காந்திகிராமத்தில் நடந்த இலக்கிய விழாவில் பாடியது!
ஆலிம்புலவர்
வானவில்லைக்
காணவில்லை!
திகைத்துத்தேடினேன்!
அதோஎன்றுகாட்ட
அன்புக்காதலிஅருகேவந்தாள்!
வானவில்இடம்மாறியிருந்தது
அவள்நெற்றிப்புருவமாக!
ஆனால்
கருத்துப்போனதன்காரணம்என்ன?
அவளதுநிலாமுகத்தின்முன்அது
நிறம்மங்கிப்போனது! -
வானவில்லைஎனக்குப்பிடிக்காது!
ஏனெனில்அதற்கும்நிறவெறி உண்டு!
வர்ணபேதம்பார்க்கும்அதற்கு
கறுப்புபிடிக்காது - அதனால்
வானவில்லைஎனக்குப்பிடிக்காது! -
வானவில்
வெயிலுக்கும்மழைக்கும்பிறந்த
வேடிக்கைக்குழந்தை!
இடியும்மின்னலும்கொண்டாடும்
வானவேடிக்கை! -
அது
விண்ணுலகதேவதைகளின்
வண்ணநிழல்!
அவர்களின்கைவளையல்! -
சொர்க்கவாசலின்
வட்டப்படிக்கட்டு!
வானவில்
மழையில்நனைந்த
மேகமங்கை
மழையிலேயேகாயவைத்த
வண்ணச்சேலை! –
அது
வானத்தொலைக்காட்சிப்பெட்டியில்
சற்றுநேரம்வந்துபோகும்விளம்பரம் ;
இல்லைநிரந்தரம்!
மேகப்பூங்காவில்
எப்போதாவதுமலரும்
ஏழுவண்ணக்குறிஞ்சிமலர்! -
மேகசபையில்
மின்னல்ராஜகுமாரனுக்கு
மாலையிடக்காத்திருக்கும்
விண்இளவரசியின்
கைபிடித்த
சுயம்வரமாலை! -
வானவில்லை
ஏறிட்டுப்பார்த்த
எங்கள்இளைஞர்கள்கேட்கின்றனர் !
கலர்இங்கே!
பிகர்எங்கே! என -
வானவில்
யாரையும்காயப்படுத்தாத
மானவில்.
இந்தவில்லை
ராமரும்ஒடிக்கமுடியாது!
ஏனெனில்அதுமாயவில்! -
வானவில்
மனிதவாழ்வின்யதார்த்தத்தை
மனிதனுக்குஉணர்த்த
இறைவன்வரையும்உதாரண ஓவியம்!
அதுகூறும்பாடம்
மனிதாஉன்வாழ்க்கை
அழகுதான் ! எழில்தான்!
ஆனால்அது
கொஞ்சநேரம்தான்!
கொஞ்சநேரம்தான்!