• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்.. 


தொடர்...

சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்.. 


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத் , திருச்சி.


 

    இமாம் ஷாஃபிஈ ரஹ்மத் துல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட வினோதமானவினாக்களும் வியப்பான விடைகளும் தொடர்கின்றன.


வினா :

      ஜைது என்பவர் அம்ருஎன்பவரை ஒரு கம்பினால் தலையில் அடித்து விட்டார். ஓர் அடிதான் அடித்தார்.  பின்னர் அம்ருக்கு அந்த அடியினால் ஒரு கண்பார்வைபோய்விட்டது என்றும் தனது மூக்கில் வாசம் செய்யும் உணர்வு போய்விட்டது என்றும் சைக்கினைஇல்லாமல் பேசக்கூட இயலவில்லை என்றும் சொன்னார். அம்ரின் கூற்றை எவ்வாறு நம்புவது?


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் :

      அம்ரை சூரிய ஒளியில்நிறுத்தி அவரை சூரியனைப் பார்க்கச் செய்ய வேண்டும்.  அப்போது அவர் கண்ணைச் சிமிட்டாமல் இருந்தால் ஒருகண் பார்வை போய்விட்டது என்று அவர் சொல்லியது உண்மை.  மேலும் உரைப்பான பொருளின் (மிளகாய்) புகையை மூக்கில்உறிஞ்சச் சொல்ல வேண்டும்.  அப்போது மூக்கில்தண்ணீர் வராதிருந்தால் அவர் மூக்கின் வாசம் போய்விட்டது என்பது உண்மை.  மேலும் அம்ரின் நாவில் ஊசியை லேசாகக் குத்திப் பார்க்க வேண்டும்.  அப்போது நாவிலிருந்துகருப்பான ரத்தம் வந்தால் அவரால் பேசமுடியவில்லை என்பது உண்மை.



வினா :   

      ஜைது, காலிது என்னும் இருவர் ஒரு வீட்டில் குடியிருந்தார்கள்.  ஜைது கால் சருகி கீழே விழுந்து இறந்து விட்டார்.  உடனே காலிதுடைய மனைவி அவருக்கு ஹராமாகிப் போனாள்.  இதற்கு விளக்கமென்ன?


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

      இறந்துபோன ஜைதுதனது மகளை தனது அடிமையான காலிதுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார்.  அவர் இறந்தவுடன் காலிது அப்பெண்ணுக்கு அடிமையாகிவிடுகிறார்.  எனவே காலிதுக்கு அப்பெண் ஹராமாகி விடுகிறார்.



வினா :

      காசிம், காலிது என்னும் இருவர் ஒரு பெண்ணை மணம் பேசச்சென்றிருந்தனர்.  அப்பெண் காசிமுக்கு ஹராமாகிவிட்டாள்.  காலிதுக்கு ஹலாலாகி விட்டாள்.  இதற்கு விளக்கமென்ன? 


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள்.

      காசிமுக்கு ஏற்கனவேநான்கு மனைவிகள் இருப்பதால் அவருக்கு  அப்பெண் ஹராமாகிவிட்டாள்.  காலிதுக்கு திருமணமே ஆகாமல் இருந்ததால் அப்பெண்ஹலாலாகி விட்டாள்.



வினா :

      ஹமீதா என்னும் பெண்பிள்ளைஒருமாதத்தில் மூன்று மாப்பிள்ளைக்கு மனைவி ஆனாள். அந்த மூன்று நிக்காஹும் ஹலாலாக இருந்தது. இதற்கு விளக்கமென்ன?


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் :

      ஹமீதா ஹமலாயிருந்தபோதுஹமீதாவுடைய கணவர் ஜைது அவளை தலாக் சொல்லி விட்டார்.  பின்னர் பத்து நாளில் குழந்தை பிறந்துவிட்டது.  எனவே, ஹமீதா இத்தா இருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.  பின்னர் அம்ரு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  அவருடன் (ஜிமாஉ) உறவு கொள்ளவில்லை! அந்நிலையிலேயேகுல்உ(தலாக்) செய்து விட்டாள்.  இப்போதும் ஹமீதாவுக்குஇத்தா அவசியம் இல்லாமல் போய்விட்டது.  பின்னர்காலிது என்பவரை மணந்து கொண்டாள்.  ஆகவே,ஒருமாதத்தில் ஹலாலான முறையில், மூன்று கணவரோடுஹமீதா வாழ்ந்துவிட்டாள்  இத்தா இல்லாமல்.



வினா :

      ஜைதுக்கும், ஃபஹ்மிதாவுக்கும் திருமணம் ஆகி ஒன்றாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.  பின்னர் ஃபஹ்மிதா,ஜைதுக்கு ஒரு வருடம் ஹராமாகி விட்டாள். ஓர் ஆண்டு முடிந்ததும் ஹலாலாகிவிட்டாள்.  தலாக்கும் நிகழவில்லை.  சத்தியமும் முறியவில்லை. இத்தாவும் இருக்கவில்லை இதற்கு விளக்கமென்ன?


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் :

      ஜைதும், ஃபஹ்மிதாவும் ஹஜ்ஜுக்குப் போயிருந்தார்கள்.  இஹ்ராமும் கட்டிவிட்டார்கள்.  ஆனால் அவர்களால் அரஃபாவிற்குச் செல்ல முடியாமல்ஹஜ்ஜு தவறி விட்டது.  எனவே, அடுத்த ஆண்டு ஹஜ்ஜுச் செய்யும் வரை இருவரும் (ஜிமாஉ) உறவு கொள்வது ஹராமானது.  அதாவது : ஃபஹ்மிதா ஜைதிற்கு ஹராமாகி விட்டாள்.



வினா  :

      அல்லாஹ்வால் படைக்கப்பட்டஒரு சிறந்த படைப்பு.  அல்லாஹ் அல்லாதவருக்குஅப்படைப்பு ஸுஜூதும் செய்தது.  அல்லாஹ்வும்அதனைப் பொருந்திக் கொண்டான்.  அப்படைப்பு எது?


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் :

      நீங்கள் குறிப்பிடும்அப்படைப்பு ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸுஜுது செய்த மலக்குகளாகும். (அல்ஹம்துலில்லாஹ்).


      மேற்கண்ட இருபதுவினோதமான வினாக்களுக்கு வியப்பான விடைகளை கொஞ்சமும் தயக்கமின்றி தவறின்றி எடுத்தரைத்தஇமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அதி உன்னதமான பேராற்றலை கண்ணால் கண்டுகளிப்புற்ற ஹாரூன் ரUத் மிகவும் ஆச்சரியமடைந்து இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்களின் அறிவாற்றலை, புத்திசாலித் தனத்தை அறிவுக்கூர்மையை வியந்து போற்றிசுப்ஹானல்லாஹ்! என்று உரக்க முழக்கமிட்டார். பின்னர் இமாமவர்களைக் கட்டித் தழுவி அல்லாஹ்வால் தெரிந்தெடுக்கப்பட்டநல்லாற்றலுள்ள ஜீவ ஆத்மாவாய் இருக்கின்றீர்கள் எனப் புகழ்ந்தார்.  பின்னர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்கள் காழி அபூயூஸுப் அவர்களும் காழி முஹம்மது இபுனுல் ஹஸன் அவர்களும்எம்மிடத்தில் இருபது வினாக்கள் விடுத்தனர். அவ்விருவரிடத்திலும் நான் இருகேள்விகள் கேட்க விரும்புகிறேன்.  அவர்கள் இருவரும் அவற்றிற்குச் சரியான விடையைக்கூறுவார்களாயின் எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே! அவ்வாறு பதிலளிக்கஅவர்களால் இயலவில்லை என்றால் எனக்குஎந்தத் தங்கடமும் கொடுக்காமல்  அவர்கள்இருக்க வேண்டும்.  என் பணிகளில் அவர்கள்குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நான் மார்க்கத்தி லுள்ள வி­யங்களை குர்ஆன், ஹதீதுகளின்ஆதாரங்களின்படி எடுத்து பிக்ஹுடைய இல்மை (மார்க்க அறிவை) உலகிற்குப் பரப்பவேண்டும் என்றார்கள்.  உடனே கலீபா ஹாரூன் ரUத் இமாமவர்களே! உங்களின்விருப்பத்தின் படியே இன்ஷா அல்லாஹ் நடைபெறும். அதற்கு  நான் துணை நிற்பேன் என்றுகூறினார்.


      இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விடுத்த வினாக்கள்என்ன?        அதற்கு காழிகள் சரியான விடையளித்தார்களா என்பதனை இன்ஷாஅல்லாஹ்.... அடுத்த இதழில் காண்போம்.