லாஹ்வின் கூற்றே அல்குர்ஆன்.)