• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Aug 2012   »  மலிவான உயிர்கள்


மலிவான உயிர்கள்

 

 

    லகில் மிகவும் மலிவான உயிர்கள் அனேகமாக முஸ்லிம்களின் உயிர்களும் -தமிழர்களின் உயிர்களுமாகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது!


      இலங்கையில் தமிழர்களின் உயிர்களை அநியாயமாகப் பறித்தமைக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. அது போதாதென்று அவ்வப்போது தமிழக மீனவர்களின் உயிர்களுக்கும் கேள்வி கேட்பாரே இல்லை!


      பர்மாவிலும் இதே கதை தொடர இப்போது அஸ்ஸாமில் வன்முறை தலை விரித்தாடுகிறது.


      சிறுபான்மையினர் அரசு அளிக்கும் எண்ணிக்கைப்படியும் எண்ணிக்கைக்கு மேலும் கொல்லப்படுகின்றனர்.


      அமெரிக்காவில் ஓர் இனத்தைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதற்கு ஒபாமாஅரசு அமெரிக்கக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச் செய்திருக்கிறது.  (இராக்கிலும், உலக முஸ்லிம் நாடுகளிலும்,அமெரிக்காவின் சதியால் கொல்லப்படும் முஸ்லிம்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக இருந்தால் அமெரிக்காவின் கொடி பல ஆண்டுகள் அரைக்கம்பத்திலேயே பறக்கவேண்டியதிருக்கும்) 


      ஆனால் எத்தனை பேரைக் கொன்றால் என்ன? இங்கே ஆளும் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. 


      அமைதியாக நோன்பைக் கடைப்பிடித்து ரமளானை அனுபவிக்க வேண்டியவர்கள் அச்சத்திலும் பாதிப்பிலும் ஆளாக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!


      அல்லாஹ் தான் அந்த மக்களுக்கு அமைதியையும் - நிம்மதியையும் திரும்பத்தர  வேண்டுமென  அனைவரும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்!