• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  ஸலவாத்தின் மகிமை கேளீர்! 


ஸலவாத்தின் மகிமை கேளீர்! 


- தொகுப்பு : ஆ´குல் கலீல் ய.ளீலிது திருச்சி


 

    ஸலவாத்து துஆவின்ஆரம்பத்திலும் இடையிலும் மத்தியிலும் இருக்க வேண்டும்.  இவ்வாறு இருப்பது முஸ்தஹப்பு என்பதுஉலமாக்களின் ஏகோபித்த கருத்து.


       துஆச் செய்ய ஆரம்பிக்கும்போது முதலில் அவனைப் புகழ்ந்து அப்பால் ஸலவாத்தை ஓதி துஆவை ஆரம்பிக்கவேண்டும்.  துஆவின் ஆரம்பம் இடை, முடிவு ஆகியமூன்று இடங்களிலும் அதைக் கூறவேண்டும். ஸலவாத்து ஓதும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமையைமனக் கண்முன் நிறுத்த வேண்டும்.  அப்பொழுதுதுஆ கபூலாகும் என்று அக்கீ´ (ரஹ்) கூறியிருக்கிறார்கள்.


      ‘என்னை வாகனக்காரன் நீர்ப் பாத்திரமாக்கி விடாதீர்கள்’ என்றுநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.  வாகனக்காரன், நீர்ப் பாத்திரம் என்பதன் கருத்தென்ன?என ஸகாபாக்களாகிய நாங்கள் வினவினோம்.  அதற்கு அன்னார், ‘வாகனக்காரன்தனது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டு பாத்திரம் நிறைய நீரையள்ளி வைத்துக்கொள்கிறான்.  அதன்பின் உலூச் செய்ய அல்லதுகுடிக்கத் தேவைப்பட்டால் குடிக்கிறான்; அல்லது உலூச்செய்கிறான்.  தேவைப்படவில்லையானால் கீழேகொட்டி விடுகிறான்.  என்னை உங்கள்  துஆக்களுக்கு  ஆரம்பத்திலும்மத்தியிலும்   கடைசியிலும் நினைத்துஸலவாத்துச் சொல்லிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைலஹி வஸல்லம்அவர்கள் கூறினர் என ஜாபிர் (ரலி) அறிவித்திருக்கிறார்கள்.  (ஹதீது)


      வாகனக்காரன் நீர்ப் பாத்திரம் என்றதன் கருத்தாவது : பிரயாணி தனதுநீர்ப் பாத்திரத்தை குதிரை அல்லது ஒட்டகத்திற்குப் பின்னே கட்டி விட்டுக்கொள்வான். அதுபோல துஆவின் கடைசியில் மட்டும் ஸலவாத்தை வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்பதாம் என அல்லாமா ஸகாவீயும், ‘இத்திஹாபு’ எனும் நூலின் ஆசிரியரும் கூறியிருக்கின்றனர்.


      யாராவதொருவர் அல்லாஹு தஆலா விடத்தில் ஏதாவதொன்றைக் கேட்க நாடினால்முதன் முதலாக பொருத்தமான புகழால் அவனைப் போற்றிப் புகழ்ந்து, நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொன்ன பின் அவருடையவிருப்பத்தைக் கேட்கட்டும்; அவர் தனது விருப்பத்தில்வெற்றியடைய இதுவே சமீபமான வழி என இப்னு மஸ்வூது (ரலி) கூறியிருக்கிறார்கள்.


       “அல்லாஹு தஆலாவின்புகழும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் கொண்டுஆரம்பிக்கப்படாத துஆக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படாமல்அப்படியே தடுத்து வைக்கப்பட்டு விடுகின்றன. அவ்விரண்டையும் ஓதிய பின் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுகிறது” என்று  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறியதாக அப்துல்லாஹ் இப்னு யுஸ்ரு (ரலி) கூறியிருக்கிறார்கள்.  ஹள்ரத் அனஸ் (ரலி)  அவர்களும் அவ்வாறே கூறியிருக் கிறார்கள்.  “நீங்கள் என்மீது ஸலவாத்துச் சொல்வது உங்கள்துஆக்களுக்குப்  பாதுகாப்பாகவும் உங்கள்இறைவனின் பொருத்தத்திற்குக் காரணமாகவும் இருக்கிறது” என்று நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியருளினர் என ஸய்யிதுனா அலி (ரலி)அறிவித்திருக்கின்றார்கள்.


      “துஆக்கள் வானம் போய்ச் சேராது தடுத்து வைக்கப்பட்டிக்கிறது. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லாதவரை அவைவானத்தை அடைவதில்லை ஸலவாத்துச் சொல்லப்பட்டவுடனே அவை வானம் போய்ச் சேருகின்றன”என்றும் ஓர் அறிவிப்புக் கூறுகிறது.  நீதுஆக் கேட்கும் போது ஸலவாத்தையும் அதனோடு சேர்த்துக்கொள்.  ஏனெனில் அல்லாஹு தஆலா சில துஆக்களைஅங்கீகரிக்கலாம்;சில துஆக்களை அங்கீகரிக்கா திருக்கலாம்.  ஆனால் ஸலவாத்தை மட்டும் அவன் நிச்சயமாகஅங்கீகரிப்பான்.  அப்பொழுது அந்தஸலவாத்தின் புண்ணியத்தால் துஆவும் அங்கீகாரம் பெற்றுவிடும்” என அப்துல்லாஹ்  இப்னு அப்பாஸ் (ரலி) கூறியிருக்கின்றனர்.  “அல்லாஹு தஆலாவிற்கும் துஆவிற்கும் இடையே ஒருதிரை கிடக்கும்.  ஸலவாத்துச் சொன்னவுடனேஅந்தத் திரை கிழிந்து விடும்.  அந்ததுஆவும் ஒப்புக் கொள்ளப்படும் இடம் போய்ச் சேர்ந்துவிடும். ஸலவாத்துச் சொல்லவில்லையாயின் அது திருப்பி விடப்படும்” என்று ஸய்யிதுனா அலி (ரலி)கூறியிருக்கின்றனர்.  துஆச் செய்வதற்குச்சில அடிப்படைகளும் சில இறகுகளும் சில உபாயங்களும் சில நேரங்களும் இருக்கின்றன.  துஆ அடிப்படைக்குப் பொருத்தமாயிருந்தால் அதுபலப்படும்.  இறகுகளுக்குப் பொருத்தமாயிருந்தால்அது பறந்து வானத்தை அடையும்.  அதுநேரத்திற்குப் பொருத்தமாயிருந்தால் அங்கீகாரம் பெறும்.  காரணத்திற்குப் பொருத்தமா யிருந்தால் சித்தியடையும்.  துஆவின் அடிப்படை மனமிளக்கமும்உருக்கமுமாகும்.  அதன் இறகு என்பதுநேர்மையும் வாய்மையுமாம்.  நேரம் என்பதுஇரவின் பிற்பகுதியாகும்.  அதன் உபாயமாவதுஸலவாத்தாம் என்று இப்னு அத்தா (ரஹ்) கூறியிருக்கிறார்கள்.  ஸலவாத்துச் சொல்லாதவரை துஆ மேலிடம் செல்லாதுதடுக்கப்பட்டு  விடுகிறது’ என்ற கருத்தைப்பல ஹதீதுகள் அறிவிக்கின்றன.


      அப்துல்லாஹ்  இப்னு அபீஅவ்பா (ரலி) அறிவிப்பதாவது : ஒரு தடவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்  ஒரு தோழரின் இல்லத்திலிருந்துவெளியேறி வந்து எவராவதொருவருக்கு அல்லாஹு தஆலாயிடத்தலோ அல்லது வேறொருமனிதனிடத்திலோ ஏதாவதொரு தேவையிருந்தால் அவர்திருத்தமாக  உலூச் செய்து இரண்டு ரக்அத்துநபில்    தொழுத பின் அல்லாஹு தஆலாவைப்புகழ்ந்து போற்றி,ஸலவாத்தும் சொல்லிய பின் கீழ்க்கண்டபடி துஆ கேட்கட்டும் அதாவது :   


      பேரறிஞனும் சங்கை வானுமாகிய அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு எவரும்ஆண்டவனல்ல.  மாபெரும் அர்ய­ன்னும் ஆட்சி பீடத்தின்அதிபதியான அல்லாஹு தஆலாவை பரிசுத்தப்படுத்துகின்றேன்.  அகிலலோக நாயகனான அல்லஹு தஆலாவிற்கே எல்லாப்புகழும் சொந்தம்.  அல்லாஹ்வே! உனது  திருவருளை வருத்தித் தருபவை களையும் உனதுமன்னிப்பை அளிக்கும் நற்கிரியைகளையும் எல்லாப் புண்ணியங்களிலும் (எனக்கொரு)பாகத்தையும் சகல பாவங்களிலிருந்தும் மீட்சியையும் எனக்கு அளிக்கும்படி உன்னிடம்வேண்டி நிற்கின்றேன்.  எனது எந்தப்பாவத்தையும் நீ மன்னிக்காது விட்டு விடாதே. என்னுடைய எந்தக் கவலை யையும் நீக்காது விட்டு விடாதே.  உனக்குச் சம்மதமான எனது தேவையையும்நிறைவேற்றாது விட்டு விடாதே! ஏ சிறந்த அருளானே! என்பதாம். நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும்படி இறைவன்கட்டளையிட்டிருக்கிறான்.  அந்தக்கட்டளைப்படி ஒருவர் தமது ஆயுளில் குறைந்தது ஒரு முறை ஸலவாத்துச் சொல்வது பர்லாகும்என உலமாக்கள் கூறியிருக்கிறார்கள்.  இதுஉலமாக்களின் ஏகோபித்த முடிவு என்பது மேதைகளின் கருத்து.   எம்பிரான் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லாமல் இருப்பதனால்   விளையும் கேடுகள்  கூறப்பட்டிருக்கின்றன.  அன்னாரின் திரு நாமத்தைச் செவியேற்றுக் கொண்டுஸலவாத்துச் சொல்லாதிருப்பவனை உலோபி, அக்கிரமக்காரன், துர்ப்பாக்கியன்,அப்படிப்பட்டவன் நாசமடைவான் என நாயகம் அவர்களும் ஜிப்ரீல் (அலை)அவர்களும் சபித்திருக்கின்றனர் என்பன போன்ற வி­யங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  ஆதலால் அன்னாரின் திருநாமத்தைச்செவியேற்குந்தோறும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது வாஜிபாகும் எனப் பெரியார்கள்கூறியுள்ளனர்.  இது சம்பந்தமாக இப்னு ஹஜர்(ரஹ்) ‘பத்ஹுல் பாரீ’ எனும் நூலில் அறிஞர்களின் பத்து அபிப்பிராயங்களைஎழுதுகிறார்.  ‘அவ்ஐசுல் மசாலிக்’என்னும்  நூல் இது சம்பந்தமாக மிக விரிவானஆராய்ச்சி செய்திருக்கிறது.  அதில்‘ஒவ்வொரு முஸ்லிமும் அவர் ஆயுளில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது ஸலவாத்துச் சொல்வதுபர்லு’ என்று காணப்படுகிறது. ஹனபி இமாம்களிடத்தில் ‘ஒரே சபையில் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் திரு நாமத்தை முதலில் கேட்டவுடனே ஸலவாத்துச் சொல்வதுவாஜிபாகும்.  அதன்பின் கேட்குந்தோறும்ஸலவாத்துச் சொல்வது முஸ்தஹப்பு’. அவர்களின் திருநாமத்திற்கு முன்னே ‘ஸய்யிதுனா’என்ற சொல்லைச் சேர்த்துக் கொள்வது முஸ்தஹப்பு. இமாம் ரமலி (ரஹ்) அவர்கள் கூறியவாறு, பெருமானார் அவர்கள் ஸய்யிது என்பதுஉண்மையான வி­யம்.  அவர்களின் திருநாமத்தோடுஅப்படிப்பட்ட உண்மையான வி­யத்தைச் சேர்த்துக் கொள்வது ஒழுக்கமும் மரியாதையுமாகும் என துர்ருல் முக்தார்எனும் நூலிற் காணப்படுகிறது.       


(- தொடரும் -)