• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  வஹாபிகள் சஹாபிய வேடங்களில்.. 


வஹாபிகள் சஹாபிய வேடங்களில்.. 


தொடர்.... தொடர் எண்-19


 

    மேலும், ‘புதூஹாத்துல்அஹ்மதிய்யா - பீ- மினஹில் முஹம்மதிய்யா . 89 ஆ வது பக்கத்தில், அல்லாமா ஷைகு சுலைமான் ஜமல் (றஹ்) அவர்களும் இப்படியே கூறுகின்றார்கள்.


      “அல்லாஹ் ஒருவனைத்தவிர்த்து  வேறு யாரிடமும் எந்தவித உதவியும்தேடவே கூடாது“ என்ற வாதத்திற்குச் சிலர்  இய்யாக்கநஃபுது-வஇய்யாக்க நஸ்த்தயீன் என்ற            (1:4) ஆயத்தை மேற்கோளாகக் காட்டுவதுடன், நபியோ, றஸுலோ, குத்போ, வலியோ யாருக்காயினும் லாபநஷ்டத்தை உண்டாக்கும் சக்தி உண்டென்று நம்புவதும்,அவர்களிடம் உதவி தேடுவதும் மாபெரும் குற்றம் என்பதாய் விரிவுரையும் கூறுகின்றனர்.இது அவர்களது அறியாமையையே காட்டுகின்றது. ஏனெனில், ஸூரத்துல்ஃபாத்திஹா. அம்ரு - நஹீ, ஏவல் விலக்கல், மஸாயில்களை விட்டும் நீங்கியது. அதில் கட்டுப்பட்டதல்ல என்று தப்ஸீர் அஹ்மதிய்யாகூறுகின்றது.


      “ ஏவல் , விலக்கல் (அம்ரு , நஹீ)உடைய ஆயத்துக்கள் குர்ஆனின் ஐந்நூறும், ஹதீதில் மூவாயிரமும் காணப்படுகின்றன.  இய்யாக்க நஃபுது - வ -இய்யாக்க நஸ்த்தயீன் “என்ற(1:4) ஆயத்து அதில் சேர்ந்ததல்ல “ என்று வஸீலா ஜலீலா, 46 ஆம்பக்கத்தில் சொல்லப்படுகிறது              மேலும், அதே பக்கத்திலேயே, உன்னை ஒருவனென்று உறுதிகொண்டு உனது  வணக்கத்திற்கு உன்னிடமே உதவி  தேடுகின்றோம் என்பதே 1 : 4 ஆயத்திற்குப் பொருளாகும்என்பதாக யஸய்யிதுனா இபுனு அப்பாஸ் (றலி ) அவர்களைக் கொண்டு இக்ரிமா (றலி) ரிவாயத்துச்செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


      ஆகவே, ஏவல் விலக்கலில் சேராத ஒன்றைச் செய்தல் ஆகுமெனவிளங்கக் கிடக்கின்றது. இந்த ஆயத்து ஏவல், விலக்கலுடையது அல்லவாகையால், அன்பியா அவுலியாக்கள் பால் உதவியயாத்தாசை தேடக்கூடாதென்பதற்கு ஆதாரமாகாது;  உதவி தேடக் கூடாதென்றிருக்குமே யானால் (வஸ்த்தயீனூ பிஸ்ஸபுரி வஸ்ஸலாத்தி) பொறுமையைக்கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் என்ற வேதவாக்காகும்,(வப்த்தகூ இலைஹில் வஸீலத்த)“ அவனளவில் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்“ என்ற வேதவாக்கும், (5:35) வந்திருக்காது. (உத்லுபுல் ஹவாயிஜஇலாதவிர் ரஹ்மத்தி மின் உம்மத்தீ)  என்னுடையறஹ்மத்து உடைய கூட்டத்தார் (அவுலியாக்க) களிடத்தில் உங்களுடைய  தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்  என்ற ஹதீதும், (இதா தஹய்யர்த்தும்பில் உமூரி  பஸ்த்தயீனூ மின் அஹ்லில் குபூர்) “கருமங்களில் நீங்கள் திகைப்படைந்துவிடுவீர்களேயானால் கபுருகளை உடையவர்களை (அவுலியாக்களை)க் கொண்டு உதவி தேடுங்கள்” என்றஹதீதும், “எவருடைய கால்நடைப் பிராணியாவது,காணாமற்போய்விட்டால் அல்லாஹ்வின் அடியார்களே, அல்லாஹ்உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக . தாங்கள் எனக்கு உதவிசெய்யுங்கள் என்று கூப்பிட்டுக்கேளுங்கள்” என்ற ஹதீதும்,


      “எவருக்காவது உதவிதேவைப்படுமானால் அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவிபுரியுங்கள் !   அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவிபுரியுங்கள்! அல்லாஹ்வுடைய அடியார்களே ! எனக்கு உதவிபுரியுங்கள் !  என்று அவர் கூறட்டும்”  என்ற ஹதீதும், மற்றும் இவைபோன்ற ஹதீதுகளும் வந்திருக்கத் தேவையில்லை.


      முஹக்கிக்குல் ஹனபிய்யி, அஷ் ஷைகு அப்துல் கனி நாபல்ஸி (றஹ்)  அவர்கள் , திமஷ்கு நகரில்  ஸலீமா என்ற இடத்தில் குர்ஆன் ­ரீபுக்கு வியாக்கியானவிளக்கம் செய்து கொண்டிருக்கையில், (யா அய்யுஹல்லதீன ஆமனூ இஸ்த்தயீனூபிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி) ஓ ஈமான் கொண்டவர்களே ! பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் ! என்ற (2:153) ஆயத்தைச்சுட்டிக்காட்டி, “ ஆண்டவனைத் தவிர்த்துப் பிறரிடம் உதவிதேடக்கூடாது என்று சொல்கிறவனுக்கு இது ரத்தாகும், அப்படிச்சொல்கிறவன் காபிராகிவிட்டான்;   ஏனெனில் குர்ஆனுடைய நஸ்ஸுக்கு (தெளிவாகவும், வெளிப்படையாகவும்வந்துள்ள ஏவலுக்கு) மாற்றமாக இருக்கும் காரணத்தினால்; தேவைகள்நிறைவேற  அவுலியாக்களைக் கொண்டு உதவிதேடுவதே சிறந்த வழியாகும்” என்று கூறினார்கள். இவ்விபரத்தை அல்லாமா ஷைகு யூஸுபுன்னபஹானீ, மிஸ்ரீ (றலி ) அவர்கள், ­வாஹிதுல் ஹக்கு 251- வதுபக்கத்தில் வரைந்துள்ளார்கள்.


      “ஜீவிய காலத்தில் உதவி தேடுவதற்கு எவர்கள் தகுதிதயானவர்களோஅவர்களிடம் வபாத்திற்குப் பிறகும் உதவி தேடலாம்” என்பதாக இமாம், ஹுஜ்ஜத்துல் இஸ்ஸாம் கஸ்ஸாலி ( றஹ் ) அவர்களைக் கொண்டு அல்லாமா ஷைகு அப்துல் ஹக்கு முஹத்திதுத்திஹலவி ( றஹ் ) அவர்கள்  ‘அ´  அத்துல் லமஆத் - தர்ஜுமா மிஷ்காத்’ முதல்பாகத்தில் வரைந்துள்ளார்.


      “கஷ்ட காலத்தில் அவுலியாக்களிடத்தில் இரட்சிக்கும்படி உதவிதேடுதல் கூடுமா?  “ என்று இமாம் ­ஹாபுத்தீன் றமலீ , ஷாபியீ (றஹ்) அவர்களிடத்தில் வினவப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கமாவது”                                  “அன்பியா,அவுலியா, ஸாலிஹீன்க ளிடத்தில் இரட்சிக்கும்படிஉதவி தேடுதல்கூடும். மவுத்துக்குப் பிறகும் விடுபட்டுப் போகமாட்டா. அவர்கள்ஹயாத்துள்ளவர்கள். பர்ஜகுடைய ஆலத்தில் தொழவும் செய்கின்றார்கள். ஹஜ்ஜும் செய்கின்றார்கள்.இவ்வாறு ஆதாரமான ஹதீதுகள் வந்திருக்கின்றன மேற்சொன்ன விபரம், அல்புதூஹாத்துல் அஹ்மதிய்யா, 90 - வது பக்கத்தில்,அல்லாமா ஷைகு “   ஸுலைமானுல்ஜமல் (றஹ்) அவர்களும், ­வாஹிதுல் ஹக்கு,  69 ஆம்  பக்கத்தில் அல்லாமா ஷைகு யூஸுபுன் னபஹானீமிஸ்ரி (றஹ்)   அவர்களும்எடுத்துரைக்கிறார்கள். “அவுலியாக்களிடத்தில் உதவி தேடும் வி­ய சம்பந்தமாய்கஷ்பு  (கல்புக்கண்) உடைய மஷாயிகுகளைக்கொண்டுள்ள ரிவாயத்துக்கள் அநேகமுண்டு. இது பற்றி கிதாபுகளிலும் ரிஸாலாக்களிலும்பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


       வாதத்திற்கு மருந்துண்டு..பிடிவாதத்திற்கு மருந்தில்லை யாதலால் பிடிவாதமாக மறுப்பவர்களுக்கு அவை பிரயோஜனங்கொடுக்கமாட்டா. ஆகையால்,அது பற்றி இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை. இத்தகையபிடிவாதத்தன்மையை விட்டும் ஆண்டவன் நம்மைக் காப்பாற்றிக் கொள்வானாக! என்பதாகஷைகுல் ஹிந்து, அப்துல் ஹக்கு, முஹத்திதுத்திஹ்லவி (றஹ்) அவர்கள், ‘அ´ஃஅத்துல் லமஆத் தர்ஜுமாமிஷ்காத்’ பாகம் 3,பக்கம் 375 ல் கூறுகின்றார்கள்.


      மக்ரிபு தேசத்தில் வலுப்பமான பகீஹாயும், பிரபல்யமானஆரிபாயு மிருந்த யஸய்யிது அஹ்மது இபுனு ஜர்ருக்குஷ் ஷாதுலி (றஹ்)  அவர்கள் கூறுகின்றார்கள் :- “அவுலியாக்கள்ஹயாத்தில் செய்யும் உதவி வலுப்பமானதா ? மெளத்திற்கப்பால்செய்யும் உதவி வலுப்பமானதா?” என்று ஷைகு அபுல் அப்பாஸ்ஹள்ரமீ அவர்கள் என்னிடம் வினவியதற்கு, மெளத்தான பின்புஅவர்கள் புரியும் உதவி தான் மிகவும் வலுப்பமானது என்று கூறினேன். “எனது இந்தவிடையை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்” என்பதே, இவ் விபரம் ‘அ´ஃஅத்துல் லமஆத் -தர்ஜுமா மிஷ்காத்’ 1 ஆம்  பாகம், 633 -வது  பக்கத்தில்காணப்படுகின்றது. “மெளத்திற்குப்  பிறகு அவுலியாக்களிடத்தில் உதவி தேடலாமென்பது மிகுதமான மஷாயிகுமார்களின் தீர்மான மாகும்.  ஆரிபீன்களில், உலமாக்களில் மிகுதமான பேர்களுடையஅகீதா (நிர்ணயம்) இதுவே தான் என்பதாக இமாம் ஷைகு அபூஸயீது ஸலமீ ஹனபீ (றஹ்) அவர்கள்­ரஹ் பர்ஜக்கில் கூறுகின்றார்கள். மேலும், அவர்கள், அதில்மெளத்தை இரு வகையாக விபரிக்கின்றார்கள். ‘மெளத்திற்குப் பிறகு ரூஹும் நித்தியமானது;அழிவற்றது. ஆனால் இந்த வெளிரங்கமான தேகம் அழிந்துவிடும். இவர்கள்சாமானியர் களான அவாம்கள். இவர்கள் உதவி செய்ய சக்தியற்றவர்கள். இது மற்றொரு வகை.“மெளத்திற்குப் பிறகு ரூஹும் அழியாது, உடலும் அழியாது,உள்ரங்கமான உயிருடலுடன் ஹயாத்துடனே என்றுமிருப்பர்.  இவர்கள் அன்பியா, அவுலியாக்கள்,உயிரோடிருப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்ய சக்தி பெற்றவர்கள். இதுமற்றொரு வகை. ஸஹீஹான ஹதீதுகளில் இதற்குப் பலமான ஆதாரங்களுண்டு. இதை எவரும் மறுக்கசக்தி பெற மாட்டார்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.  வஸீலா - சிபாரிசு - இஸ்த்திம்தாது -இஸ்த்திகாதா - இஸ்த்திஷ்பா - இஸத்தி ஆனா முதலிய பதங்கள் பலவிதமாக இருப்பினும் இவைகருத்தில் ஒன்றே.


      ஒத்தாசை தேடல், சிபாரிசு தேடல், உதவி தேடல், இரட்சிப்புத் தேடல், நோய் நிவாரணம் பெறத் தேடல்,உபகாரம் தேடல் முதலியன முறையே அவற்றின் பதப்பிரயோகமாகும்.                  


(தொடரும்)