தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு
கலிபா பெருந்தகைகள்
ஒரு சிறப்புப் பார்வை!
மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி
ஒருமுறை வலிய்யுல் அஹ்ஸன் என்னிடம் கூறினார்கள்: பாளையம் ஹெளதிய்யா அறபுக் கல்லூரி முதல்வர் சூபி. அல்ஹாஜ். மூஸாகான் பாகவி ஹள்ரத் அவர்களுடன் நானும் (வலிய்யுல் அஹ்ஸன்) சங்கைமிகு ஷைகு நாயகமவர்களைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக திண்டுக்கல் சென்றிருந்தோம். சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் பல விளக்கங்கள் அருளினார்கள்.
பின்னர்,மூஸாகான் பாகவி “குத்புமார்கள் அனல்ஹக் (நானே சத்தியம்)என வெளிப்படுத்துவதால் தானே பொது மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகின்றது? அவ்வாறு கூறுவதைத்தவிர்த்தால் என்ன?” எனப் பணிவோடு கேட்டார்.
அதற்கு நாயகம் அவர்கள். திருக்குர்ஆன் ஷரீஃபில் உள்ள “இதா ஸுல்ஸிலதில் அர்ளு” எனத் தொடங்கும் வசனங்களுக்குப் பொருள் கூறும்படிக் கூறினார்கள்.மூஸாகான் ஹள்ரத் அவர்கள், “இதா ஸுல்ஸிலதுல் அர்ளு” என்னும் வசனங்களுக்கு வெளிரங்கமான பொருளைக் கூறினார். இதற்கு உள் ரங்கமான பொருள் என்ன ? என்று சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் கேட்க, அதற்கு ஹள்ரத் அவர்கள், நாயகமவர்கள் தாம் அருள வேண்டும் .. என்று பணித்தார்!
சங்கைமிகு ஷைகு நாயமவர்கள் அருளினார்கள்: இதா ஸுல்ஸிலதில் அர்ளு ஸில்ஸாலஹா இந்தப் பூமி ஓர் அசைவு அசைக்கப்பட்டால் என்றால், குதுபுமார்களின் கல்பு அசைக்கப்பட்டால் என்று பொருள்.
வ அக்ரஜதில் அர்ளு அஸ்காலஹா: கல்பு தன்னிடமுள்ள கடினமானவைகளை அனல் ஹக்கு: நானே சத்தியம் - என்பதனை வெளிப்படுத்தும்!
வ காலல் இன்ஸானு மாலஹா: அப்போது இவருக்கு (குத்புக்கு) (மெய்ஞ்ஞானியருக்கு) என்ன ஏற்பட்டது? என மனிதன் கேட்பான்!
இயற்கையிலிருந்து, இறையிலிருந்து அருளப்படும் சேதிகளைத் தாம் மெய்ஞ்ஞானியர் கூறுகின்றனர்! (கற்பனையாகக் கூறுவதல்ல!) ஹள்ரத் ஹல்லாஜ் (ரஹ்) அவர்களும் ஹள்ரத் முஹிய்யுத்தீன் இபுனு அறபி (ரஹ்) அவர்களும் அனல்ஹக் எனப் பிரகடனப்படுத்தியதும் இந்நிலையில் தான்! இவ்வாறான சத்தியச் சேதிகள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஹக்கின் நாட்டப்படி வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்! இப்பேருண்மையை வெளிப்படுத்தும் மெய்ஞ்ஞானிகள் அதனால் ஏற்படும் எந்தப் பிரளயத்தையும் சந்திக்கக் கூடியவர்களாகவே எக்காலத்திலும் இருப்பார்கள்! இயற்கையின் பரிபூரணத் தோன்றல்களிலிருந்து வெளிப்படும் இப் பேருண்மையை யாரும் தடுத்து நிறுத்த முடியாது! இயற்கையே இயற்கையைக் கூறுவதை யார் தான் நிராகரிக்கவும் முடியும்? என ஆணித்தரமாக விளக்கமளித்தார்கள்
(மேலும்.......)