• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Aug 2012   »  இஸ்லாமிய ஒழுங்கு முறைகள்


சங்கைமிகு ஷைகு

நாயகம் அவர்களின்


அமுத மொழிகள்

                                         

                                   இஸ்லாமிய ஒழுங்கு முறைகள்

 

 

17.6.212 அன்று திண்டுக்கல்லில் தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை.

 

 அன்புக்குரிய முரீதுப் பிள்ளைகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


      இஸ்லாமிய ஒழுங்கு முறைகளை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள்.  என்றாலும் அனேகர் இஸ்லாமிய ஒழுங்கு முறைகள் படி நடக்கின்றோமா எனப்பார்த்தால் அனேகமாக அப்படி இல்லைபோல்தான் தெரிகிறது.  இஸ்லாமிய ­ஷரீஅத் முறைகளை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.  நாமும் படித்திருக்கிறோம். நாம் அதற்கு மாற்றமாக நடக்கக் கூடாது.  அப்படி நடந்தால் நம்மை முஸ்லிம்கள் எனச் சொல்ல முடியாது.  ஏனெனில் முஸ்லிம் என நாம் காட்டிக் கொள்வது ­ஷரீஅத் முறையை வைத்துத்தான்.  அன்னிய ஜனங்களுக்கும் நமக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு.  நடை, உடை. பாவனை, உணவு முதலான அனைத்திலும் வித்தியாசங்கள் உண்டு. பேச்சிலும் கூட வித்தியாசம் உண்டு. முஸ்லிம்களின் நிலை இவ்வாறு இருக்க அதிகமான முஸ்லிம்கள்  எங்களுக்குத் தெரிய  இந்த ஒழுக்கப் பிரகாரம் நடப்பதாகத் தெரியவில்லை.  அவர்கள் உண்ணும் உணவும் ஹலாலானதா ஹராமானதா எனக் கூட சிந்திப்பதில்லை.  உணவகங்களுக்குச் செல்கிறார்கள்.   அங்கு சுத்தமாக உள்ளதா? அல்லவா?பொருள்கள் சுத்தமாக உபயோகிக்கப் படுகின்றனவா? என சிந்திப்பதில்லை.  அதே நேரத்தில் முஸ்லிம்களின் உணவகங்களுக்குச் சென்றால் சொல்லவேண்டியதே இல்லை. மாற்று மதத்தார்கள் - சிங்களர்களின் கடைகள் கூட சுத்தமாக இருப்பதைப் பார்க்கிறோம்.  ஆனால் முஸ்லிம்களின் கடைக்கு நம்பிப்போவோம். ஆனால் அங்கு சமைக்குமிடமும் மேசையும் பண்டங்களும் அசுத்தமாகத்தான் இருக்கும்.  ஒரு முஸ்லிம் இது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.  இதேபோல எல்லா வி­ஷயங்களிலும் முஸ்லிம்களின் நிலை சிறிது சிறிதாக மறிக் கொண்டே போகிறது.


பொருந்தும்

     

      ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்த நிலைக்கு இப்போது அளவுக்கதிகமாக மாறிவிட்டது.  ஒரு சில கூட்டத்தினர் ரஸூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வி­ஷயங்களை இந்தக் காலத்திற்குச் சிறிதும் பொருந்தாது எனக் கூறுகின்றனர். படித்த பெண்களே இவ்வாறு கூறுன்றனர்.  அவர்களுக்கு எப்படித் தெரிந்ததுபி.எச்.டி, எம்.ஏ. பிளாசபி    படித்து சிறிது அனுபவமும் பெற்று விட்டால் அவர்கள் அறிவாளி ஆகிவிட்டார்களா? இதில்   பெண்ணாயினும் ஆணாயினும் அவர்கள் அறிவாளி என எப்படிக் கூறமுடியும்? இவர்கள் படித்ததெல்லாம் சிறிதளவுதான்.  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியது பொருந்தாது எனச் சொல்வதற்கு எந்த அறிவுடைய ஆதாரத்தை அவர்கள் காட்டமுடியும்? பெருமானார் அவர்கள், படித்த அறிவாளிகள் - ஏன் நபிமார்கள் அனைவருக்குமே, இன்னும் இருக்கும் அனைவருக்குமே மேலானவர்கள். அவர்களின் வாக்கியங்கள் அவர்களுக்கு முந்திய காலத்திற்கும் அவர்கள் காலத்திற்கும் பிந்திய காலத்திற்கும் பொருந்தும் வண்ணமாகத்தான் அவர்கள் அமைத்திருக்கின்றார்கள்.  நாங்கள் நடக்கும் நடப்புக்கு அவர்கள் சொன்ன வாக்கியங்கள் பொருத்தமில்லை யாயிருப்பின் நம்மை நாம் நினைத்து “இது இக்காலத்திற்குப் பொருந்தாது ”என சொல்லக் கூடாது.  அவர்கள் ஒன்றைக் கூறி விட்டால் அதற்கு அதில்ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது.  பொருந்தாது எனச் சொன்னவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது.

     

முறியும்


       செய்கு ஒரு சொல்லைச் சொல்லி விட்டால் அது அப்படியிருக்காதே இப்படி இருக்காதே என எண்ணிவிட்டால் - கூறிவிட்டால் - அவருடைய பைஅத் உள்ரங்கமாக முறிந்தே போய்விடும். அதே போல ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்          வி­ஷயத்தில் கூறிவிட்டால்  அவனுடைய   ஈமானே நீங்கிப் போய்விடும்.  இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்.  அவர்கள் அருளிய வார்த்தைகளில் எங்களுக்கு கருத்து இருக்கிறதா என  ஆராய வேண்டும்.  அறியாத நிலையில் தான் இது பற்றி சிந்திக்கிறோம் என யோசிக்க வேண்டும்.  உண்மையில்அறியாத நிலையில் தான்  நாம் சிந்திக்கின்றோம்.  இப்படிசிந்தித்துவிட்டு இது இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என முடிவுக்கு வந்தால் அதுபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் செய்யும் இழிவாகும்.  கட்டாயம் அது பொருந்தக் கூடியதாகத் தான் இருக்கும்.


பர்தா ஒழுக்கம்

     

      இப்போது பெண்கள் பர்தா அணிகின்றனர்.  பர்தாவுக்கு ஓர் ஒழுங்கு முறை இருக்கிறது.  அது ஜீன்ஸ் பேண்ட் போடுவது போல இறுக்கமாக இல்லாமல் தளர்ந்து (தொங்கும்) நிலையில் இருக்க வேண்டும்.  அடுத்து பர்தா  அணிந்தாலும் நடப்பது ஆண்களைப் போல கை வீசி நடக்கக் கூடாது.  இது எத்துணை பெரிய பாவம். நீங்கள் கால் அடித்து நடக்காதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான்.  இதன் கருத்து ஆண்களைப் போல, வேகமாக,குதித்து நடப்பது என்பதாகும். ஆண்கள் கூட தற்பெருமை நடைநடக்கக் கூடாது என  அல்லாஹ் குர்ஆன் ஷரீஃபில் கூறுகிறான். 


      எல்லாம் எனக்குத்தான் தெரியும். நான் தான் பெரிய ஆள் என பெருமையாக நடந்தால் அந்த நிமிடம்அவருடைய பெருமைக்கு இழிவு வந்து சேரும். பர்தா போடுவதற்கு ஓர் ஒழுங்கும் அதனைப் போட்டு நடப்பதற்கு ஓர் ஒழுங்கும் இருக்கிறது.  பெண்கள் வெளியே பாதைகளில் தனியாகப் போகக் கூடாது.  விளக்கமுள்ள ஒரு மகனையாவது உடன் அழைத்துச் செல்ல வேண்டும். பஸ்ஸிலோ  ரயிலிலோ போவதற்கு பொருத்தமில்லை எனக் கண்டால் போகக் கூடாது. தனது கற்பைப் பேணி நடப்போர் அவ்வாறு தான் நடப்பர்.  பர்தாவை விரும்பாதோர் என்ன சொல்வர்? உடலை, முகத்தை, மூடிக் கொண்டு ஒரே வியர்வையாக உள்ளது.  பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றால் படிப்பிக்க முடிவதில்லை என்பர்.  இவ்வாறு கூறி பர்தா இன்றிப் போனால் அது பொருந்துமா


கண்படுமே

     

      அன்னியப் பெண்ணுக்கு முன்பாகக்கூட முஸ்லிம் பெண்  போகக் கூடாதென்றிருக்கிறது.  அப்படிப் போய் ஆஹா! இவள் அழகாக இருக்கிறாளே  என நினைத்தால் அது ஆபத்துதான்.  ஆனால் வேலைகள் செய்யும் நேரத்தில் முகம் கைகள் வெளியே தெரிய இமாம்கள் ஓர் ஒழுங்கு முறை வகுத்துள்ளார்கள்.  ஆனால் ஓர் ஆண் பார்த்துவிட்டால் அது பெரிய ஹராமாகிப் போகிறது.  அவன் பார்க்கும் போதுஅவனுடைய மனதில் ஏதாவதொன்றை நினைத்தால் அந்தப் பெண் பெரிய பாவியாகி விடுகிறாள்.  இப்போது பெண்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்றார்களே இதுஇஸ்லாமா? அதுவும்போராட்டம் என்ற பெயரில் பேனர்களை கையில் ஏந்திக் கொண்டு கோ­ஷம் போடச் செய்வது முறைதானா?


      ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தையும் சரியாகத்தான் கூறி அருளியுள்ளார்ள்.  அதற்கு எந்த மாற்றமும் இல்லை.  இதற்கு மாற்றம்   நினைப்பவன் ஈமான் அற்றவன்.  இதுதான் இஸ்லாமிய முறை.  ஆனால் நெறி முறைகள் பின்பற்றப் படுகின்றவா? இல்லையே.பெண்கள் சாலைகளில் “கைவீசம்மா கைவீசு” எனப் பாடுவது போல நடமாடுகிறார்கள்.  போகும் பெண்கள் ஓர் ஓரமாகச் செல்ல வேண்டும்.நடுவே போய் ஏதாவது விபத்து ஏற்பட்டால் யார் என்ன செய்ய? விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக் கொள்ளவும் இன்று வழி இருக்கிறது.


      எனவே பெண்கள் அமைதியாகச் செல்ல வேண்டும்.  நாங்கள் நிறையப் படித்துவிட்டோம் என இறுமாந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது பொருந்தாது என்று சொன்னால் சிங்கத்துக்கு முன் போய் நீ சிங்கமா? என்று கேட்பதைப் போன்ற ஆபத்துதான்.  அது ஒரே கவ்வுதான் கவ்வும். கதை முடிந்து விடும் எனவே ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி விட்டார்கள் என்றால் அதை அப்படியே ஏற்க வேண்டும்.


பிள்ளைகள் கவனம்

     

      ஹதீஸ்கள் ஆதாரமுள்ளவையா? மெளலூஆ என்பதை யெல்லாம் பின்னர்தான் சிந்திக்க வேண்டும்.  அவர்கள் சொன்னார்கள் என்றால் முதலில் அப்படியே நம்பி விடவேண்டும். அதுதான் ஈமான். அதற்குப் பின்னால் தான் ஆராய வேண்டும்.  மேடையில் பேசுவோர் சரியாக ஹதீதுகளைப் பார்க்காமல் பிழையாக தங்களுக்குத் தேவையானதை உதாரணமெடுத்து, இல்லாவிட்டால் இட்டுக்கட்டிப் பேசலாம்.  இதையெல்லாம் முன்னர்  பின்னர் யோசித்து முடிவுக்கு வரவேண்டும். இன்று ஒழுங்கு முறைகள் நிறைய இல்லாது போய் விட்டன.  புதிதாக வந்த ஷைத்தான்களின் கூட்டத்தால் ஆண்கள் பெண்கள் அனைவருமே வழிதவறிப் போய்விட்டனர். நீங்கள் உங்கள் பிள்ளைகள் வி­ஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.  ஏனென்றால் அவர்களை அழைத்துச் சென்று பொய்யைக்கூறி ஏமாற்றி விடுகிறார்கள்.  பாவம் பிள்ளைகள் என்ன செய்வர்? அவனுக்குள்ள அறிவுக்குத் தானே அவன் எடுப்பான். இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  அப்படி உங்களை அணுகுவோரை சத்தியத்தை எடுத்துக்கூறி நம் பக்கத்துக்கு அவர்களை இழுக்க வேண்டும். எம் பக்கமென்றால் இஸ்லாத்தின் பக்கம். தரீக்காவின் பக்கம் என்றல்ல. அவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தாலே  போதும்.  இஸ்லாமிய ஒழுங்கு முறைகள் போய் விட்டால் இஸ்லாத்தினால் எந்த ஒரு நன்மையும் நாம் பெற முடியாது  போய்விடும். மேலும் வருங்காலத்தில் கிருஸ்துவராவதற்கு மிகவும் எளிதாகப் போய்விடும்.  வஹ்ஹாபிகள் முறை  அப்படித்தான் இருக்கிறது.  அவர்கள் கிருஸ்துவ மார்க்கம் நல்லது எனக்கூறி  இஸ்லாமியர்களை - இஸ்லாத்தை மோசமாகப் பேசுகின்றனர்.  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதை ஒப்புக் கொண்ட இவர்கள் அபூஜஹ்லின் - அபூலஹபின் பிள்ளைகளோ யாருக்குத் தெரியும்? அந்த இனத்தில் வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். அத்தகையோர்தாம் இந்த நிலைக்கு வருவர். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்திப் பேச அவர்கள் தாம் துணிவார்கள்.


எதிர்காலத்தில்

     

      இப்போதே இப்படியிருக்க எதிர்காலத்தில் இஸ்லாமிய நிலை என்னவாகுமோ எனச் சொல்ல முடியவில்லை. பெருமானாரை மெல்ல மெல்லத்தள்ளி விட்டு தாங்கள் பின்பற்றும் நபரை நபியாக்கப் பார்க்கிறார்கள்.  முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாபை நபியென்றுதான் அவர்களில் ஒரு பகுதியினர் சொல்கிறார்கள். அதையும் எங்கள் உலமாக்கள் அந்தப் பெயரை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  

 

      அஹமதிய்யாக்கள் நபியென்று கூறியதால் காபிர்கள் என பத்வா கொடுத்து விட்டார்கள்.  ஆனால் பெரும்பாலோர் அவரை ஒரு முஜத்தித் என்று தான் கூறுகின்றோம் என்கிறார்கள்.  அப்படியாக அவர்களுக்கு காபிர் என ஃபத்வா கொடுத்தவர்கள், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கூறக் கூடாதென சொல்பவர்களை முஸ்லிம்கள் என வைத்திருக்கின்றனர். அவர்களுடன் உறவாடுகிறார்கள்.  அவர்கள் வீடுகளில்  சாப்பிடுகிறார்கள்.  அவர்களுடன் நெருங்கிய உறவாயிருப்பதால் அவர்களை  காஃபிர்கள் என்று கூற முடியாதிருக்கின்றனர்.  இது எப்படி பெரிய பாபம் பாருங்கள்.  இதனை நம்  சுன்னத் வல் ஜமாஅத் சரியான முறையில் இது கூடாதது தான் எனச் சொல்லவில்லை என்றால் இன்னுமிருக்கும் பிள்ளைகள் எல்லோரும் நிச்சயமாக கெட்டுப் போவார்கள்.  அந்தநிலைக்குத்தான் இன்று வந்திருக்கின்றனர்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா


      ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுக்குத் தெரியாமல் - அறியாமல் ஷிர்க் செய்தார்களாம்.  இப்படி ஒரு ஹதீஸைப் போட்டு இணையதளத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.  ஒரு காஃபிர் இதனை செய்திருக்கிறான்.  முஸ்லிம் பெயர்  வைத்துக் கொண்டு இவ்வாறு செய்ததால் இவனை இஸ்லாமிய காஃபிர் என்று சொல்ல வேண்டும். முஸ்லிம் பெயர் வைத்த காஃபிர்.

                                 

                                                               (தொடரும்)

 

 இறை கேட்டது :  மனித இனத்தைப் பற்றி என்ன நினைக்கின்றீர்?


யான் விடுத்தது : இறைவா, குழந்தை பிறந்தபோது அது பரிபூரணத்திலிருந்து (உன்னிலிருந்து) பிரிவுபட்டிருந்த போதும் அதுதன் தாற்பரியத்தில் நீயாகவே இருந்தது. அதற்குச் சிந்தனையிருக்கவில்லை. எந்தப் பொறுப்புமிருக்கவில்லை. தெய்வீகக் கடாட்சம் அதற்கு இருந்தது. அது உன்னிலிருந்து வெளியான போதும் அது வெளியான சம்பவம் அதற்குத் தெரியவில்லை.  அதற்கு எந்த வகையான விதிவிலக்குகளும் இருக்க வில்லை. உன்னில் நீயாகவே இருந்த குழந்தை சிறிது சிறிதாய் வளர்ந்து ஐம்புலன்களும் வினைபுரியத் தொடங்கியபோது பிள்ளை அன்றாட அநுபவங்களைப் பெறவும் நான் நீ எனும் வேற்றுமையை அறியவும் தொடங்கிற்று.  தான் வந்த வழியை முற்றும் மறந்திடவாயிற்று.  விதிவிலக்குகளும் உண்டாயின.  அது மனிதனாயது.  தன் முன்னைய நிலையை மறந்து நான் வேறு, நீ வேறு எனும் பிரிவாகிய இணைவைப்பை அவன் உண்டாக்கிக் கொண்டான்.  தான் மனம் போன போக்கில் போகவும், அழிவு வேலைகள் செய்யவும் உண்மைக்கு மாறாக நடக்கவும், மானிட நேயம், ஐக்கியம், இரக்கம் முதலானவைகளை உதறித்தள்ளிவிடவும் முற்பட்டு மறமாந்தனாய் மாறிவிட்டான்.  உன்னிலிருந்து வேறுபட்டு விட்டான்.  இதனால் தன்னை மறந்த குற்றவாளியாக மாறினான்.  தன்னை மறந்துவிடாது, தன்னையறிந்து வாழப் படைக்கப்பட்ட மனிதன், இந்நிலையடைந்தமையால் தான் வந்த பாதையை மறுபடியும் நினைவுகூற ஏவப்பட்டான்.  தான் வந்த பாதையை நினைவு கூர்ந்தவன் பூரண மனிதனானான்.  இதை மறுத்தவன் மறுப்பாளனானான்(காபிரானான்). 

சங்கைமிகு ஷைகுநாயகம்அவர்களின் தாகிபிரபம் நூலிலிருந்து....