• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  அழியா உடல்!


அழியா உடல்!


பாகவி பின் நூரி, சித்தரேவு


 

கொச்சி - டிசம்பர் 6


      “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” என்று கூறுவார்கள்.


      அந்த ஆறடி நிலம்கூட புதைக்கப்பட்ட சடலம் மக்கிப் போகும்வரைதான். அதற்குப் பின், அந்த ஆறடி நிலம்கூட சொந்தம் இல்லாமல் போகிறது.  பிறப்பால் மனிதனாகப்பிறந்தவனுக்கு. ஆனால் புதைக்கப்படட ஒரு சடலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்காமல்,அழுகாமல், எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியேஉள்ளதென்றால் அது வியப்பிற்குரியது தானே! ஆம்! கொச்சியில் ‘தத்தாமாபர் ஜமாஅத் மசூதியிலுள்ளமயானத்தில் பூமியைத் தோண்டும் போது 10 ஆண்டுகளுக்கு முன்னதாக புதைக்கப்பட்ட சடலம் எந்தவிதமாற்றமுமில்லாமல் புதைக்கப்பட்ட அன்று எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையிலே உள்ளது.


      இந்த மயானத்தை(கபரஸ்தானை) 10 ஆண்டுகளாக யாரும் பயன் படுத்தியது கிடையாதாம்.  இதனைப் புதுப்பித்து மீண்டும் பயன் படுத்துவதற்காகபூமியைத் தோண்டினார்களாம்.  அப்போதுதான் அனைவரும்வியப்புக்குள்ளானார்கள்.


      இந்தச் சடலம் புதைக்கப்பட்டஇடத்தில், ஊதுவத்திகளைக் கொளுத்தி வைத்துள்ளனர்.  ஏராளமானமுஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதாரும் இங்கு வந்து அந்தச்சடலத்தைப் பார்த்துச் செல்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை ஓதுகிறார்கள்.  இந்தச் சடலம் புளிய மரத்தின் கீழ் கண்டு பிடிக்கப்பட்டது.


      இந்த மசூதி கட்டப்பட்டு150 வருடங்கள் ஆகின்றன.  இந்த சடலத்தின் நரைத்தசெம்பட்டையான தலைமுடி கூட அப்படியே உள்ளது. இந்தச் சடலம் புதைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதை யாராலும்திட்டவட்டமாகக் கூற முடியாத போதிலும் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு சடலங்களைப் புதைப்பதுகிடையாது என்று மசூதி இமாம் கூறினார்.


      இந்த அரிய கண்டுபிடிப்பைரகசியமாக காக்கவே மசூதி வட்டாரங்கள் கருதியதாகவும் ஆனால் செய்தி எப்படியோ காட்டுத்தீ போல பரவி விட்டதாகவும் தெரிவித்தனர். சனியன்று பிற்பகலில் அந்தக்கல்லறை  மீண்டும் மூடப்பட்டது.  முஸ்லிம் மத சம்பிரதாயப்படி ஒரு சடலம் புதைக்கப்பட்டுவிட்டால்அதனை மீண்டும் எடுக்கக் கூடாது என்பதாகும்.


      இதய அளவில் ‘குர்ஆனை’உணர்ந்தவர்களின் பூத உடல் அழிவதில்லை என முஸ்லிம் சமுதாயம் நம்பிக்கை கொண்டுள்ளது.


(செய்தி தினமணி நாளேடு 7-12-1984  ஹிஜ்ரி : 1303 -1405)