முதியோர் நலம் பேணுவோம்!
1. முதியோரும் குழந்தையே. அதிக அன்பும், கவனிப்பும் அவர்களுக்கும் தேவை.
2. முதியோர்கள் தனிமை உணர்வால் பாதிக்கப்படுவதால் அவர்களிடம் அடிக்கடி கலந்து பேச வேண்டும்.
3. முதியோர்கள் நினைவாற்றல் குறைவால் பாதிக்கப்படுவதால் ஆகாரம், மாத்திரைகள், மற்றும் மருந்துகளை நாம் சரிபார்த்து எடுத்துக் கொடுக்க வேண்டும்.
4. முதியோர்களின் முக்கியத்துவம் கருதி அவர்களிடம் அவ்வப்போது குடும்ப விஷயங்களில் ஆலோசனைகள் பெற்று வருவது எல்லோருக்கும் நன்மை பயக்கும்.
5. முதியோர்கள் பார்வை குறைவு, காது மந்தம், எலும்புத் தேய்வு இவைகளால் பாதிக்கப் படுவதால் குழந்தைகள் போல் அவர்களைப் பொறுமையாக பராமரிக்க வேண்டும்.
6. நம் குழந்தைகள் நாம் சொல்வதைச் செய்வதில்லை, நாம் செய்வதையே செய்கிறார்கள். இன்று நாம் முதியோர்களை நன்கு கவனித்தால் நாளை நாம் முதியோர்களாகும் போது அவர்கள் நம்மைக் கவனிப்பார்கள்.
7. முதியோர்களுக்கு குழந்தைகள் நல்ல நண்பர்கள். இருவரும் கலந்து பழகுவது குடும்பத்திற்கு நன்மை பயக்கும். டிவி, செல் போன் போன்றவைகளில் இருந்து இருவரும் விடுபடுவார்கள்.
இவ்வாறு அக்கறையுடன் அவர்களை கவனித்தால் முதியோர்களின் மனநலமும் உடல் நலமும் நினைவாற்றலும் மேம்படும்.
(நண்பன்)