• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​   டிங்கு , மர்மக்காய்ச்சல் வராதிருக்க....


டிங்கு , மர்மக்காய்ச்சல் வராதிருக்க....


அன்பு முரீதுகளே!


    ங்கைமிகு செய்கு நாயகம் அவர்களை நாம் சந்தித்து விடைபெறும் போது நம் நல-வள வாழ்க்கைக்காக துஆ செய்வதோடு உயிர் பிடுங்கக்கூடிய கொடிய ஆபத்துகள் - நோய்கள் அணுகாதிருக்க வேண்டுமென துஆ செய்வார்கள். மேலும் டிங்கு, பிளேக்- மர்மக்காய்ச்சல் போன்ற வியாதிகள் நம்மைத் தொடாதிருக்க ஏற்கனவே தடுப்புச் சுவர்கள்- கவசங்கள் - கேடயங்களை நமக்கு அளித்திருக்கிறார்கள். அவற்றை நாமும் பயன்படுத்துவதோடு நம்மைச் சுற்றியிருப்போருக்கும் கற்றுத் தருவோம். முன்பெல்லாம் ஊர்களில் கட்டுப்படாத நோய் பரவினால் மக்கள் ஒன்று கூடி தெருக்கள் தோறும் ஸலவாத்தை ஓதி ஊர்வலமாகப் போவார்கள். உடனே அந்நோய் இறையருளால் மறைந்துவிடும். ஆனால் தற்போதுள்ள அறிவு ஜீவிகள் (?) இதையெல்லாம் ஏற்பார்களா? அவர்கள் ஏற்காமல் போனால் போகட்டும். நாம் அதனை ஏற்று ஓதி பயன்பெறுவோம்!


     சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்  எந்த நேரமும் இதனை ஓதி வாருங்கள் என  நமக்கு அறிவுறுத்தியிருக்கும்  துஆ.


பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்லி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீவுல் அலீம்


    மேலும் “லீகம்ஸதுன்  உத்ஃபீ பிஹா” பைத்தை  காலையிலும் மாலையிலும் ஓதி வரப் பணித்துள்ளார்கள்.


    மேலும் புர்தா ­ஷரீபையும்  பத்ரு சஹாபாக்கள் திருநாமங்களையும் ஓதிவருமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.


    இவற்றுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் ஸலவாத்தை  எப்போதுமே  ஓதிவருமாறும் அருளியுள்ளார்கள்.


    இவற்றை நாம் ஓதி வந்தால் டிங்கு எங்கே... மர்மக் காய்ச்சல் எங்கே.. மற்ற நோய்கள் தான் எங்கே! எதுவும் நம்மை அண்டாது.


    யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள் தங்கள் ராதிபு கிதாபில் லஹும் அனில் ஆஃபாத்தி லிலாலுன் - முரீதுகளுக்கு ஆபத்திலிருந்து காக்கும் (பாதுகாப்பு) நிழல் இருக்கிறது. என அருளியுள்ளார்கள்.