தமிழகத்து வலிமார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
கலீபா, எம். சிராஜுத்தீன் பி.எஸ்.ஸி. , திருச்சி
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்கள் ஒரு சமயம் மாத்தறை பள்ளிஒன்றில் பயன் செய்துவிட்டு, தாம் கைப்பட எழுதிய“பத்ஹுஸ் ஸலாம்” என்னும் நூலினை அங்கு விற்பனை செய்து விட்டு, திக்குவல்லைக்குப் புறப்பட்டார்கள். அப்போது தீன் லப்பை என்பவர், அப்பா எழுதிய நூலை வாங்கிப்பார்த்து விட்டு பூ. இது என்ன பிரமாதம். இதைவிட அழகாக எத்தனையோ நூல்களை நானும் எழுதியிருக்கிறேன்என்று கொஞ்சம் ஆணவத்துடன் பேசினார்.
தீன் லெப்பை பள்ளியைவிட்டு வெளிய வந்து குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். அப்போது அவரை ஒரு முதலை இழுத்துச் சென்று விட்டது. தீன் லெப்பை ஐய்யோ என்று அலறினார். அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. சிறிது தூரத்தில் அவரின் உடல் கரைதட்டியது. அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவரது உடலை வெளியேஎடுத்துப் பார்த்த போது அவரின் வலது கை துண்டிக்கப்பட்டு இருந்தது.
தீன் லெப்பை உடலைமுறைப்படி குளிப்பாட்டி அடக்கம் செய்து விட்டனர். மக்களுக்கு மரணபயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த முதலைய அவ்வூர் மக்கள் பிடித்து விட்டார்கள். அதன் வயிற்றைப் பிளந்து பார்த்த போது தீன் லெப்பையின்வலதுகை முழுதாக இருந்தது. இந்தக் கையை என்னசெய்வதென்று தெரியாமல் ஊர் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர், மாப்பிள்ளை லெப்பை அப்பா அவர்கள் எழுதிய பத்ஹுஸ்ஸலாம் என்ற நூலைப் புரட்டிப் பார்த்தார். அதில்இருந்த விபரப்படி தீன் லெப்பையின் வலது கையை ஒரு ஜனாஸாவை எப்படி அடக்கம் செய்வோமோ அதுமாதிரியேமுறைப்படி எல்லாம் செய்து அடக்கிவிட்டார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மக்கள்பலபேர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்களிடம் பைஅத் பெற்று அவர்களின் சீடர்களானார்கள்.
மற்றொரு சமயம் மாப்பிள்ளைலெப்பை ஆலிம் அப்பா அவர்கள் கண்டி சென்று விட்டு கொழும்பிற்கு தனியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் இருட்டி விட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை அவர்களுக்கு. அப்போதுதூரத்தில் ஏதோ ஒரு விளக்கு வெளிச்சம் தென்பட்டது. அப்பா அவர்கள் அங்கு சென்று அந்த வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்து இரவாகிவிட்டதே, எப்படி பிரயாணத்தைத் தொடர்வது? தங்கிப் போவதென்றால் எங்கே தங்குவது? என்று தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஆள் அரவம் கேட்ட வீட்டின் சொந்தக்காரர்வீட்டின் கதவைத் திறந்து, “யார் அது?” என்று கேட்டார். அப்பா அவர்கள்,“நான் தான் சற்று இளப்பாறிவிட்டுச் செல்லலாமென்று உட்கார்ந்திருக்கிறேன்”என்றார்கள். “உங்களுக்கு எந்த ஊர்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்வீட்டுக்காரர். அப்பா அவர்கள் எனக்கு இந்தியாவிலுள்ளகீழக்கரை என்றார்கள். உடனே வீட்டுக்காரர் மிகுந்தஆவலுடன் அந்த ஊரைச் சேர்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களைத் தெரியுமா உங்களுக்கு?அவர்களைப் பார்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டுள்ளேன் என்று பட படவென்றுபேசி முடித்தார். பொறுமையாகச் சிரித்தபடி,“ஓ அவர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் இப்போது உங்கள் முன்தான் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்கள்.
அதிர்ந்து போனார்வீட்டுக்காரர். ஆ.. அப்படியா அது தாங்கள் தானா!என்று அவர்களின் கரங்களை முத்தமிட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவர்களை ஆசுவாசப்படுத்தி அப்பா அவர்களுக்கு நல்லஉணவு கொடுத்து உபசரித்தார். சில நாட்கள் அவர்களைஅந்த வீட்டிலேயே தங்க வைத்து அவரே அப்பா அவர்களை கொழும்பில் கொண்டு வந்து விட்டுச்சென்றார்.
கொழும்பு வந்த அப்பாஅவர்களுக்கு ஒரு வியப்பான செய்தி காத்திருந்தது. அதாவது அளுத்கமா என்ற ஊரில் அடக்கமாகியுள்ள ஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் ஓரிரவு தம் மருமகனின் கனவில்தோன்றி, “மகனே! மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்கொழும்பிற்கு வந்துள்ளார்கள். நீங்கள் போய்அவரைச் சந்தித்து, என்னுடைய கைத்தடி, போர்வை, மைக்கூடு இவைகளைஎன்னுடைய அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு வாருங்கள்” என்று கூறி மறைந்தார்கள். அதேபோல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்கள்கனவிலும் ஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் தோன்றி மேற்கண்ட விபரங்களைச் சொல்லி, அவற்றை தாங்கள் மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி விட்டார்கள்.
அதன்படி ஹஸன் லெப்பைஆலிம் அவர்களின் மருமகன் வந்து கொடுத்து விட்டு அப்பா அவர்களை அளுத்கமாவிற்கு அழைத்துச்சென்றார். அங்கு தங்கியிருக்கும்போது அப்பாஅவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு விட்டது.
இதற்கு செம்மறிஆட்டுக்கறி சாப்பிட்டால் நலம் என விரும்பினார்கள். அவ்வூர் மக்களும் எவ்வளவோ முயன்றும் செம்மறி ஆட்டுக்கறிகிடைக்கவில்லை. தற்போது அப்பா அவர்கள் செம்மறிஆட்டுக்கறி கிடைத்து விட்டால் ஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் பேரில் ஒரு மெளலிது ஓதுவதாகநேர்ச்சை செய்து கொண்டார்கள். சற்று நேரத்தில்எங்கோ உள்ள ஒரு மனிதன் அவனின் நேர்ச்சைக்காக ஒரு செம்மறி ஆட்டை ஹஸன் லெப்பை ஆலிம் அவர்களின்பள்ளிக்குச் கொண்டு வந்து கந்தூரி கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். அப்பா அவர்களும் மற்றவர்களும் அந்த ஆட்டுக்கறியைஉண்டார்கள். அப்பா அவர்களும் தாம் நேர்ச்சைப்படிஹஸன் லெப்பை ஆலிம் அவர்கள் மீது மெளலிது பாடி வைத்துவிட்டுச் சென்றார்கள்.
இதுபோன்று உலகமெங்கும்அல்லாஹ்வின் நல்லடியார்கள் மறைந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைக்காட்டினாலும் வேண்டுமென்றே வீம்பாக இதை மறுத்து அல்லாஹ்வுக்கும், அவனது நல்லடியார்களுக்கும் சிலர் மாறு செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அல்லாஹ் அப்படிப்பட்டநாசக்காரக் கூட்டத்திலிருந்து நம்மையும் நம் பிள்ளைகுட்டிகளையும் காப்பானாக. ஆமீன்.