• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  மந்தை அறிவில் மாபெரும் சாதனை!


மந்தை அறிவில் மாபெரும் சாதனை!

 

 (ஒற்றுமையயனும் கயிறு) 

 

-  ரஹ்மத் ராஜகுமாரன்


 

    சிக்கல் மிகுந்த உலக வாழ்வினை சமாளிப்பதற்கு உதவியாக எறும்புகளும்தேனீக்களும் பறவைகளும் மந்தையாக வாழும் விலங்குகளும் எளியவழிகளை நமக்குச் சொல்லிக்கொடுக்கின்றன.


      சிக்கல் தீருமா....? சற்று யோசியுங்களேன்.


      எறும்புகள் புற்றுகட்டுகின்றன, பெரும்படை எடுப்பு நடத்துகின்றன.  மாயாஜாலம் போல கூட்டமாக வருகின்றன, அதே போல மறைந்து விடுகின்றன.  இவற்றைப்பார்க்கும் போது எறும்புகளுக்கு அசாத்திய அறிவு இருக்கும் போலத் தோன்றுகிறது அல்லவா....?நிச்சயமாக அதுதான் இல்லை.


      ஓர் இன்ஜினியருக்குள்ளஅறிவோ, கட்டுமான அறிவோ ஒரு தனி எறும்புக்கு நிச்சயமாகஇல்லை.  ஆனால் எறும்புக் கூட்டத்திற்கு உண்டு!


      தனியயாரு எறும்புஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் திருதிருஎன்று விழிக்கும், தனி எறும்பின்சாமர்த்தியம் அவ்வளவுதான்.  ஆனால் எறும்புக்  கூட்டத்தின் அறிவுக்கு ஈடு இணை இல்லாத மாபெரும்சாதனைகளை நிகழ்த்தும் அற்றல் உண்டு என்று ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்து பெண் அறிஞர்டெ பொரா கோர்டன் சொல்கிறார். எறும்பு, தேனீ கரையான் போன்ற  சிற்றினங்கள் 140 மில்லியன் ஆண்டுகளாகப் போராடி வளர்த்துக் கொண்டஅறிவுதான் ‘மந்தைபுத்தி’ - ‘மந்தபுத்தி அல்ல. மந்தைப் புத்தி’


      தனி ஒரு எறும்பினால்நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் சாதçயை ஓர் எறும்புக் கூட்டம்எளிதில் சாதித்து விடும்.  தீனிஇருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதும் அதற்கான மிக சீக்கிரமான குறுக்கு வழியைக் கண்டுபிடிப்பதிலும் கூட்டத்தைப் பிரித்து வேலையைப் பங்கிட்டுக் கொள்ளும் நிர்வாகத்திறமையிலும் பக்கத்துப் புற்றிலிருக்கும் கூட்டத்துடன் வேட்டைப் பகுதியைப்பகிர்ந்து கொள்ளும் ராஜதந்திரத்திலும் தனி ஓர் எறும்பு ‘மண்டு’. ஆனால் கூட்டமாகச்செயல்படும் போது அதன் வேகம், விவேகம் இரண்டுமே அசாத்தியம்.  இதை டெபொரா “ஸ்வார்ம் இன்டெல்லிஜென்ஸ்” (Swam Intelligence) மந்தைப்புத்தி என்றழைக்கிறார்.


      ஒவ்வொரு எறும்பும் எளிமையான ஒரு சில விதிமுறைகளைப்பயன்படுத்துகிறது.  அதாவது “தொடர்ந்துஇடைவிடாமல் தகவல் பரிமாறும், அடுத்த எறும்பைக் கவனி, அருகிலேயேமோதிக் கொள்ளாமல் இரு; தொடர்ந்து ஒரே திசையிலேயே போ”-என்னும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றும் போது தானியங்கும் எந்திரமாக மந்தைக்கூட்டம் செயல்படுகிறது. எறும்பின் நிர்வாகத் திறமையான மந்தை புத்தியை மார்க்கோ டோரிகோ (Marco Dorigo) என்னும் கம்ப்யூட்டர் வல்லுநர் 1991-ல் கணித வழிமுறையில் ஏற்படுத்தினார்.


      இதன் அடிப்படையில் போக்குவரத்து நெறிப்படுத்துதல், விமானங்களின்பயண நேரங்களை நிர்ணயித்தல், மிலிட்டரிவியூகம் அமைத்தல்ஆகியனவற்றை வெற்றிகரமாக செய்து காட்டினார்.


      அட,சாதாரண எறும்புகளிடம் நாம் கற்ற பாடமா இது....? “நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் மார்க்கமாகிய கயிற்றை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.  இன்னும் நீங்கள்(ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு) பிரிந்து விடாதீர்கள்.” குர்ஆன் (3 : 103).


      ‘அமெரிக்கன் ஏர் லிக் விட்’ என்னும் கம்பெனி கேஸ் சிலிண்டரைதாங்கள் உற்பத்தி செய்யும் 100 இடங்களிலிருந்து சேகரிப்பதும் 6000 இடங்களுக்குசப்ளை செய்வதும் போன்ற மிகவும் சிக்கலான பணியை எறும்பின் மந்தைப் புத்தியைக்கம்யூட்டரில் செய்வித்து விநியோக முறையை வெற்றிகரமாக செயல்படுத்துகிறது!


      ‘சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ்’ என்னும் அமெரிக்க விமானப் போக்குவரத்துநிறுவனம் எறும்புகளின் மந்தை புத்தி அடிப்படையில் தினமும் 200 விமானங்களை தனதுஇரண்டு ஓடுபாதையில் இறக்கி,ஏற்றி 3 வாயில்கள் வழியாக எவ்வித தாமதமுமில்லாமல் பயணிகளைப் பறக்கவிடுகிறது. ‘கிரெய்க் ரெனால்ட்ஸ்’ என்பவர் ஒரு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆய்வாளர். இவர்மிருகக் கூட்டங்களிடையே செயல்படும் விதிமுறைகளை கிராபிக்ஸில் உபயோகிக்கிறார்.  இவர் கம்ப்யூட்டரில் கற்பனையாகபறவைக் கூட்டத்தை ‘சிமுலே­ன்’ செய்கிறார்.  அப்பறவைகளுக்குபாய்ட் (Bold) என்று பெயரிட்டியிருக்கிறார்.


      ‘பாய்டுகளுக்கு 3 எளிய விதிகளை மட்டுமே நான் கொடுத்தேன்


1.  “மற்ற பாய்டுகளின் மீது மோதிக் கொள்ளாமல்இடைவெளி விட்டு பறப்பது”

2.  “மற்ற பாய்டுகளின் சராசரி திசையில் தொடர்ந்துபறந்து கொண்டிருப்பது”

3. “கூட்டத்திலிருந்துவிலகிவிடாமலிரு”.


      “அவ்வளவுதான் நான் கொடுத்த ‘ரூல்’ கம்யூட்டர் திரையில் அவை நகரஆரம்பித்ததும் நிஜமான பறவைக் கூட்டம் போலவே அவை இருந்தன” என்று வியப்புடன்சொல்லும் ரெனால்ட,இயற்கை மேற்கண்ட 3 விதிகளையும் பறவைகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளதுஎன்பதை உணரும் போதுதான், அவைகளைப் படைத்த ஒருவன் இருந்தே ஆகவேண்டும் என்பது தெளிவாகிறது.

 

      இதே மந்தைப் புத்தி மீன்களுக்கும் இருக்கிறது.  ஆயிரக் கணக்கான நெத்திலி மீன்கள் ஒரே மனதாகதிடீரென்று மின்னல் வேகத்தில் திசைமாறி கூட்டமாக கலைந்து போகாமல் ஒரு பெரிய வெள்ளிபூதம் திரும்புவது போல திரும்புகின்றன. ஒவ்வொரு மீனும் சக மீன்களின் அசைவுகளைக்கவனித்து பின் பற்றுவதால்,நொடிநேரத்தில் அவற்றிற்குள்ளே தகவல் பரவல் நிகழ்கிறது.- தொடர்ந்துஅடுத்த மீனைக் கவனி- அருகிலேயே மோதிக்கொள்ளாமல் இரு- தொடர்ந்து ஒரே திசையிலேயே நீந்து. இதுபோன்ற மிக எளிய விதிகளையேபின்பற்றுகின்றன.  விதிகளை வகுத்துக்கொடுத்தது யார்...?யோசித்துப் பாருங்கள்....


      இந்தோனேஷியக் காட்டில் பல்லாயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஒரு மரத்தில் இருந்தபடிஅவை ஒளி வெள்ளத்தில் முழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. சொல்லி வைத்தாற் போல அவை ஒரேசீரான காலகதியில் ஒளிர்கின்றன. அரங்கத்தில் கை தட்டல் ஒலி தானாகவே ஒரே தாளகதியில் இறங்கிவிடுவதும்இதுபோலத்தான்.


      வெட்டுக்கிளிப் பூச்சிகள் ஓர் அளவை விஞ்சும் போது அவை புகைமண்டலம் போல வானில் கிளம்புகின்றன. செல்லுமிடங்களிலெல்லாம் தோட்டங்களை துவம்சம் செய்து விடுகின்றன. மந்தைபுத்தியை முழுவதும் அறிந்து கொண்டால், இவற்றை எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.


      காட்டுப் பகுதியில் ‘கரிபூ’ கடமான் கூட்டங்கள் எப்படிக் கூட்டமாகவிரைந்து இடம் பெயர்கின்றன என்பதை ‘கார்ஸ்ட்டென்’ கவனித்தார்.  கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் தூரம்அக்கூட்டத்துடன் பிரயாணம் செய்து வீடியோ படம் எடுத்தார்.  அவற்றின் ஒழுங்கான இயக்கத்தை வார்த்தைகளில்விவரிப்பது கடினம்.  வானில் மேகம் நகர்வதுபோல அவை மிக எளிதாக காட்டில் நகர்ந்தன. ஒவ்வொரு கட மானும் அடுத்த கடமான் என்னசெய்கிறது என்பதைத் தொடர்ந்துகவனிக்கிறது. அதை அனுசரித்து யோசனை செய்யாமல் அப்படியே செயல்படுகிறது.  எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது.  ‘ஐயோ இப்படி ஆகிவிடுமோ’ என்கிற பரபரப்பும்கிடையாது.  காரணமும் இல்லை, விளைவும்இல்லை. அவை அப்படியே இயல்பாய் இருந்தன.


      கரிபூ கடமான்கள் குறுக்கலான மரக்கூட்ட இடைவெளியில் புகுந்துவெளிப்பட்ட போது அங்கே ஒரு ஓநாய் பசியுடன் காத்திருந்தது.  அடுத்த கணம் ஆணியடித்தது போல எல்லாகரிபூமான்களும் நின்றுவிட்டன; திடீரென்று ஒரு அமைதி. ஓநாய் மெல்ல நெருங்க ஆரம்பித்தது.  ஓர் எல்லைக்குள் வந்ததும் சொல்லி வைத்தது போலஅனைத்து கரிபூ மான்களும் ஓட ஆரம்பித்தன. ஓநாய்க்குப் பக்கத்தில் வரும் மந்தையானது ஒரு நீண்ட போர்வையை விரிப்பது போலவிரிந்து கொண்டேயிருந்தது.  ஓநாயோஎதைப்பிடிப்பது என்று தெரியாமல் திணறி ஒன்றை மாற்றி ஒன்றை விரட்டியது.  எல்லா கரிபூமான்களும் பத்திரமாகத் தாண்டிவிட்டன.  ஓநாய் மூச்சு இரைக்கவெறுங்கையுடன் நின்றுவிட்டது.  அச்சமோ,பதட்டமோ கரிபூ மான்களிடம் காண முடியவில்லை.  செய்ய வேண்டியதை அவை கச்சிதமாக செய்து முடித்துவிட்டன.  யார் கற்றுக் கொடுத்த பாடம்இது...? நினைத்துப் பாருங்கள்! மனிதக் கூட்டத்தில் அப்படிஒரு வெறி பிடித்த ஓநாய் நுழைந்து விட்டால், என்னவாகும்என்று. நெரிசலில் மிதிபட்டே பலர் இறந்து போவார்கள் என்பதை சொல்லாமலே நீங்கள்அறிவீர்கள்.


      “பூமியில் ஊர்ந்து திரிபவைகளும், விண்ணில் தனது இரு இறக்கைகளால் பறக்கக்கூடியவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி (வேறு) இல்லை குர்ஆன் (6:.38)


      இயற்கையில் மிருகங்களும், மீன்களும், பட்சிபறவைகளும்எப்போதும் கூட்டமாகவே வாழ்கின்றன.  கூட்டமாகஇருப்பதில் ஒரு பத்திரத் தன்மை இருக்கிறது. எதிரி வருவதைக் கூட்டத்தில் ஒருவர் பார்த்து விட்டாலும் மேலும் மற்றஎல்லோருக்கும் அது பயனளிக்கிறது.  இதுபோலவே இரை தேடுவதிலும், வாழ்க்கைத் துணை தேடுவதிலும்குட்டிகளைக் காப்பாற்றுவதிலும் அனுகூலம் கிடைக்கிறது.  கூட்டாக இருப்பதில் நிறைய இலாபங்கள் உள்ளன.


      உயிரியலில் மாபெரும் சிந்தனையாளர்களும் சாதனைகளைப் படைத்தவர்களும்கூட மந்தை அறிவைக் கண்டு வியந்து போகிறார்கள்.


      இதில் என்ன வினோதம் என்றால் இந்தக் கண்டு பிடிப்புகளைப்பயன்படுத்தி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது கூட நமக்குத்தெரியாமலிருப்பதுதான்.


      எனவே மந்தை ஜீவராசிகளின் வாழ்க்கை அமைப்பை கம்யூட்டரில்திட்டமிட்டுச் சிந்தித்துப் பாருங்கள். தீர்க்கவே முடியாது என எண்ணியிருந்த பிரச்சனைக்குத்  தீர்வுகள் கிட்டலாம்.


      வாகனம் ஓட்டுவதில் கூட நாம் எளிய விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம்.முந்தியடித்துக் கொண்டு  செயல்படுவதுதான்நம்பழக்கம்.  சுயநலம், பரபரப்பு,கிடைக்காமல் போய்விடுமோ என்னும் அவசரம். இதைத்தான் ரேசன்கடை, பஸ்நிலையம்,ரயில் நிலையங்களில் காண்கிறோம். திரண்ட செயல் எப்படி இருக்கும் என்பது தனிமனிதனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.  ஆனால் அதன் விளைவும் பயனும் அவனுக்குக்கிடைப்பது நிச்சயம்.


      தனித் தேனீக்கு அதன் அடைக் கூடு எப்படி உருவானது என்னும் அறிவுஇருக்காது.  புற்றின் அழகோ அதன் அற்புதஅமைப்போ பற்றி தனி எறும்புக்குத் தெரியாது. செய்ய வேண்டியதை மட்டும் அவை செய்கின்றன. விளைவு தானாக கிடைக்கிறது. அதுவும் எல்லோருக்கும் கிடைக்கிறது.


      ஆஹா... பள்ளிக் கூடத்தில் குப்பை இருக்கிறதே, பள்ளிவாசலில்நூலாம்படை தெரிகிறதே, நாம் வேலை செய்யும் அலுவலகமோ, ஆலை யிலோ குப்பை கூளங்கள் தெரிகிறதே, மக்கள் நடந்துபோகும் பாதையில் அசிங்கம் இருக்கிறதே என தனி மனிதன் உணர்ந்து சிறுசிறு வேலைசெய்தால் போதும்... திரளும் போது அதன் பலனே தனி!


      பாதையில் சிறுமுற்களை அப்புறப்படுத்தினால் அதற்குரிய பலன்பெரியதாக இருக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதை.....


      சிந்தியுங்கள் வாசகர்களே... செயல்படுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.