கொடிக்கால்
பாளையம்
மாதக்கூட்டத்தில் மலர்ந்தவை
கலீஃபா முஹம்மது காலித் அவர்கள் உரையிலிருந்து..
- இறையை விளங்காமல் கோடி முறை வணங்கினாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
- பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உடம்பளவில் பார்த்தால் மட்டும் போதாது. அவர்களின் ஆத்மார்த்த நிலையை- உள்ளார்ந்த நிலையை புரிவதுதான் மிக முக்கியம். அப்போதுதான் ஹக்கை - இறையை முழுமையாக அறியமுடியும்.
- ஃபிர்அவ்ன்,மன்சூர் ஹல்லாஜ் (ரலியல்லாஹு அன்ஹு) இருவருமே தன்னை இறையென்றார்கள். ஆனால் இரண்டுமே வேறு வேறு நிலைகள்.
- கவ்துல் அஉளம் (ரலி) அவர்கள் சகலமும் கற்றவர்கள்: இருந்தும் ஷைகைத் தேடினார்கள்.
- வஹ்ஹாபிகள் ஷிர்க் என்று சொல்லிக் கொண்டு தூய தவ்ஹீதை எதிர்க்கிறார்கள்; தவ்ஹீத் என்ற பெயரில் ´ஷிர்க்கில் இருக்கிறார்கள்.
- தனித்தனி உள்ளமை என்பதே ஷிர்க்; இறையைத் தவிர வேறில்லை என்பதே தவ்ஹீத்.
- மறைந்த மகான்களைப் போற்றிக் கொண்டாடும் மக்கள்; வாழும் மகானை மறந்து விடுகிறார்கள் .
- உலமாக்கள் மார்கத்தின் பெயரால் திரையிடப்பட்டார்கள்.
- நொன்பு - உணவில்லாமல் இருப்பது மட்டுமல்ல நொன்பு.இரண்டுபடுத்தாமல் (ஷிர்க்) இருப்பதெ நொன்பாகும்.
- நுபுவ்வத் - இறையை மறைத்துக் கொண்ட தண்மை.
- விலாயத் - இறையை வெளிப்படுத்தும் தன்மை.
மவ்லவி ஹாஃபிள் புகாரீ மவ்லானா உஸ்மானீ அவர்களின் உரையிலிருந்து...
- எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நோக்கத்திற்காக வந்தார்கள். 1. வேதத்தை வெளியாக்க. 2. மக்களை தூய்மைபடுத்த. 3. ஹிக்மத் - ஞானத்தை விளக்கிக் கூற.
- எங்கு நோக்கினும் அல்லஹ்வின் முகம் என்பது அனைத்தும் ஹக்கு என்பதே.
- நுபுவ்வத்தை விட விலாயத் உயர்ந்தது என்று அபாயஜீதுல் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
- ஆரம்பமாக வெளியானது விலாயத்தே. பிறகு தான் நுபுவ்வத் வெளியானது.
- எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், “ஒரு நேரமுண்டு அந்த நேரமானது எனக்கும் இறைவனுக்கும் இடைவெளியில்லாததாகும்” என்று
- ஒரு சமயம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பார்க்கச் சென்ற சமயம் யாரது என்றார்கள் நபிகளார் அவர்கள். “நான்தான் ஆயிஷா”எனவும் “எந்த ஆயிஷா?” என நபிகளார் கேட்க, “உங்கள் மனைவி ஆயிஷா” என ஆயிஷா நாயகியார் பதிலிறுத்தார்கள். “எந்த மனைவி ஆயிஷா” என மீண்டும் அண்ணலாரவர்கள் கேட்க,ஆயிஷா அன்னையவர்கள், “நான் அபூபக்கரின் மகள் ஆயிஷா” என்றார்கள். “எந்த அபூபக்கர்”என்றும் திருப்பிக் கேட்டனர். இச்சம்பவம் பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தந்தையார் அபூபக்கர் ஸித்தீக்குல் அக்பரவர்களிடம் கூற “அப்படியா அது மிக உன்னதமான நேரமாயிற்றே” என்று ஆச்சர்யமடைந்தார்கள்.
- ஒரு சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வராந்தாவில் உலவிக் கொண்டிருந்தபோது அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் எனக் கேட்டார்கள். அதற்கு அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “இறைவன் இப்போது உலவிக் கொண்டிருக்கின்றான்” என பதிலிறுத்தார்கள். “சரியாகச் சொன்னீர் அலீயே” எனப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆமோதித்தார்கள். (அந்த அளவுக்கு இறைவனை அலீ ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் விளங்கியிருந்ததால் தான் இந்த பதிலை அவர்களால் சொல்ல முடிந்தது. ‘அறிவின் தலைவாயில்’ என அண்ணலரவர்களால் மகுடம் சூட்டப்பட்டவர்களல்லவா அலீ ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள்.)
- “நான் பார்க்காத ரப்பை வணங்கியதில்லை”, என்றும்“ஆரிபீன்களின் செயல் இறையின் செயல்” எனவும் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நவின்றுள்ளார்கள்.
- இறையை அறிந்து அவனை வெளியாக்கி நம்மை மறைத்துவிட வேண்டும்.
- யஹ்யப்னு முஆத் (ரலி) அவர்கள் தங்கள் மாணவரிடம் “நீ அபாயஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்தால் நன்று” எனக் கூற அம்மாணவரோ நான் அவரின் இறைவனையே பார்த்துக் கொண்டிருக்கும் போதுஅவரை எதற்குப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். ஆனால் யஹ்யப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இல்லை.. இல்லை அவர்களைப் பார்த்துவா என மீண்டும் மீண்டும் வற்புறுத்த அம்மாணவரும் அபாயஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இருப்பிடம் (குகை) சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் யா அபாயஜீத்” என்று வெளியில் நின்று ஸலாமுரைத்தார். சிறிது நேரத்தில் “வஅலைக்குமுஸ்ஸலாம்” என்றவாறு அபாயஜீத் ரலியல்லாஹு அவர்கள் வெளியில் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் மாணவர் மயங்கி விழுந்துவிட்டார். ஏனெனில், இத்தனை நாள் ஹக்கெனக் கண்டு வந்தது (நிஷ்டையில்) அபாயஜீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத்தாம்.
- மன்சூர் ஹல்லாஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது தீர்ப்பு எழுத மகான் ஜுனைதுல் பக்தாதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமரும் போது “ஸூஃபி உடையை (நிலையை)க்கழற்றிவிடுவார்கள்” என மன்சூர் ஹல்லாஜ் அவர்களே கூற, ஜூனைதுல் பக்தாதீயவர்களும் அரசாங்க நீதிபதி உடையை அணிந்து கொண்டார்கள் (கவனிக்க : ஷரீஅத்படி ‘நானே ரப்பு’ என்றது தவறாயிருக்கலாம். மெய்ஞ்ஞானத்தின்படி மிகச்சரியே.)
தலைமையுரையாற்றிய ஹாஜி K.P.M.பஷீர் அஹமது அவர்கள்.....
இக்காலத்தில் விரல் ஆட்டுவதும் நெஞ்சில் கை கட்டுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தாலும் நாம் மிகவும் கவனிக்க வேண்டியது தூய தவ்ஹீதைத் தான். மேலும் “இறைவனுக்கு உருவம் உண்டு” என்று மாபாதகமாக பிதற்றித்திரியும்கூட்டத்தின்
விஷயத்தை மிக மிக கண்காணிக்க வேண்டியள்ளது. இம்மாபெரும் தவறுகள் ஏற்படக் காரணமே தவ்ஹீதை அறவே விளங்காததால்தான். அதை விளங்கினால் எல்லாம் சரியாகி விடும். இத்தூய தவ்ஹீதை விளங்கத்தான் மாதாந்திரக் கூட்டத்தை சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.