ஹல்ரத் அலிய்(ரலி) அவர்களின்
பொன் மொழிகள்!
1. வாழ்வில் ஏற்படும் சிரமங்களைப் பொறுமையால்தான் சமாளிக்க வேண்டும்.
2. எந்தக் காரியத்திலும் நிதானம் முக்கியம், பதட்டம் அழிவைத் தரும்.
3. மனித இயல்பு நீதியை விரும்பும்.
4. மன இச்சையும், சிற்றின்பமும் மனித வாழ்வு நாசமாகக் காரணங்கள்.
5. உண்மைக் காதலர்கள் பிரிவது அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை.
6. கருமித்தனம்; இழிவின் ஆடையாம்.
7. மனச் சோர்வுற்றிருப்பவனை எந்தக் காரியத்திலும் நம்பி விடாதே.
8. மலைகளை நகர்த்துவது பல அபிப்பிராயமுள்ளவர்களை ஒன்று கூட்டுவதைவிட அசாதாரணமானது.
9. கெட்ட நடத்தையுள்ளவர்களிடம் தொடர்பு கொள்வது நல்லவர்களின் எண்ணத்தைக் கெடுத்துவிடும்.
10. சிற்றின்பத்தைப் பெரிதாகக் கருதுபவன் அயோக்கியன்.
11. எல்லா காரியங்களிலும் மத்திய நிலை சிறந்தது.
12. உன் வேலைகளில் உதவி செய்பவர்கள் உனக்குச் சிறந்தவர்கள்.
13. பாவமன்னிப்பு வேண்டுவதை விட பாவத்தை விடுவது சாலச் சிறந்தது.
14. பொறாமை உணர்ச்சிக்கு உள்ளத்தை பலியிட்டவன் வாழ்வை சூனியம் நிறைந்ததாக அமைத்துக் கொள்கிறான்.
15. வயது முதிர்ச்சியால் பல தாழ்வுகள் ஏற்படலாம்.
16. தப்பான உபயோகத்தால் பலவியாதிகள் ஏற்படலாம்.
17. அடிமுட்டாள் நண்பனைவிட அறிவுள்ள விரோதி சிறந்தவன்.
18. அல்லாஹ் மக்களைச் சத்திய வழியில் நடத்திச் செல்வது அவர்களுக்கு அவன் கொடுத்த செளபாக்கியங்களில் தலை சிறந்தது. அவனை நாசமாக்குவது வழி தவறச் செய்வதாகும்.
19. மக்களின் குறைகளைக் கூறுபவன் அதன் மூலம் தன் குறைகளைக் கூற ஆரம்பிக்கிறான்.
20. மக்களுக்குத் தொண்டு புரிபவர்களின் பணிகளை அல்லாஹ் செய்துமுடிக்கிறான்.