• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  சாந்தி நபி


சாந்தி நபி பற்றி சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்


 

         மனிதனை மனிதனாக வாழ வைப்பதே அற்புதம்.  அதையே எம் பாட்டனார் செய்தார்கள். அதுவே ஷ­ரீஅத்.


      ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹக்கின் சம்பூரண தஜல்லி(வெளித்தோன்றல்) அதாவது,உடலை மட்டும் கவனிக்கும் போது அவர்கள் ஹக்கின் (இறையின்) அப்து(அடிமை). ஹக்கின் பகுதிகளில் ஒரு பகுதி. இதிற் பூரணமில்லை.  அவர்கள் சூக்குமத்தையும் தூலத்தையும் சேர்த்துக் கவனிக்கும்போதே நம் பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஹக்கான (இறையின் பூரண) தோன்றல் ஆவார்கள்.


      பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் நிலைமாறாதமாற்றமடையாத பூரணத் தோன்றல் ஆவார்கள். பரிபூரண ஹக்கு எப்படி தான் பரிபூரண நிலையிலிருந்து தன்னைத் தோற்றுவித்துஹக்காக உள்ளதோ அப்படியே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பரிபூரணமாகஇருந்து தேவைக்கேற்ப நிலைகளை மாற்றிக் கொண்டார்கள். ஆயினும் உள்ளாலும், வெளியாலும்அவர்கள் ஹக்கே (பரிபூரண உண்மை) ஆவார்கள்.