• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  மெய்யொளி பதில்கள்


மெய்யொளி பதில்கள்

 


இறையை அறிந்த பின்னர்???

 

நீங்கள் இருக்க மாட்டீர்களே!



 

நீங்கள், உங்கள் ஷ­ய்கை அல்லாஹ் எனக்கூறுகிறீர்களாமே..... அப்படியா?

 

இல்லை.  அல்லாஹ்வைத் தான் எங்கள் ய்காக (தலைவனாகக்)கருதுகிறோம்.


 


அன்புக்கு அன்புபரிகாரமாகாது... அன்புக்கு நன்றி தான் பரிகாரம் என ஒருவர் கூறிகிறார்;  தங்களின் விளக்கம்?

 

வெறுப்பில் நன்றிதோன்றுவதில்லை.


 


“தேங்காய்ப் பால்” புகட்டும்பாடம் என்ன
?

 

தேங்கா -          பால் -

நிலையற்ற .    இடம், உரிமை, குணம்,                 இயல்பு,கடமை,                                      பாலுணர்வு

 



மெய்யூர் எது? பொய்யூர் எது?

 

இல்லாமல் இருந்தது மெய்யூர்

இல்லாமல் இருப்பது பொய்யூர்



 

ஹள்ரத் இப்ராஹீம் (அலை)அவர்கள் தாம் பெரிய சிலையை உடைத்தார்கள், நம்ரூத் கேட்ட போது நான் உடைக்கவில்லைஎன்று கூறினார்கள்! இது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறிய பொய்தானே? என ஒருவர் வாதாடுகின்றார்! தங்களின் பதில் என்ன?

 

நெருப்பு சுடும் என்பது உண்மை;

நெருப்பு சுடவில்லை என்பதும்உண்மை.



 

“அல்லாஹ்வும் பொய் சொல்வான்என்பதாக தப்லீக் தலைவர் இல்யாஸ் மெளலவி தனது தக்விய்யத்துல் ஈமான் என்னும் நூலில்எழுதி உள்ளார்! தங்களின் விளக்கம் என்ன?

 

துரியோதனன் பார்த்த உலகு.



 

“நான்” தானா “அது”?

 

“அதுவே” தன்னில் தானான் “நான்”



 

என் கேள்விக்கு என்ன பதில்?

 

என் அறிவு



 

பிரபஞ்சம் இயங்குகின்றதா? இயக்கப்படுகின்றதா? எப்படி?

 

“லா ஃபாஇல இல்லல்லாஹ்”



 

நெருக்கடியான வாழ்வில் வெற்றிபெற மிகவும் உதவுவது சத்தியமா? சாதுர்யமா?   

 

சத்தியம் (ஹக்); சாதுர்யம் ஹக்கினுள்அடங்கும்.



 

இறை விரோதி யார்? இறை துரோகியார்?

 

இறையின் விரோதி - சைத்தான்

இறையின் துரோகி - அஜாசீல்



 

ஞானிகளிற் சிலர், இறையைப்பெண்ணாகப் பாவித்து கவிகள் புனைவது ஏன்? அதில் ஏதும் விசே­ம் உண்டா?

 

சுவைகள் மாறுபடுகின்றன!



 

‘இல்லை’ என்பது (எப்போதுஎப்படி) ‘உண்டு’ என்றாகும்?

 

இல்லை என்பது இல்லையயன உணரும்போது.



 

“கர்பலா”?

 

சிவந்த மண்; தியாக வரலாறு!



 

அஹ்லபைத்துகள் வாழ்வில்சோதனைகளே மிதமிஞ்சி இருக்கின்றனவே? ஏன்?

 

சாதனையின் நாயகர்கள் அல்லவா!



 

நவீன யோகாவின் மூலம் ஞானப்படித்தரத்தை அறிந்து கொள்ள முடியுமா? அடைந்து கொள்ள முடியுமா?

 

உடலை ஓம்பினார் உயிரைஓம்பினார் என்றார் திருமூலர்.  யோகா மூலம்உடலை ஓம்ப முடியலாம்.



 

“அல்லாஹ் வழங்குகின்றான்; நான் பங்கீடுசெய்கின்றேன்” என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளுவதன் தாற்பரியம் என்ன?

 

“நபியே! நீங்கள் எறியவில்லை.அல்லாஹ் தான் எறிந்தான் என்ற குர்ஆனிய வசனத்தின் தாற்பரியம்தான்.



 

குருவைப் பின்பற்றுவதால் இம்மைமறுமையில் வெற்றி பெறுவோம் என்பதற்கு என்ன உத்திரவாதம்? என ஒருவர்கேட்கிறார்! தங்கள் பதில் என்ன?

 

பெருமானார்  அவர்களைப் பின் பற்றுவதால் இம்மை மறுமையில்வெற்றி பெறுவோம் என்பதற்கு என்ன உத்திரவாதமோ, அதே தான்.