• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  உண்ணால் முடியாது...



ஹதீஸ் பக்கம் 

உண்ணால் முடியாது...


ஆலிம் புலவர்


 

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்.


      அருமைநாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒருதடவை அன்ஸார்களை நோக்கி , அன்ஸார்களே! நீங்கள் வழியறியாதவர்களாக இருந்தபோது நான் உங்களிடம் வந்து (சேர),அப்போது அல்லாஹ் என்மூலம் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா?(அதேபோல) நீங்கள் பிரிந்து கிடக்க, என் மூலம் அல்லாஹ்உங்களை ஒன்று சேர்க்கவில்லையா? அதேபோல நீங்கள் ஒருவருக்கொருவர்பகைவர்களாக இருக்க, என்மூலம் அல்லாஹ் உங்கள் இதயங்களை உள்ளன்பால்இணைக்கச் செய்யவில்லையா? என்று வினவினார்கள்.


      அதற்கு அன்ஸாரிகள்ஆம்! யாரஸூலல்லாஹ்! என பதிலளித்தார்கள். அதுகேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்,


      (நான் உங்களிடம்கேட்டது போல நீங்கள் என்னைப்பார்த்து)  நீங்கள்அச்சத்துடன் (மதீனா) வந்தபோது உங்களுக்கு நாங்கள் அச்சமுறச் செய்யவில்லையா? மேலும் நீங்கள் (மக்காவை விட்டு) விரட்டப்பட்டநிலையில் வந்தபோது நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் தரவில்லையா? மேலும் நீங்கள்  கைவிடப்பட்டு வந்தபோதுநாங்கள் உங்களுக்கு உதவி செய்யவில்லையா? (என எம்மிடம்) திரும்பக்கேட்கலாமல்லவா? என்றார்கள்.


      அதற்கு அன்ஸார்கள்,


      (யாரஸூலல்லாஹ்!  இந்தச் செயல்கள் மூலம்) நாங்கள் தங்களுக்கு எந்தஉபகாரமும் செய்துவிடவில்லை.  ஆயினும் தாங்கள்எங்களிடம் வந்தது அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் எங்கள் மீது புரிந்த உபகாரமின்றிஒன்றுமில்லை என பதிலளித்தார்கள்.                            (புகாரி - முஸ்லிம்)


      உலகில் நற்பணிகள்  செய்வதாக இருந்தாலும் தனி மனிதனாக இருந்து செய்வதைவிடபலர் இணைந்து கூட்டாக முயன்று செய்தால் இலக்கை எளிதாக எட்டமுடியும்.  ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல்நம்மால் ஆன பணிகளை சமுதாயத்திற்கு - மக்களுக்குச் செய்யவேண்டும் என எண்ணுவோர் பலருண்டு.  இத்தகு எண்ணமுள்ளோர் ஒன்றிணைந்து ஓர் அமைப்பாக உருவாகிசமூகசேவை செய்வார்கள். அப்படிச் செய்துவருங்காலை ஒருவருக்கொருவர் மனப்பிணக்கு எற்பட்டால், என்னால்தானே இது உருவானது!  நான்தானே இச்செயலுக்கு மூளையாகச் செயல்பட்டேன்!இரவும் பகலும் நான் தானே உழைத்தேன் என ஒவ்வொருவரும் எண்ணுவதுண்டு.

 

    உதாரணமாக, ஒரு பள்ளிவாசல்,ஒரு கல்விக்கூடம்,அல்லது ஒரு சேவை மையம்,அல்லது ஒரு மாநாடு! இப்படி எதுவாக இருந்தபோதும் மனவேற்றுமை ஏற்பட்டுவிட்டால்நடந்த நல்லவை அனைத்திற்கும் தன்னை உரியவராக்கி, சறுகல்கள் எல்லாவற்றிற்கும்பிறரைக் காரணமாக்கிப் பேசுவது மனிதர்களின் பழக்கம்.  ஆனால் நல்லவை நடப்பதற்கு நாம்தானா காரணம்?என சிந்திப்பதற்கு நாம் மேலே கண்ட ஹதீஸ் அருமையான பாடத்தைத் தருகிறது.


      உண்மையில் அன்ஸார்கள்அல்லாஹ் ரஸூலுக்காக அனைத்து தியாகங்களைச் செய்தபோதும் அந்தத் தியாகம் செய்வதற்குரியமனிதர்களாக தங்களைத் தேர்வுசெய்து கொண்டது அல்லாஹ்வும் அவனது ரஸூலும்தான் என - அவர்கள்செய்த உபகாரம்தான் என உரைப்பது பொதுவாழ்வில் ஈடுபடுவோர் யாவருக்கும்  பூரணமான பாடமாகும். இந்தப்பாடம் மற்றவர்களுக்குப்பொருந்துகிறதோ இல்லையோ ஒரு ஷைகைப் பின்பற்றி நடக்கும் முரீதுகளுக்கு முற்றிலும் பொருந்தும்.


      குரு என்பவர்கள்தமக்குத்தாமே பூரணமாக இருப்பவர்கள்.  அவர்களைப்பூரணப்படுத்த வேறொரு பொருள் தேவையில்லை.  இதுஇருந்தால்தான் நிறைவு - இது இல்லாவிட்டால் குறைவு - என்பதெல்லாம் நபிமார்கள் , குத்புமார்கள் வி­யத்தில் கிடையாது.  ஒருநபி, தனியாக, தனக்கெனஉம்மத்தே இல்லாவிட்டாலும் அவர்கள் நபிதான். ஏரளமான மக்கள் அவர்களைப்பின்பற்றினாலும் நபிதான்.  கூட்டம் சேர்வதோகூட்டம் குறைவதோ அவர்களை நிறைப்படுத்தவோ குறைப்படுத்தவோ முடியாது.  அவர்கள் தம்மில் தாமே பூரணமானவர்கள்.


      அப்படியிருக்க,


      தொடக்க காலங்களில் ஒரு குருவை சிலரே பின்பற்றியிருக்க, பின்வரும்காலங்களில் அதிகமான மக்கள் சீடர்களாக இணைந்து அதன்மூலம் நாட்டில் பல நற்காரியங்கள்நடக்கும்போது, இன்னார் முரீதாக வந்தபின்தான் இது நடந்தது,இவர் வரவில்லையயன்றால் இதுவெல்லாம் நடந்திருக்குமா? என்பதெல்லாம் பொய்யாகும்.  மாயையாகும்.


      காமிலான ஷைகானவர்கள் அந்தந்தக் காலங்களில் அது அதற்குத்தேவையானவர்களை  உருவாக்கி அவர்கள் நாடும்நற்பணிகளை உலகில் செயல்படுத்துகிறார்கள். அப்படிச் செயல்படுத்தும்போது - அந்தச்செயலைச் செய்பவர்கள்,அன்ஸாரிகள் உரைத்ததுபோல - அல்லாஹ்வும் அவனது ரஸூலும் அருள் குருவும்- தம்மை இப்பணிக்குத் தேர்வுசெய்தார்களே! அதன்மூலம் நமக்கு இம்மைமறுமை வெற்றியைத்தரப்போகிறார்களே!என ஆனந்தம் கொள்ளவேண்டும்.


      அப்படி எண்ணிச் செயல்பட்டால் அன்ஸார்கள் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்களிடம் பெற்ற நெருக்கத்தை அண்ணலாரின் பிரதிநிதியான குருவிடமும்பெற்றுக் கொள்ளலாம்.