ஐவேளை தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு
செல்லும் போது கடைப் பிடிக்க வேண்டிய
ஒழுக்கங்கள்!
1. ஒவ்வொரு தொழுகைக்காகவும் ஒளுவுடன் வீட்டை விட்டுப் புறப்படுதல் (புஹாரீ)
2. வீட்டை விட்டுப் புறப்படும் போது தொழுகைக்காக நிய்யத் செய்து புறப்படுதல் (புஹாரீ)
3. பாங்கைக் கேட்டபின் உலக அலுவல்களை அவைகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாததைப் போன்று முற்றிலுமாக விட்டு விடுதல் (திர்மதி)
4. வீட்டை விட்டு வெளியேறிய பின்பு துஆவை ஓதிக்கொண்டே செல்லுதல் (திர்மிதி )
5. பள்ளிக்குச் செல்லும் வழியில் கீழ்க்காணும் துஆவை ஓதினால் எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக துஆ செய்கிறார்கள். (இப்னு மாஜா)
6. தொழுகச் செல்லும்போது கம்பீரமாக சிறிய எட்டுகள் வைத்து வர வேண்டும். ஒவ்வொரு எட்டும் எழுதப்பட்டு அதனளவு நன்மை கிடைக்கும் (தர்கீப்)
7. பள்ளியில் நுழையும் போது இடது கால் செருப்பை கழற்றி இடது காலின் மீது வைத்து வலது கால் செருப்பை கழற்றிய பின் வலது காலை பள்ளிக்குள் வைக்க வேண்டும்.
8. தவிர்க்க முடியாத காரணமின்றி உலகப் பேச்சுகளை பேசக் கூடாது. மக்கள் தொழுது கொண்டு இருந்தால் மெதுவாக குர்ஆன் ஓத வேண்டும். திக்ரு செய்ய வேண்டும். கிப்லாவை முன்னோக்கி துப்பவோ கால்களை நீட்டி உட்காரவோ கூடாது. நெட்டி போடுவதும் பள்ளிக்கு வெளியே காணாமல் போன பொருட்களை பள்ளிக்குள் தேடுவதும் அதற்காக அறிவிப்பு செய்வதும் கூடாது. உடலில் அணிந்துள்ள துணி அல்லது மற்ற பொருட்களுடன் விளையாடுவது கூடாது. ஒரு கை விரல்களை மற்றொருகையில் போடுவது கூடாது. சுருக்கமாகக் கூறினால் பள்ளியின் கண்ணியத்திற்கு மாற்றமான எந்தக் காரியமும் செய்வது கூடாது. (தப்ராணி, அஹ்மத்)
9. எப்பொழுதும் ஜமாஅத்துடனும் முதல் தக்பீருடனும் பேணுதலாக தொழ வேண்டும்.
10. தொழுகைக்காக ஜமாஅத் நின்றால் முதலில் ஸப்புகளை சரி செய்த பின் இகாமத் சொல்ல வேண்டும்.
11. இயன்றவரை எப்பொழுதும் முதல் ஸப்பில் இமாமுக்கு நேராக பின்னால் உட்கார வேண்டும். அல்லது வலது புறம் முடியாவிட்டால் இடது புறம் உட்காரவேண்டும் முதல் ஸப்பில் இடம் இல்லாவிட்டால் மேல் கூறப்பட்ட முறையில் அடுத்த ஸப்கல்ளில் உட்கார வேண்டும்.
12. ஜவேளை தொழுகைக்குப் பின்பு தொழுத இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் ரஹ்மத்திற்காகவும் பாவமன்னிப்பிற்க்காகவும் துஆ செய்து கொண்டிருக்கின்றனர் (தர்கீப்)
13. பஜ்ரு தொழுத பின் இஷ்ராக் வரை திக்ரில் ஈடுபடுவது (திர்மதி )
14. தொழுகையை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும் வரை தொழுகையின் நன்மை கிடைத்துக் கொண்டு இருக்கும் ( புஹாரீ)
15. சுன்னத் தொழுகைக்கும் பர்ளு தொழுகைக்குமிடையில் ஏதாவது தஸ்பீஹ் அல்லது திக்ரு அல்லது ஸலவாத்து ஓதுவதால் அதிக நன்மை கிடைக்கும்.
பஜ்ரு சுன்னத்திற்கும் பர்ளுக்குமிடையில் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்பதை நூறு தடவை சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹூ வல்லாஹூ அக்பர் என்பதை நூறு தடவை ஓதிவந்தால் அதிக நன்மைகிடைக்கும்.