• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​     காந்தி மகாத்மா


காந்தி மகாத்மாவானது எப்போது?


சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ (ரஹ்) அவர்கள் தான் முதன் முதலாக மகாத்மா என்று பட்டம் சூட்டினார்கள்.

 

பின்பற்றுவோம்!

 

     நீண்ட கால முரீது அவர். மூத்த ஆத்ம சகோதரர். வாப்பா நாயகம் அவர்களின் உத்தரவுகளை அப்படியே பின்பற்றுபவர். அவர் எப்போதும் வெள்ளை கைலி, வெள்ளை சட்டை, அல்லது கட்டம் எதுவும் இல்லாத கலர் பிளைன் சர்ட் தான் அணிந்து கொள்வார். அவரிடம் ஒரு தடவை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் “கலர் கைலி, கலர் சட்டைகளை” அணிந்து கொள்ளுமாறு சொன்னார்கள். அவர் அன்றிலிருந்து தனது வெள்ளை கைலி, பிளைன் சர்ட் இமேஜைத் தூக்கி எறிந்து விட்டு கலர் டிரஸ் தான் அணிகின்றார். அவரைப் பார்க்கும் நண்பர்கள்-தெரிந்தவர்கள் என்ன இப்படி கலருக்கு மாறிவிட்டீர்களே.. என புதிராகக் கேட்டாலும் புன்னகைத்துக் கொண்டே பேசாமல் இருந்து விடுவார். அவருக்குத்தானே தெரியும் ஆத்மத் தந்தையின் உத்தரவுக்கு தனது நப்ஸாகிய மனதைப் பழக்கிக் கொண்ட ரகசியம்! அந்த மூத்த ஆத்ம சகோதரர் யார் தெரியுமா? இன்ஷா அல்லாஹ் அடுத்த மறைஞானப் பேழை வரும் வரை காத்திருங்கள்!