• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Dec 2011   »  அமுதமொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுதமொழிகள்


ஒளியை மறைக்கத் துணியும் தூசி நூலிலிருந்து.....

(சென்ற இதழ் தொடர்ச்சி..)

 

 

எந்த வஹ்ஹாபிக்கும் தேவதூது இறக்கப்படுவதில்லை. அவ்வாறு எவனேனும்தேவதூது இறக்கப்படுவதாகச் சொல்வானாயின் அவன் குப்றுடைய வனாவான். எனவே எந்த வஹ்ஹாபிக்கோநஸாராவுக்கோ எந்த யஹூதிக்கோ வஹ்யு இறக்கப்படு வதில்லை.  (ஆதலால் நபிமார்கள் பொது மக்களிலிருந்து வேறுபட்டவர்கள்என்பது உறுதியாகிறது.) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏனைய மனிதர்களைப்போன்றவர்களல்லர்.  அநேகமாக ஏனையோர் அழைக்கும்போதுஎம்                     பெருமானாருக்கு வஹ்யுஇறங்கும் நேரமாக இருக்கலாம்.  அல்லது அவர்களுடையஇறைவனிடத்தே முறையீடு செய்து கொண்டிருக்கும் நேரமாகவிருக்கலாம்.  எனவே இவை யயல்லாம் பொதுமக்களுடைய நன்மையைக் கருதியேநடந்து வந்தன. இவ்வாறு பெருமானாரை அழைப்பது ஒழுக்கமுடையதன்று.  மேலும் இது மரியாதை கெட்ட நடத்தையுமாகும்.                                             (அவ்ளஹுத் தஃபாஸீர்)


      (இருண்டிருந்த உள்ளங்களில்ஈமானுடைய ஒளியைப் புகுத்தி) உங்களை உயிர்ப்பிப்பதற்காக (இறைவனுடைய தூதர்) உங்களை அழைத்தால்அல்லா(ஹ்) வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் பதில் கூறுங்கள்.             (அன்பால் :  24)


        அல்லாஹுதஆலாவின் அழைப்பு ரஸூல் நாயகம் அவர்கள் மூலமாகவே செவியேற்றப்படும்.  ஒருவிடுத்தம் ரஸூல் நாயகம் அவர்கள் அபூஸஈதுல் குத்ரிய்அவர்கள் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள்.  அவர்களை ரஸூல் நாயகம் அழைத்தார்கள்.  அப்போது அவர்கள்விரைவாகத் தொழுதுவிட்டு ரஸூல் நாயகம் அவர்களிடம் சென்றார்கள்.  “எமக்கு மறுமொழி பகர்வதைவிட்டும் உங்களை விலக்கிக்கொண்டது ஏன்”? ஏன் நீங்கள் என் அழைப்புக்கு பதில் கூறவில்லை?என்று கேட்டார்கள்.  “நான் தொழுதுகொண்டிருந்தேன் என்று விடை பகர்ந்தார்கள்”. இதைக் கேட்ட ரஸூல் நாயகம் அவர்கள் உங்களைஅழைத்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் பதில் கூறுங்கள் என எனக்கு வஹ்யு இறக்கப்பட்டதைநீங்கள் அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.  அல்லா(ஹ்)வுக்கும் ரஸூலுக்கும் தொழும்போது பதில்கூறுவதால்  தொழுகை முறிந்து விடாது - என்றுகூறப்பட்டுள்ளது.  தொழுகையே அவர்களுக்குப்  பதிலாகவும் உள்ளது.  தொழுது கொண்டிருப்போர், எதற்கேனும்ரஸூல் நாயகம் அவர்களால் அழைக்கப் பட்டால், சுணங்கக்கூடாது,ரஸூல் நாயகம் தொழுது கொண்டிருக்கும் ஒருவரை அழைத்தால் தொழுகையை நிறுத்தி  விட்டுப் பதில்கூறுவது ஆகும்.            (தப்ஸீர் பைளாவிய் பக்கம் 237)


      எனவே, மேலே கண்டவை களைக் கொண்டு நபிகள் நாயகம் அவர்களுக்குஎவ்வாறு ஏனையோர் மரியாதை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.  இங்கே, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழும் விடயத்திலும் மரியாதை செய்யும் விடயத்திலும் நாம் யாரைப்பின்பற்ற வேண்டும்? வஹ்ஹாபிகளையா? எல்லாம்வல்ல அல்லாஹு தஆலாவையா? ஈமானுள்ள முஸ்லிம்களே ஊகித்துப் பாருங்கள்.


ஸலவாத்து


      நிச்சயமாகவே,  அல்லா(ஹ்)வும்அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். எனவே ஈமானுடையவர்களே,நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.


      நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும்படி ஏவப் பட்டுள்ளது.  (இஃது) அல்லா(ஹ்)வால் ஏவப்பட்டது என்பதைக் குர்ஆன்ஓதிவருபவர்கள் அறிந்து கொள்வார்கள்.  நாயகம்அவர்களின் பெயர் சொல்லப்படும் போதெல்லாம் ஸலவாத்துச் சொல்வது (வாஜிபாகும்) அவசியமாகும்.  அவர்களின் பெயர் ஸலவாத்துடன் சேர்க்கப்படாது எழுதுவதில்லை.  (நாயகம் அவர்களின் பெயர் எழுதப்படும் போதெல்லாம்ஸலவாத்தும் பெயருடனே சேர்த்து எழுதப்படல் வேண்டும்). புத்திக்கே   புறம்பான நாஸ்திகர்கள்நாயகம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்வதை நிந்தித்தார்கள்.  (இப்போது வஹ்ஹாபிகள் நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.)  பூரணமாய் ஸல்லள்ளாஹு அல்லஹி வஸல்லம் என்று எழுதாமல்“ஸாதை” மட்டும் அல்லது “ஸல்அமை” மட்டும் சிலர் சுருக்கி எழுதுகிறார்கள். இது மடமையின்அந்தமாகும்.  பூரணமான கருத்தல்லாத முதலெழுத்துகளைமட்டும் ஸலவாத்துக்கு பதிலாக எழுதுவதில் நாம் நினைத்தாலன்றி ஸலவாத்தின் கருத்து பூரணப்படுவதில்லை.  மேலும் அவ்வாறு சுருக்கி எழுதுவதால் ரஸூல்மார்களில்மிகப்பெரியவர்களான, நபிமார்களிலே முடிவானபயபக்தி உடையவர்களின் தலைவரான எல்லாப் படைப்பினங்களினதும்  நாயகரான ரஸூல் நாயகம் அவர்களுக்குக் கருமித்தனம்காட்டுவோராவோம்.  பெருமைக்காரரும் அநியாயக்காரரும்குப்புறவீழ்வார்களாக.   ஹலாக்காவார்களாக.


      அபூஹுரைரா (ரலி)அவர்கள் கூறினார்கள் - பெருமானார் கூறியதாக. “ஒருவர் என்மீது ஒருஸலவாத்தைக் கூறினாரானால்அல்லாஹ் அவர்மீது பத்து ஸலவாத்தைக்கூறுவான்.”

      (ரிவாயத்து: முஸ்லிம்- மிஷ்காத்) 

 

        அப்துள்ளாஹ் இபுனு உமர் (ரலி) கூறினார்கள் - பெருமானார் கூறியதாக.“எவர் என் மீது ஒருஸலவாத்தைக் கூறினாரோ அவர்மீது அல்லா(ஹ்)வும் அவனுடைய மலக்குகளும்எழுபது ஸலவாத்துகளைக் கூறுவார்கள்.”                   (ரிவாயத்து: அஹ்மத் - மிஷ்காத்)


      அபூஹுரைரா (ரலி)கூறினார்கள் - பெருமானார் கூறியதாக.


      ஒருவர் என் கபுரிடத்தில்ஸலவாத்துக் கூறினால் அதை நான் கேட்டுக் கொள்வேன். தூர இருந்து எவர் என்மீது ஸலவாத் கூறுவாரோ, அந்த ஸலவாத்து எனக்கு அறிவிக்கப்படும். (எட்டி வைக்கப்படும்). (சுஉபுல் ஈமானிலே பைஹகீ ரிவாயத்து செய்தார்)


      எனவே, ஸலவாத்து கூறுவோர் எந்த இடத்திலும் எப்போதும்ஸலவாத்துக் கூறலாம்.  இப்போதுதான் - இங்கே தான்ஸலவாத்துக் கூற வேண்டும் என வரையறுக்கப் படவில்லை.  அதானுக்கு (பாங்குக்கு) முன்னும், பின்னும் கூறுவதில் எந்தத் தடையும் எதிலும் கூறப்படவில்லை.


      ஆனால் வஹ்ஹாபிகள்தான் வரையறுத்து பாங்குக்கு முன் ஸலவாத்து வேண்டாம் எனக் கூறி ரஸூல் நாயகம் அவர்களுக்குமரியாதை கொடுப்பதைத் தடுக்க முயல்கின்றனர். சில வஹ்ஹாபிப் பள்ளிகளில் பாங்குக்கு முன்னோ பின்னோ ஸலவாத்துக் கூறப்படுவதுமுற்றும் தடுக்கப்பட்டுள்ளது.  சிறு குழந்தைகளின்பிஞ்சுப் பருவத்திலேயே ஸலவாத்துக் கூற வேண்டாம் என வஹ்ஹாபிகள் பள்ளிக்கூடங்களில் போதித்துரஸூல் நாயகம் அவர்கள் மீது வெறுப்பையும் உண்டு பண்ணுகின்றனர். வஹ்ஹாபிகளுக்கு என்னகேடுதான் பிடித்து உள்ளது? ஈமானுள்ள முஸ்லிம்கள்பாங்குக்குமுன்  ஸலவாத்து கூறாமல் இருக்க மாட்டார்கள்.  ஸலவாத்து கூறுவோம்.  எப்போதும் கூறுவோம். ஜயம் பெறுவோம்.  அதிகம் கூறுவோம்.


      ஸல்லள்ளாஹு அலாமுஹம்மத்

      ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம்

      தஸ்லீமன் கதீரன்கதீரா.


(ஒளியை மறைக்கத் துணியும் தூசி - நிறைவு பெற்றது.)