• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் 


தமிழகத்து வலிமார்கள்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

 

(கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி. திருச்சி)


 

    அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம்  அவர்கள் இலங்கையில் இஸ்லாமியத் தொண்டாற்றிய வேளையில்பலர் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.


      இலங்கையில் பாட்டால்விளக்கேற்றி பாட்டால் விளக்கை அணைத்து மாபெரும் சாதனை புரிந்த அருள் வாக்கி அப்துல்காதிர் என்ற பெயர் பெற்ற மாபெரும் புலவரும் இவர்களின் சீடர்களில் ஒருவராவர்.  அவர் தம் குருநாதரைப் பற்றிப் பாடிய பாடல் வரிகள்இதோ.


“மாப்பிள்ளை ஆலிமென்னும் மாமதியே நாயகமே!

காப்பெனவே பற்றிக் கரம்பிடித்தேன்..... கோப் - பெருமை

கொண்டருளும் கோவே! என் கோதில்லா நெஞ்சத்து

நின்றருள்வீர் என்றும் நிலைத்து”


      இப்பாடல்  புலவர் தம் குருநாதர் மீது கொண்டிருந்த மட்டற்றபக்தியை எடுத்துக்காட்டுகிறது.


      மேலும் இலங்கையில்‘ஞானதீபம்’ என்னும் பத்திரிகையில் தம் எழுத்தின் மூலம் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த சித்திலெவ்வை அவர்களும்  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களிடம் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.   சித்தி லெவ்வை அவர்கள் எழுதிய அஸ்ராருல் ஆலம் என்றஞான நூலுக்கு மார்க்க மேதைகள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் எதிர்ப்பு செய்து ‘காஃபிர்’‘பத்வா’ கொடுத்தபோது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் சித்திலெவ்வை அவர்களுக்குபெரும் ஆதரவாக இருந்தார்கள்.


      தமிழகத்தில் நூற்றுக்கணக்கான குர்ஆன் மதரஸாக்களை நிறுவி பெரும் தொண்டாற்றிய கொழும்பு ஆலிம் சாஹிப் என்றுஅழைக்கப்படும் செய்யிது முஹம்மது ஆலிம் அவர்களையும், இலங்கையில் மாபெரும் மார்க்க சேவை செய்த கசாவத்தை ஆலிம் அவர்களையும் உருவாக்கியபெருமை நம் லெப்பை வாப்பா அவர்களையே சாரும்.


      ஆரம்பக் கட்டத்தில்இலங்கையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பல ஊர்களையும் சுற்றித் திரிந்த போது அவர்கள்அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம். அப்படி ஒரு சமயம் அவர்கள் கொழும்புவிலிருந்து ‘காலி’ செல்லும் வழியில் உள்ளகளுத்துறை          ஜும் ஆ பள்ளியில் இரண்டுநாட்கள் தங்கி மக்களுக்கு மார்க்க அறிவுரை நல்கினார்கள்.  அப்போது அங்குள்ள மக்கள் அவர்களை ஏறிட்டுக் கூடப்பார்க்கவில்லை. அவர்களை  உண்டீர்களா? குடித்தீர்களா? என்று எவரும் கேட்கவில்லை.  அந்தக் காலத்தில் அங்கு உணவுக் கடைகளும் இல்லை.  பட்டினி பசியோடு அவ்வூரை விட்டுப் புறப்படும் போதுஅவர்கள், அந்தப் பள்ளியின் சுவரில்


“கான கதீமன் களுத்துறை

அல் ஆன ஸார பழித்துறை”


      என்று எழுதி வைத்துவிட்டுசென்றார்கள். 


      இதன் பொருள் :-


      “தொன்றுதொட்டு களுத்துறைஎன்னும் பெயர் வழங்கப்பட்டு வந்த இந்த ஊர் கொலைகார ஊராக வல்லவா இருக்கிறது”.


      அப்படி அவர்கள்எழுதி வைத்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் அங்கு ஒரு கொலைச் சம்பவம் நடந்து விட்டது.  செல்வச் சிறுமியை ஒருவன் கொன்று அது அணிந்திருந்தநகைகளைக் கவர்ந்து கொண்டு அச்சிறுமியின் உடலை ஆற்றங்கரையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.


      பள்ளியில் முஅத்தினாகவேலை செய்து வந்த நபர் இந்தக் கொலைப் பழியை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள்மீது போட்டுவிட்டார்.  “இவர் தான் இந்தப் பள்ளியில்இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்.  அவர் போகும்போது அவற்றில் ஏதோ எழுதிவிட்டுச் சென்றுள்ளார். இவர்தான் இக் கொலையைச் செய்திருக்க வேண்டும்” என்று விடாப்பிடியாய்ச் சொன்னார்.  உடனே அவ்வூர் மக்கள் அப்பா அவர்களை அழைத்து வந்து பள்ளியில்நிறுத்தி  விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள்.  அப்பா அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் நம்பவில்லை.  அப்போது ஒருவர் நான் இந்த முஅத்தின் ஆற்றங்கரையின்பக்கமாக வேகமாக நடந்து வருவதைப் பார்த்தேன். அதனால் இவரையும் பிடித்து விசாரிப்பதுநல்லது என்றார்.  உடனே முஅத்தினின் முகம் வெளிறிப்போனது.  அவரிடம் விசாரிக்கும்போதே அவர் பயந்து போய், தான் தான் அக்கொலையைச் செய்ததாக ஒப்புப் கொண்டார்.  அவர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அச்சிறுமியின்நகைகள் எல்லாம் அப்படியே இருந்தன.  அவ்ர் கையும்களவுமாக பிடிபட்டார்.    உடனே ஊர் மக்கள் தாம்செய்த தவறுக்காக மாப்பிள்ளை  லெப்பை ஆலிம்(ரஹ்) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு அவர்களை சங்கை செய்து அனுப்பி வைத்தார்கள்.        


(தொடரும்)