கோமான் நபியும் குழந்தைகளும்
பு. ஹகீம் பாஷா யாஸீனிய் ஹக்கியுல் காதிரிய்.
1. பச்சிளங் குழந்தைகளுடன் பாசத்துடன் பழகுவர்.
2. சிறு பிள்ளைகளின் தலையை தமது திருக்கரத்தால் தடவி விடுவர்.
3. அக்குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்காகப் பிரார்த்தனை புரிவர்.
4. பிறந்த குழந்தைகளை தம்மடியில் தூக்கிவைத்து விளையாட்டுக்காட்டிச் சிரிக்க வைத்து மகிழ்வர்.
5. இளங்குழந்தை ஒன்றைக் கையிலேந்தி,அதனை முத்தமிட்டு இவர்கள் (இக்குழந்தைகள்) இறைவனின் சொர்க்கத்துப் பூங்காவின் மணம்வீசும் மலர்கள் என்பர்.
6. குழந்தைகளுக்கு அழகான சிறப்புடைய பெயரைத் தேர்வுசெய்து சூட்டுவர்.
7. குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து மகிழ்விப்பார்கள் என்றால் அவர்களை தன் முன்னிலையில் அணியாக நிற்கச் செய்து “யார் உங்களில் என்னை முதலில் தொடுகிறாரோ அவருக்கு வெகுமதி” என்பர். சில குழந்தைகள் அண்ணலாரின் மார்பிலும், சில மடியிலும் ஓடிவந்து விழும். அதனை ரசித்து ஆர்வத்துடன் விளையாட்டுக் காட்டுவர், வெகுமதியும் தருவர்.
8. பிரயாணத்திலிருந்து ஊர் நுழையும் போது எந்தப் பிள்ளை எதிர்பட்டாலும் அதனைத் தூக்கி வாகனத்தில் ஏற்றிக் கொள்வர். பெரிய பிள்ளையாயின் பின்புறமும், சிறு பிள்ளையாயின் முன்புறமும் அமர்த்திக் கொள்வர்.
9. பருவ காலங்களில் புத்தம் புதிய பழங்கள் வரும் போதுசிறு குழந்தைகள் அனைவரையும் அழைத்து வரிசையாக அனைவருக்கும் தாங்களே ஊட்டிவிடுவர். பின் “இன்றைய சமுதாயச் சிறுவர்கள் நாளைய சமுதாயப் பெரியவர்கள்” என்று கூறுவர்.
10. அப்துல்லாஹிப்னு பஷீர் (ரலி) சிறிய வயதில் அவரின் தாய் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திராட்சைப்பழத்தை அன்பளிப்பாக கொடுத்து வரும்படி ஏவினார்கள்.ஆனால் அவர் வரும் வழியில் அதன்மீதுள்ள ஆசையால் சாப்பிட்டுவிட்டார். இதுயாருக்கும் தெரியாது. சில தினங்கள் சென்று விஷயம் வெளியானது. அப்துல்லாஹ் (ரலி), நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் செல்கையில் அண்ணலார் அவரை அழைத்து அவரின் காதைப் பிடித்து செல்லமாக கேட்கிறார்கள். ஏ! ஏமாற்றும் பையனே! என்னை ஏமாற்றி விட்டாயே! ஏமாற்றும் பையனே! எனக்கூறி வேடிக்கையாக சிரிக்க வைத்தார்கள்.
இவற்றிலிருந்து நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுடன் குழந்தையாக பழகினார்கள் என்பது நமக்குத் தெரியவருகிறது. நாமும் குழந்தைகளுடன் அன்போடு பழகி, பெருமானாரின் சுன்னத்தைப் பேணி இறைவனின் அருளைப் பெறுவோமாக! ஆமீன்
சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்