• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  ஞானத்துளிகள்


ஞானத்துளிகள்


தொகுத்தவர்: -   திருமதிG.R.J திவ்யா பிரபு     I.F.S  சென்னை


 

+     மனதை இறைவன் மீதுநாட்டுவது எங்ஙனம்?


      இறைவனுடைய திருநாமத்தைஜபி.  அவன் பெருமையைப் புகழ்ந்து பாடு.  நல்லாருடன் இணக்கம் வைத்துக்கொள்.  இடையிடையே பக்தர்களையும் சான்றோர்களையும சென்றுதரிசனம் பண்ணு.


+     எல்லார் உள்ளத்திலும்இறைவன் இருக்கிறான்.  ஆனால் பக்தன் ஒருவன் நல்லாரோடுமட்டும் இணக்கம் கொள்ளவேண்டும்.


+     மயில் ஒன்றுக்குஒருவன் மாலை நான்கு மணிக்குக் கொஞ்சம் அபினி கலந்த தீனி கொடுத்தால் அடுத்த நாள் மாலைசரியாக நான்கு மணிக்கு அம்மயில் திரும்பவும் தீனி தின்ன வந்துவிடும்.  அபினியின் வேகம் அத்தகையது.  அதேவிதத்தில் நல்லியல்பு படைத்துள்ள ஆத்ம சாதகன்ஒருவன் சான்றோன் ஒருவரிடமிருந்து அருள்விருந்தை ஒரு தடவை அனுபவித்துவிட்டால் திரும்பத்திரும்ப அவரிடம் போக அச்சாதகன் எத்தனிக்கிறான்.


+     இவ்வுலக இன்னல்களினின்றுதப்பித்துக் கொள்ள வழி யாது?

பிரார்த்தனையும் தியானமும் இன்னல்களினின்று விடுபடுவதற்கு உபாயங்களாகின்றன.  நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் வைத்தியனுடைய உதவியின்றி நோயைக் களைய முடியாது.  ஏதோ ஒருநாள் தியானம் செய்தல் போதாது.  திரும்பத் திரும்ப நல்லார் இணக்கத்தை நாட வேண்டும்.  ஏனென்றால் உலகப்பற்று என்னும் நோய் உடலில் ஊறிப்போய்விட்டது.  நாடியை நீயே சரியாகத் தெரிந்துகொள்ளமுடியாது.  வைத்தியனுடைய துணை கொண்டே கபநாடிஎது, பித்தநாடி எது என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.


+ உடலில் நாடி பார்க்கும்திறமை ஒருவனுக்கு ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நாடி சாஸ்திரம் தெரிந்தவர்களிடமிருந்து அவன் அந்தப் பாடத்தைப் பொறுமையாகப் பலகாலம் கற்றாக வேண்டும்.  நீர் இறையை தரிசித்திருக்கின்றீர்என்றால் அவரை எனக்கும் காட்டமுடியுமா என்று ஒருவன் அலட்சியமாகக் கேள்வி கேட்கின்றான்.  அத்தகையவன் தியானம் செய்ய வேண்டும்; சாதனங்கள் புரிய வேண்டும்.  இறையை அறிந்தவர்களுடன் தொடர்ந்து இணக்கம் வைக்கவேண்டும்.


+ இறை பக்தியும்இறை நேசர்களின் சகவாசமும் ஒருவனுக்கு வந்துவிட்டால் போதுமானது.  மேற் கொண்டு அடைதற்கு என்ன இருக்கிறது?

 

+     குளிப்பாட்டிய யானைதிரும்பவும் மண்ணை வாரித் தன்மீது தூவிக் கொள்ளும்.  ஆனால் குளிப் பாட்டியதும் அதைக் கல் பாவிய இடத்தில்கட்டி வைத்து விட்டால் அது சுத்தமாயிருக்கும். அங்ஙனம் உலகப்பற்றுடைய ஒருவர் சில வேளைகளில் தெய்வீக எண்ணம் படைத்தவனாகிறான்.  அத்தகையவனை தியானத்திலேயே வைத்துவிட்டால் அவன் உள்ளம்மாசு படியாது இருக்கும்.


+     வைத்தியன் ஒருவனிடம் பயிற்சி பெறுகிறவனுக்கே நாடிபார்க்கும்திறன் வருகிறது.  அதே விதத்தில் தியானம் பண்ணுகிறவர்களுக்குப் பாரமார்த்திக வி­யங்கள் விளங்குகின்றன.  லெளகிகபுத்தியைக் கொண்டு தெய்விக வி­யங்களைத் தெரிந்து கொள்ளமுடியாது.


+     வேதாந்திகள் ஹடயோகத்தை அங்கீகரிப்பதில்லை.  ஆனால் ராஜ யோகம் வேதாந்தத்துக்குஉடன்பாடு.  ராஜயோகத்தின் மூலம் ஜீவ பிரம்மஐக்கியம் உண்டாகியது.


+     மனிதன் எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அதன் மூலம் மனம் அடங்கவேண்டும்.  மனதுக்கு அடிமையாயிருப்பவன்யோகியல்ல; மனதைக்கட்டியாளுபவன் யோகி.  மனம் அடங்குமிடத்துப்பிராணனும்  ஒடுங்குகிறது.  பிராணன் ஒடுங்கிய நிலையில்  கும்பகம் ஏற்படுகிறது.  பக்தியின் மூலமாகவும் கும்பகம்                      வாய்ப்பதுண்டு.


+     இன்னதைச் செய்வேன் அல்லது இன்னதைச் செய்யமாட்டேன் எனச்சாதகன் ஒருவன் தீவிரமாகத்தீர்மானம் செய்துகொண்டால் அவனுடைய அடங்கிய மனது அதற்கேற்றபடி நடந்துகொள்ளும்.


+     புதியதாகச் சலவை செய்து வந்துள்ள வெள்ளை வஸ்திரத்துக்குநிகரானது  மனது.  அத்தகைய வஸ்திரத்தை எந்த நிறத்தில்தோய்த்தாலும் அந்த நிறத்தை எளிதில் எடுத்துக்கொள்ளும்.  மனது எதில் ஊறியிருக்கிறதோ அதன் இயல்பைஎடுத்துக்கொள்கிறது.


+     சித்தசுத்தி அடையப் பெற்றவனுக்கே இறைவனது தரிசனம்கிட்டுகிறது.  ஜலதோ­த்தோடு கூடியகாய்ச்சலில் வருந்துகின்றவனுக்கு கொயினாப்பொடி எப்படி உதவும்? முதலில் ஜலதோ­ம் போகவேண்டும்.


+     மனது உறுதியாகும் வரையில் யோகம் லபிக்காது.  உலகப்பற்று என்னும் காற்று மனதைக்கலைக்கிறது.  எரிகிற தீபத்தோடு மனதைஒப்பிடலாம்.  காற்றடியாதிருக்கும்பொழுதுதீபம் அசையாதிருக்கிறது.  மனதுக்கு அத்தகையநிலை வந்தால் சாதகனுக்கு யோகாரூடநிலை வருகிறது.