• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Dec 2012 » ​  படி! எப்படி?


படி! எப்படி?


    ந்தியாவை  800 வருடங்கள் ஆட்சி செய்த  முஸ்லிம்களில் முகலாய மன்னர்களில் ஒரு வரான ஷாஜஹான் டில்லி ஜும்ஆ மஸ்ஜிதைக் கட்டியயோது அதன் படிக்கட்டுகளின் எண்ணிக்கையை 63 ஆகவைத்துக் கட்டினார். அதன் ரகசியம் என்ன தெரியுமா? பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வயது 63 என்பதை நினைவு படுத்தத்தான்.


    மேலும், 63 ஆவது படியின் உயரம் எந்த அளவு எனில், செங்கோட்டையில் அரச தர்பாரில் அரசரின் அரியாசனத்தில் அமர்ந்தால்  அவரது தலை உயரத்திற்கு மேல் 63 ஆவது படி அமைந்துள்ளது. அதாவது, பள்ளியில் வணக்கம் புரியும் தொழுகையாளிகளின் காலணிகள் என் தலைமேல் இருக்க வேண்டும் என்ற அவரின் பணிவுதான்!


இஸ்லாமிய சமயத்தில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு 


    மயங்கள் அனைத்துமே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுச் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்தல் குறித்துக் கூறுகின்றன. போக்குவரத்துக்கு உண்டான பாதைகள் மற்றும் மர நிழல்களை அழிப்பதால், இறைவனின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும் என திருக்குரான் எச்சரிக்கிறது. புனித நகரங்களில் ஒரு மரம் கூட வெட்டப்படக் கூடாது. கேளிக்கைக்காக ஒரு விலங்கு கூட வேட்டையாடப்படக் கூடாது என இறைத்தூதர் எச்சரிக்கை செய்துள்ளார். 


    மேட்டு நிலத்தில் உள்ளோர் குறிப்பிட்ட அளவு நீர் மட்டுமே பயன்படுத்தி, மீதியைப் பள்ளத்தில் உள்ள நிலங்களுக்கு தடையின்றி விட்டு விடவேண்டும் என இஸ்லாமிய சட்டம் (­ஷரீயத்) கூறுகிறது.


    நதிக்கரையில் பருகும் போது கூடநீரை வீணாக்கக் கூடாது. ஒருவர் நீரை மிதமிஞ்சிப் பயன்படுத்தி, மற்றவருக்குப் பற்றாக்குறை ஏற்படுத்தக் கூடாது என இஸ்லாமின் நெறி முறைகள் கூறுகின்றன.

நன்றி: தினமலர்