• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  மறைந்தும் மறையாமல்


மறைந்தும் மறையாமல்

 

மெட்டு : மலர்ந்தும் மலராத... (பாசமலர்)

ஆக்கம் : இளங்கவி. அ. நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் M.A.,

 

 

மறைந்து மறையாமல் நிறைந்து அரசாளும்

யாஸீன் கொடை வள்ளலே - திரு

முல்லை நகர்தேடி வந்து வரம் கேட்போம்

தந்து அருள்வீர்களே -

அலியின் வழிமேவி கெளதின் ஒளி வாங்கி

இலங்கும் திருத்தோன்றலே - கலீல்

நாதர் தமைத்தந்து நாளும் எமைக் காக்கும்

ஞான மறை தாங்களே...        (மறைந்தும்)


ஞானக் கருகொண்டு வாழ்வின்பொருள்தந்து

வாழச் செய்தீர்களே - எமையாளச் செய்தீர்களே

தன்னை அறிகின்ற தன்னில் நிறைகின்ற

தன்மை வளர்த்தீர்களே உண்மை உரைத்தீர்களே

தன்னை அறிகின்ற தன்னில் உறைகின்ற

தன்மை வளர்த்தீர்களே.         (மறைந்தும்)


ஹா´ம் குலச்செண்டு காதிர் எனக் கொண்டு

ஹல்கின் அரசானதே - நம் கல்பில்அரசாளுதே.

யாஸீன் நபியயன்றும் யாஸீன்மறையயன்றும்

பேசும் மொழியானதே - இறை பேசும்மொழியானதே.

யாஸீன் நபியயன்றும் யாஸீன்மறையயன்றும்

பேசும் மொழியானதே           (மறைந்தும்)


தாயின் அன்பென்ன தந்தைபரிவென்ன

யாவும் ஈடாகுமா - குரு யாஸீன்போலாகுமா?

உள்ளம் உடைந்தாலும் உறுதிகுறைந்தாலும்

காக்கும் கரமல்லவா - நாம்கேட்கும் இடமல்லவா?

உள்ளம் உடைந்தாலும் உறுதி குறைந்தாலும்

காக்கும் கரமல்லவா.           (மறைந்தும்)


நாட்ட தேட்டங்கள் வறுமைவாட்டங்கள்

கேட்டுக் காப்பாற்றுவீர் -பிணி நீக்கிக் காப்பாற்றுவீர்

நாடிப் போகின்ற வேண்டிச்சேர்கின்ற

கூட்டில் எமையாக்குவீர் -என்றும் கூட்டில் எமையாக்குவீர்.

நாடிப் போகின்ற வேண்டிச் சேர்கின்ற

கூட்டில் எமையாக்குவீர்.        (மறைந்தும்)


கிரங்கும் நேரங்கள் மயங்கும்பாரங்கள்

இரங்கி அருளாற்றுவீர் -குருவருளில் இளைப்பாற்றுவீர்

இந்த உடலும் உயிர்யாவும்மறைந்து மரித்தாலும்

தங்கள் அடியாகவே வேண்டும்தங்கள் அடியாகவே

இந்த உடலும் உயிர்யாவும்மறைந்து மரித்தாலும்

தங்கள் அடியாகவே.            (மறைந்தும்)