பலம் படைத்தவர் நீங்கள்!
- தகவல் : A.M.J. ஸாதிக் B.B.A, திருச்சி.
நம்மிலே பலர் அடுத்தவரிடம் இருக்கும் பலத்தைப் பார்ப்பதைவிடபலகீனத்தை பார்ப்பதுதான் அதிகமாக இருக்கிறது. இதைவிட இன்னும் கொடுமை நம்மிடம் இருக்கின்ற நல்ல வியங்களைப் பார்ப்பதைவிடநம்மிடம் இருக்கின்ற குறைகளை அதிகம் பார்க்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?
மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் ஏன்வெற்றியடையவில்லை என்ற ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் வியங்களைவெளியிட்டார்கள். அதில் மிக முக்கியமானது, ஒரு குறிக்கோள்இலட்சியமில்லாமல் இருப்பதும் மற்றும் தன்னைப்பற்றிய உயர்வான சுயமதிப்பீடு இல்லாமல்இருப்பதும்தான்.
உங்கள் கட்டைவிரலின் ரேகையைப் போல் உலகில் உள்ள கிட்டத்ததட்ட 750கோடி பேர்களில் ஒருவருக்குக் கூட இல்லை. எல்லாம் தனித்திருக்கிறது. உங்களுக்குக் கிடைத்த அனுபவம் போல்அடுத்தவர்களுக்கு இல்லை. இப்படி பலபல கூறிக்கொண்டேசெல்லலாம். நீங்கள் ஒரு தனித்தன்மை (Unique) மிக்கவர். உங்களிடம் அபாரமான திறமைகள் இருக்கின்றன. அதிசயத்திலும் அதிசயம் என்று மனிதனைப்பற்றியஆராய்ச்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் நினைப்பதைவிட பல்லாயிரம்மடங்கு சக்தி மிக்கவர் நீங்கள். உங்களிடமஇருக்கும் நல்ல வியங்களைப் பாருங்கள். உதாரணமாக தாய், தந்தை,சகோதரன், மனைவி, குழந்தைகள்,உங்கள் நண்பர்கள், உங்கள் சொந்தங்கள், உங்கள் ஆரோக்கியம், உங்கள் படிப்பு, உங்கள் வாகனம், உங்கள் அனுபவம், உங்கள் திறமை, நீங்கள் வாழும் இந்த பூமி, இப்படி பலபல நல்ல வியங்கள் இருக்கின்றன. அதை அங்கீகரியுங்கள். உணருங்கள். இன்னும் நீங்கள் உங்களிடம் பார்த்தீர்களானால்பல நல்ல வியங்களை உங்களால் பார்க்க முடியும்.
வெற்றியடைந்தாலும், ஏதோ செய்தேன். என்னால் முடிந்தது, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனக்கூறுவர். அதே நேரத்தில், ஒரு செயலில்தோற்றுவிட்டால், நான் தவறு செய்துவிட்டேன். ச்சே, இப்படி ஆகிவிட்டதேஎன்று தன்னைத்தானே நொந்து கொள்வது, சீர் தூக்கிப் பார்த்துஅந்தத் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன, எப்படித்திட்டமிட்டிருந்தால் வெற்றி யடைந்திருக்கலாம், அடுத்தமுறை சிறப்பாகச் செய்வதுஎப்படி? அதற்கு என்னென்ன பயிற்சிகள் தேவை என எடுத்துக்கொண்டால் போதும். என்னிடம் ஆற்றல் இருக்கிறது என அங்கீகரியுங்கள்.
என்ன நடந்தது என்பதை விட எப்படி அதை எடுத்துக்கொண்டோம் என்பதைப்பொறுத்துத்தான் நம் வாழ்க்கை அமைகிறது. அதனால்தான் என்ன நடந்தது என்பதற்கு 10 மதிப்பீடுகளும் எப்படி எடுத்துக்கொண்டோம் என்பதற்கு 90 மதிப்பீடும் மனோபாவத்திற்கு (Attitude) கொடுக்கிறார்கள். விலை உயர்வான பலகோடிமதிப்புள்ள கேமராக்கள் சந்தையில் உள்ளன. பல இலட்சம் மதிப்புள்ள கம்யூட்டர்கள் வந்துவிட்டன. ஆனால், எதனுள்ளும்ஒப்பிடமுடியாத விலை உயர்ந்த ஓர் அற்புதமான கேமரா உங்கள் கண்கள், அதே போல் 10 இலட்சம்கம்யூட்டருக்கும் மேலான சக்தியுள்ள அற்புதமான மெகா கணினிஉங்கள் மூளை. இப்படி பலபல வியங்களைக் கூறிக் கொண்டேசெல்லலாம்.
நீங்கள் சாதாரணமானவர் அல்ல. உங்களின் சூழ்நிலையை வைத்து உங்களை எடை போடாதீர்கள். நீங்கள் ஒருஅசாதாரணமானவர். பிரம்மாண்டமானவர். நீங்கள் தனி ஆள் அல்ல. நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் ஓர் அங்கம், நீங்கள்யாரிடமும் ஒப்பிட்டு உங்களை தாழ்த்த வேண்டியதில்லை. எல்லோரையும் வி.ஐ.பி.யாக பாருங்கள். அதே நேரத்தில் நீங்கள் வி.வி.ஐ.பி. என்பதைமறந்து விடாதீர்கள். நீங்கள் நிச்சயமாகஉயர்வானவர். இது சத்தியமானஉண்மை.
உங்களின் ஒவ்வொரு திறமையையும் போற்றுங்கள். இருக்கின்ற சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு அந்தநிலைமையை மாற்ற புது வியூகம், புதிய இலட்சியம் வகுங்கள். ஒரு சிறப்பான, வளமான, ஆரோக்கியமானசூழ்நிலையை ஏற்படுத்துங்கள். அடுத்தவரிடம்பலத்தைப் பாருங்கள். என்ன விதைக்கிறோமோஅதைத்தான் அறுவடை செய்ய முடியும். நல்லதை,பலத்தை விதைத்தால் பலமடங்கு பலம் பெருகும். ஏனெனில் உண்மையிலேயே பலம் படைத்தவர்நீங்கள். நம்புங்கள். நல்லதே நடக்கும்.