• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..


சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..

தொடர்.....


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:   கிப்லா ஹள்ரத்  , திருச்சி.


 

 இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல் லாஹி அலைஹி அவர்கள் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள் : ஜைது என்பவர் இறந்து விட்டார் அவருடைய ஆஸ்தி(சொத்து) 600 திர்ஹங்கள் இருந்தன.  அவருக்குச்சொந்தக்காரர்களும் இருந்தார்கள்.  ஒரு சகோதரியும்இருந்தார்.  ஜைதின் சொத்தைப் பங்கிட்ட போதுசகோதரி பாரிஸாவிற்கு 1 திர்ஹம் மட்டுமே கிடைத்தது.  இந்தப் பங்கீட்டு முறை சரியா? தவறா? எப்படி?


      இந்த நுணுக்கமானபங்கீட்டுச் சட்டத்தை அறியாதிருந்த அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வெட்கத்தால்தலை குனிந்தார்கள்.  அப்போது அங்கிருந்த கலீஃபாஹாரூனுர் ரUத், “இமாம்ஷாஃபிஈ அவர்களே! இந்த வினாவிற்கு தயவு செய்து தாங்களே விடைபகர்ந்து விடுங்கள்!”என்றார்.   அதற்கு இமாம் ஷாஃபிஈரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புன்முறுவலுடன் பதில் சொல்லத் தொடங்கினார்கள்.


      நான் ஒரு ஹதீதைப் பார்த்தேன்; அதில் வரும் வி­யமே இவ்வினாவிற்குப்பொருத்தமானதாக அமையும் எனக் கருதுகிறேன் எனக்கூறத் தொடங்கிஒருமுறை கலீஃபா ஹள்ரத் அலிரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரயாணம் செய்வதற்காக எத்தனித்த பேது ஒரு பெண்மணி ஓடோடிவந்து அமீருல் முஃமினீன் அவர்களே! எனக்கு ஒரு சகோதரர் இருந்தார்.  அவருக்கு 600 திர்ஹங்கள் இருந்தன.  அவற்றிலிருந்து எனக்குப் பங்காக ஒரு திர்ஹம்மட்டுமே அளிக்கப்பட்டது.  இதுதான்அல்லாஹ்வுடைய பங்கீட்டுச் சட்டமா? என்று கேட்டார். அதற்கு ஹள்ரத் செய்யிதுனா அலீ ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள், அல்லாஹ்வுடையசட்டம் ஒருக்காலும் பொய்க்காது; நேர்மையான தாகவும்இருக்கும்.


       உனது சகோதரருக்கு இரண்டுமகள்கள் இருக்கின்றார்களா?தாய் இருக்கின்றாரா? மனைவி இருக்கின்றாரா?பனிரெண்டு சகோதரர்கள் இருக்கின் றார்களா? என்றுஅடுக்கடுக்காகக்  கேட்டார்கள்.  அதற்கு அந்தப் பெண்? “ஆமாம்...ஆமாம் தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை! அவர்கள் அனைவரும் உயிரோடு இருக்கின்றார்கள்!” என்றார்.


      உடனே ஹள்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் அல்லாஹ் வழங்கும் பங்கீட்டுச் சட்டத்தைஇப்போது கூறுகிறேன். உனது சகோதரரின் இரண்டு மகளுக்கு 400 திர்ஹங்கள். உனது  சகோதரரின் தாய்க்கு 100 திர்ஹங்கள். உனதுசகோதரரின் மனைவிக்கு 75 திர்ஹங்கள் சகோதரர்கள் 12 பேருக்கும் 24  திர்ஹங்கள். மீதம் உள்ள 1 உனக்கு.


      இதுதான் அல்லாஹ் அருளிய பங்கீட்டுச் சட்டம் என்பதாக எமதுபாட்டனார் சைய்யிதுனா அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய தீர்ப்பே நான் கேட்ட கேள்விக்கும் பொருந்தும். (இமாம் ஷாஃபிஈரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அபூயூஸுப் ரஹ்மத்துல்லாஹு அலைஹி அவர்களிடம் கேட்டகேள்வியை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்)


      பின்னர் - அந்த மஜ்லிஸில் அமர்ந்திருந்த காழி முஹம்மது இபுனுல்ஹஸன் அவர்களிடம் கேட்டார்கள்.


      காலிது என்பவர் திருமணம் செய்தார்.  அவர் மகனை அந்தப் பெண்பிள்ளையுடைய தாய்க்குதிருமணம் முடித்து வைத்தார்.  இந்த இரண்டுபேரும் இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்.  அவர்களுக் குண்டான உறவுமுறை என்ன?


      இந்தக் கேள்வியைக் கேட்டதும் காழி முஹம்மது இபுனுல் ஹஸன்ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதில் சொல்ல முடியாமல் வெட்கத்தால் தலைகுனிந்தார்கள்.  அங்கிருந்த கலீஃபாஹாரூனுர் ரUத் அவர்கள் இந்தக் கேள்விக்கும் தயவு செய்து தாங்களே பதிலளித்து விடுங்கள்என்றார்.அதற்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அம்மாவுடையமகன் மகளுடைய மகனுக்கு மாமாவாகிறார். மகளுடைய மகள் அம்மாவுடைய மகனுக்கு சித்தப்பா வாகிறார்.


      இவ்வாறு இமாம் ஷாஃபி, ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சிக்கலானநுணுக்கமான வினாக்களைத் தொடுத்து அவர்களே அவற்றிற்கான விடைகளையும்பகர்ந்தார்கள்.  எனவே இமாம் அவர்களுக்குநீங்கள் இருவரும் (அபூ யூஸுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, முகம்மதுஇபுனுல் ஹஸன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி) சமமாக மாட்டீர்கள்.  எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவின் அருளால் இமாம்ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குநெருக்கமானவர் களாகவும், குர்ஆன், ஹதீதுகளின்நுட்பமான அறிவைப் பெற்றவர் களாகவும் இருப்பதால் நீங்கள் இருவரும் இமாம் ஷாஃபிஈரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம்  எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித தர்க்கமும் செய்யக் கூடாது... என்பதாக கலீபா ஹாரூனுர்ரஷீத் கூறினார். 


      இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காழி முஹம்மது இபுனுல் ஹஸன்ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் மிகுந்தமரியாதையுடனும் பேரன்புடனும் நடந்து கொண்டார்கள். எந்தத் தொந்தரவும் அவர்களுக்குக்கொடுக்கவில்லை. 


    வினோதமான வினாக்களுக்குவியப்பான விடைகளை வழங்கிய இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு பட்டுத்துணியால் ஆன பரிவட்டங்கள் 2000 தங்கக் காசுகளை கலீபா ஹாரூனுர் ரUத் வழங்கினார்.  அரண்மனையை விட்டு வெளியே வந்த இமாம் ஷாஃபிஈரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தங்களுக்கு  வழங்கப்பட்ட பரிவட்டத்தையும் 2000 தங்கக்காசுகளையும் ஏழை, எளியோருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டுஆனந்தமாக இல்லம் திரும்பினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.  (இன்னும் இமாம்ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹு அலைஹி அவர்களை சந்திப்போம் சிந்திப்போம்.)