• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​   கொசு விரட்டி



கொசு விரட்டி


    ம் வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய கொசுவிரட்டிகளால் தோல்-கண்கள் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.


இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட இதோ சில வழிகள்:


    தேங்காய் நார்கள்:  மாலை நேரத்தில் இலேசாகப் பற்ற வைத்து அதன் புகையை வீடெங்கும் பரவவிட்டால் கொசு போகும் இடமே தெரியாது.  இந்தப் புகையால் பாதிப்பு ஏற்படாதா என நீங்கள் கேட்பது புரிகிறது. நம்புங்கள். இயற்கைப் பொருள்களின் புகை நமக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.


    கற்பூரம்: கொசுக்களை அழிக்க முக்கியமான பொருள் சல்பர். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. இதில் ஒரு பிரச்சனை உண்டு. கற்பூரத்தைக் காற்றில் வைத்தால் கரைந்துவிடும். 

எனவே கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுவதும புகையைப் பரவ விட்டால் அந்த வாசனைக்கு கொசு வந்து சேராது.  இல்லையெனில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தாலும் அந்த வாசனைக்கு கொசு வராது.                                     


-லைலா காத்தூன்-


தாஜ்மஹாலின் உயரம் 1765 அடி.

குதுப்மினாரின் உயரம் 288 அடி. அதன் படிக்கட்டுகளின் நீளம் 379 சதுர அடி.