• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​ பக்தி பா மாலை


பக்தி பா மாலை

-அபூ ஜாஹிரா –


    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 33 ஆவது தலைமுறைப் பேரராக இலங்கையில் தோன்றி, இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்து, தமிழகத்தின் நெற் களஞ்சியமான தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அருகே திருமுல்லைவாசலில் பள்ளிகொண்டுறங்கும் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா (ரலி) அவர்களை அறியாதோர் இருக்க முடியாது.


    அவர்கள் அகமியத்திலே குத்புல் அக்தாபாக உயர்வு பெற்றிருந்ததைப் போலஷ ­ரீஅத்தின் வெளிரங்கக் கல்வியிலும் மகா  உன்னத உயர்வை அடைந்தவர்கள். 


    நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கிய அவர்களின் வாய்மொழியில் இஸ்லாமியரின் உள்ளங்கள் இறைவனை நோக்கி இடம் பெயர்ந்தன.அவர்களின் எழுத்துக் கருவூலங்கள் அவர்களின் அறபு மொழிப்புலமைக்கும் ஆழ்ந்து அகன்ற பேரறிவுக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 


    “யவானி அதுமாருன் நுஅமாவு” எனும் ஆன்மிக அனுபவக் கவிதை நூல் அவர்களைப் போன்ற மகான்களால் மட்டுமே ஆக்க முடிந்த அற்புதநூல்.


    புகாரீ­ ஷரீபுக்கு “இக்துத்தராரீ ஃபீ ­ஷரஹி ஸஹீஹி லில்இமாமில் புகாரீ ” என்ற  பெயரில் அறபு மொழியிலேயே 3000 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ள விரிவுரை நூல் அவர்களை அறிஞர்களின் மணிமகுடம் என வியந்து பேச வைக்கும்.


    அப்துல் கறீம் ஜியலிய் (ரலி) அவர்களின் இன்ஸானுல்சாமில் எனும் ஆன்மிக நூலுக்கு அறபு மொழியில் விரிவுரை யாத்துள்ளார்கள். மேலும்அறபு - அறபுத்தமிழ்  அகராதியை உருவாக்கியவர்கள்.


    அத்துடன், அரிய கருத்தாற்றல் கொண்ட யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள் தங்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியில், தங்கள் பாட்டனார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மீது புகழ்ப்பாக்கள் யாத்துள்ளார்கள். மேலும் பாத்திமா நாயகி (ரலி) , குத்பு நாயகம் (ரலி), அவர்களின் பதினைந்தாம் தலைமுறையில் உதித்த முஹம்மத் மெளலானா (ரலி), அவர்களின்  மகளாரும் விலாயத்தை  உடையவர்களுமான தங்களின் பாட்டியார்களில் ஒருவராகிய  சையிதா சாலிஹா உம்மா கண்ணே, மற்றும், வலிகள் கோமான் கெளதுல் அஉளம் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்கள் மீதும் பதுறு ஸஹாபாக்கள் மீதும் பக்திப் பாக்களை இயற்றியுள்ளார்கள்.


    இந்த அரிய பாக்களை “பக்திப் பா மாலை”என்ற பெயரில் அவர்களின் திருமகனார் குத்புஸ்ஸமான், ­ஷம்ஷில் வுஜூத், ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவுன் மெளலானா நாயகம் அவர்கள் 1988ல் தங்களின் இலங்கை ஜமாலிய்யா அச்சகத்தில் வெளியிட்டார்கள்.

அதன் இரண்டாம் பதிப்பினை துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைத் தலைவர் பொறியாளர் கலீபா சஹாபுத்தீன் B.E.,M.B.A.,  அவர்கள் தம் மகளாரின் திருமணத்தில் திருமணப் பரிசு நூலாக அச்சிட்டு அனைவருக்கும் அளித்தார்.


    பக்திப்பாமாலை யிலுள்ள பாடல்கள் தேன் போல் தித்திப்பன! வழமையாக  நாம் ஓதிவரும் மெளலிது மெட்டுக்களில் அமைந்த இப்பாக்கள் மெளலிது மஸ்லிஸுகளில் பாடி இன்புறத் தக்கன! 


    பாத்திமா நாயகி (ரலி) அவர்களுக்கு ஸலாம் உரைக்கும் பாடல்களும், அவர்களின் சிறப்புகளைப் போற்றித்  துதிக்கும் பைத்துகளும் பெண்கள் வீட்டில் தினமும் ஓதி வர நன்மைகளை அள்ளித் தருபவையாகும். பத்ரீன்கள் முனாஜாத்து அருமையான வஸீலவாக அமைந்துள்ளது.  யாஸீன் நாயகம் (ரலி) அவர்களின் திருவுள்ளத்தில் உதித்த இப்பாக்களை அனைவரும் பாடி மகிழ்வோமாக ! பாத்திமா நாயகி (ரலி)   அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டு பாடிய பாக்களை இதோ தருகிறோம்.”


பாத்திமா நாயகி புகழ்ப்பா


யாபத்தூல் ஸலாம் அலைக்கி

      தாஹிரா ஸலாம் அலைக்கி

யாஸித்தீ ஸலாம் அலைக்கி

      பாத்திமா ஸலாம்அலைக்கி

யாஹபீ பதஸ் ஸலாமி

      பின்தி ஸய்யிதில்அனாமி

அப்ளலிர் ருஸ்லில் கிராமி

      பாத்திமா ஸலாம்அலைக்கி

யாஸலீ லதன் நபிய்யி

      ஜத்ததபு னாஇல் அலிய்யி

ஆலிபை தின்னப விய்யி

      பாத்திமா ஸலாம்அலைக்கி

வல்லவன் ஸிராத் தைக்கடக்க

      வன்மைமஹ் ­ரிலுள்ளவர்கள்  

பல்லோரும் கண்மூடி நிற்கும்

      பாத்திமா ஸலாம் அலைக்கி

மங்கையர்க் காய்மனம் நொந்து

      மஹ்­ரில் ரப்பை மன்றாடி

சங்கையாய் பிர்தெளஸில் சேர்க்கும்

      ஷாபிஆ ஸலாம் அலைக்கி

வல்லோனல் லாவின் வஹீபோம்

      வள்ளல்ந பிய்யின் ஜனாபில்

நல்லோர லிய்யார் மணந்த

      நாயகி ஸலாம் அலைக்கி

சங்கைசெ யல்கோலம் சொல்லில்

      சர்வரே ஆலம் நபிய்யாம்

தங்களுக் கொப்பான எங்கள்

      நாயகி ஸலாம் அலைக்கி

தொல்லுல காசை வெறுத்து

      தூயரப் பையே வணங்கும்

பல்லுல கெல்லாம் துதிக்கும்

      பாத்திமா ஸலாம்அலைக்கி

அண்ணல்ஹ ஸன்வல் ஹுஸைனின்

      அருமைமா தாவே இறையை

இன்னலில் லாதெம் மைக்காக்க

      இஸ்அலீ ஸலாம் அலைக்கி

பங்கமும் ஹம்மும் பலாயும்

      பஞ்சமு மில்லாது காக்க

எங்கள் ரப்பை இஸ்அலீயா

      இஸ்ஸதீ ஸலாம் அலைக்கி

யானூர சம்ஸில் அலாஇ

      ரளிய ரப்புஸ் ஸமாஇ

அன்கியா கைரன் நிஸாஇ

      பாத்திமா ஸலாம் அலைக்கி

வஅலைக் கில்லாஹுஸல்லா

      மஅஅ  பீக்கில் முஅல்லா

வஅலா அஹ்லீ  க்கீ குல்லா

      மஉஸலா மின்ப அ லைக்கி