அஷ்ஷைகுல் காமில்
குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத்
ஜமாலிய்யா
ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம்அவர்கள்
இறை கேட்டது : ஏகாந்த நிலை என்பது என்ன ?
யான் விடுத்தது : இறைவா ! நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது நானே என்னில் என்னைக் கண்ட நிலை. மற்றும் உன்னில் நான் அழிந்து உன்னில் நானாய் பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக இரண்டறக்கண்ட நிலை.
இறை கேட்டது : அப்போது நீர் எப்படி இருந்தீர் ?
யான் விடுத்தது : இறைவா ! யான் சலனமற்ற நிலையில் பரிபூரண ஆதி நிலையான சூனிய நிலையிலிருந்தேன்.
தாகி பிரபம் நூலில் - சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் –
தாகி பிரபம் எனும் மெய்ஞ்ஞானக்
கருவூலத்தின் முன்னுரையில்.....
இந்நூற் றாகி பிரபம் எனும் பெயருடைத்து. இதன் கருத்து, தாகமுடையோருக்கான நீர்ப் பந்தர் என்பதாம்.
எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம்(பிரியம்) உள்ளதோ அவருக்கிந்நூல் ஒரு நீர்ப்பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையை இந்நூல் நீக்கி விடும் என்பதாம் என்க.
இந்நூல் இறைஞான உதிப்பேயாம். எண்ணத்தில் கிளர்ந்தவை ஏகபேட்டியாகி உதித்ததே இஃதெனின் மிகையாகாது. கருத்தா வினா வகுக்கச் சிருட்டிவிடை விடுத்ததே இஃதாம்.
குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுள மெய்திக் கற்றிடின் இறைத் திருவருளிசையுமென்பதில் ஐயமின்று.
இவ்வழியில் செல்ல விரும்புவோருக்கே இஃது அமைக்கப்பட்டுள்ளது. ஞான சூனியங்களுக்கன்று. வாழ்க மெய்ப்பொருள்! வாழ்க மெய்ஞ்ஞானம்!! வாழ்க ஞானிகள்!!!
(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்)
ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக இருங்கள். நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் ஏதாவதொரு விதத்தில் அதன் பலனை அடைவீர்கள்!
ஒருவருக்கு நீங்கள் உதவும் போது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் சந்தோஷமடைகிறார்கள். கஷ்டத்தில் வாடும் மனிதரைப் பார்த்து எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்படுகிறார்கள். அம்மனிதர் இன்னொருவரால் உதவி செய்யப்படுவதையறிந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் ஆனந்தங் கொள்கிறார்கள். அவர்கள் உயிரோடு தானே இருக்கிறார்கள்!
எனவே, உங்களால் முடிந்த அளவு பிறருக்கு உதவுங்கள். அதனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நஷ்டமும் ஏற்படப் போவதில்லை!
(15.10.96 அன்று திருச்சியில் சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் அருளியது.)
தகவல் : ஆஷிகுல் கலீல், Bcom., திருச்சி