• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  ஸலவாத்தின் மகிமை கேளீர்!


ஸலவாத்தின் மகிமை கேளீர்!

 

- தொகுப்பு : ஆஷிகுல் கலீல் ய.ளீலிது திருச்சி


 

    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருநாமத்துடன் ஸலவாத்தை எழுதவேண்டும்.


      நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமத்தை எழுதநேரிட்டால் அதனோடு ஸலவாத்தையும் வாயிற் சொல்லிக் கொண்டு எழுத்தினாலும் எழுதவேண்டும். அதாவது : ஸலவாத்தை ஏககாலத்தில் கையினால் எழுத வேண்டும்.  வாயினாற் சொல்லவும் வேண்டும்.  ஹதீதுக் கலை நிபுணர்கள் ஹதீதுகளைத் தமதுஆசிரியர்களிடம் கேட்டபடியே பதிவு செய்வார்கள். தமது ஆசிரியர் வாசகத்தைக் கூறுவதில் தவறு செய்துவிட்டால் அந்தத் தவறைத்திருத்திவிடாமல் அப்படியே எழுதுவார்கள். வாசகத்தில் விளக்கத் திற்காக ஏதாவதொரு வார்த்தை சேர்க்கவேண்டும் என்றுஅவர்கள் மனதிற்பட்டால் அதை மூலத்துடன் சேர்த்து விடாது தனியாக எழுதுவார்கள்.  அவ்வாறிருந்தும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருநாமம் வரும்போது ஸலவாத்தையும் சேர்த்து எழுதுவது அவர்கள்வழக்கம.  ஆசிரியருடைய பிரதியில் அதுஇல்லாவிட்டாலுஞ் சரியே! இவ்வாறு இமாம் நவவீ (ரஹ்) ­ரஹு முஸ்லிமிலும் தக்ரீபிலும்அல்லாமா சுயூத்தி (ரஹ்) ­ரஹு தக்ரீபிலும்கூறியிருக்கின்றனர்.  இதுபோலவே இந்தக்கருத்தில் பல ஹதீதுகளும் காணப்படுகின்றன. உலமாக்கள் அனைவரும் இந்த வி­யத்தில் ஒற்றுமையான கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர்.

எந் (நூ)லும் நாளும் நிலைத்திருக்கும்!


      நீ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திரு நாமத்தைஉச்சரிக்கும் போது வாயினால் ஸலவாத்துச் சொல்வது போல அன்னாரின் திருநாமத்தோடுஎழுதும்போது உனது கையால் ஸலவாத்தையும் எழுதி வருவாயாக!  அதில் உனக்குப் பெரிய நன்மையுண்டு.  ஹதீதுகளைப் பதிவு செய்பவர்கள் அடையும்சிறப்பிற்கு இதுவே காரணம் என்று அல்லாமா ஸகாவீ (ரஹ்) கூறியிருக்கின்றார்.


      நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருநாமத்தைப்பலதடவைகள் ஒரு கடுதாசியில் எழுத நேர்ந்தாலும் ஒவ்வொரு தடவையிலும் அதனோடு ஸலவாத்தைஎழுதுவது முஸ்தஹப்பு என உலமாக்கள் கூறியிருக்கினறனர்.


      ஒரு நூலில் எவராவது என் திருநாமத்தை எழுதினால் அந்த நூலில் எனதுபெயர் இருக்கும் வரை அவர்மீது மலக்குகள் ஸலவாத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அதாவது அல்லாஹுதஆலாயிடத்தில் அவருக்குப் பாப மன்னிப்புத் தேடுகிறார்கள் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்திருக்கிறார்கள்.


      “எவராவது ஓர் அறிவிற்குரிய வி­யத்தை ஒரு நூலில் எழுதி அதனோடுஸலவாத்தையும் எழுதினால் அந்த நூல் வாசிக்கப்படும் வரை அதன் பலன் அவருக்குக்கிடைத்துக் கொண்டிருக்கும்” என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகஸய்யிதுனா அபூபக்ர் சிததீக் (ரலி) அறிவித்துள்ளார்கள்.


            நியாயத் தீர்ப்பு நாளன்று ஹதீதுக் கலையாளர்கள் அல்லாஹுதஆலாவின் சந்நிதியில் ஆஜராவார்கள். அவர்கள் ஹதீதுகள் எழுதி வந்த மைக்கூடு அவர்கள் கைகளிலிருக்கும்.  அப்பொழுது அவர்கள் யார்? அவர்களுக்குஎன்ன தேவை? என விசாரிக்கும்படி அல்லாஹுதஆலா ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமிற்கு உத்தரவிடுவான்.  அப்பொழுதுஅவர்கள்; ‘நாங்கள் ஹதீதுகளைப் படிக்கவும் எழுதவும் செய்துவந்தவர்கள்’ என்பார்கள்.  அப்பொழுது இறைவன்,‘நீங்கள் எனது நபியவர்கள் மீது அதிகமாக ஸலவாத்துச் சொன்னவர்கள்.  ஆதலால் நீங்கள் சொக்கப்பதி போய்ச் சேருங்கள்’என உத்தரவிடுவான் என்ற ஹதீதுக் கருத்தை அல்லாமா ஸகாவீ (ரஹ்) அறிவித்துள்ளார்.


      ஸலவாத்தை அதிகமாக எழுதுவதால் பல நன்மைகள்  இருக்கின்றன. ஆதலால் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமத்தை எழுதுந்தோறும் ஸலவாத்தையும்எழுதச் சடையக் கூடாதென அல்லாமா நவவீ (ரஹ்), சுயூத்தி (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்.  அதில் அசட்டை செய்பவர் நன்மைகளை இழந்துவிடுவார் என்றும் கூறியுள்ளனர்.


      “ஹதீதுக் கலை கற்கும் மாணவர்கள் படிப்பின் வேகத்தில் ஸலவாத்துச்சொல்வதையும் எழுதுவதையும் விட்டு விடக் கூடாது. நாம் அந்த வி­யத்திற் பல நல்ல சொப்பனங்கள் கண்டிருக்கிறோம்” என்று ‘இத்திஹாபின்’ ஆசிரியர்கூறிவிட்டு அவர்கள் கண்ட சொப்பனங்களில் சிலவற்றைக் கூறியிருக்கிறார்கள்.


      சுப்யான் இப்னு உயைனா (ரஹ்) தமது இறந்து விட்ட நண்பரொருவரைக்கனவிற் கண்டு உமது நிலைமை யயன்ன? என விசாரித்தபோது அவர், ‘அல்லாஹு தஆலாஎன்னை மன்னித் தருளினான்’ எனப் பதிலளித்தார். ‘நீர் செய்த எந்த நற்செயலுக்காக உமக்கு மன்னிப்புக் கிடைத்தது?’ என சுப்யான் (ரஹ்) மீண்டும் வினவ, அவர் “நான்ஹதீதுகளை எழுதும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமத்தோடுஸலவாத்தையும் எழுதி வந்தேன்., எனது மன்னிப்பிற்கு அதுவேகாரணம் எனக் கூறினார்.


      அபுல் ஹஸன் மைமூனி (ரஹ்) அவர்கள் தமது ஆசிரியர் அபூஅலி (ரஹ்)அவர்களைக் கனவிற் கண்ட பொழுது. அவர்களுடைய கைவிரல்களில் தங்கம் அல்லதுகுங்குமநிறத்தில் ஏதோ  எழுதப்பட்டிருந்தது.  அது என்ன என அவரிடம் அவர் வினவ, ‘நான்ஹதீதுகளுக்கு மேலே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்று எழுதி வந்தேன்.  அதன் பலனே இது எனக் கூறினார்.


      ஹஸன் இப்னு முஹம்மது (ரஹ்) என்பவர் இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களைக்கனவிற் கண்டபோது அவரை நோக்கி இமாம் அவர்கள் ‘நூற்களிலே நமது  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்திருநாமத்தோடு ஸலவாத்தை எழுதியது எங்கள் முன்னே என்ன பிரகாசமாயிருந்துகொண்டிருக்கிறது’ என்பதை நீர் பார்த்திருக்க வேண்டுமே’ எனக் கூறினார்கள்.


அதோ வருகிறார் சொர்க்கவாசி!


      அபுல் காசிம் கப்பாப் (ரஹ்) என்பவர் இப்னு முஜாஹிது (ரஹ்)இடத்திலிருக்கும் போது ஷிப்லி (ரஹ்) அங்கு வந்தார்.  அவரைக்கண்டதும் இப்னு முஜாஹிது (ரஹ்) எழுந்து நின்று மரியாதை செய்தர்.  அவரைப்பற்றி அவர்களுடைய மாணவர்களிடையே பேச்சுகிளம்பிற்று.  அவர்கள் தம் ஆசிரியரான இப்னுமுஜாஹிதிடத்தில் ‘நமது பிரதம மந்திரி வந்தபொழுது நீங்கள் எழவில்லை.  ´ப்லீ (ரஹ்) வந்தவுடன் எழுந்துநின்று வரவேற்றீர்களே! அதற்குக் காரண மென்ன?’ என வினவலாயினர்.  அதற்கு அவர்கள், நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவருக்கு நான்எவ்வாறு மரியாதை செய்யாதிருப்பேன் என்று கூறிவிட்டு, நேற்றிரவுநான் நாயகம்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைக் கனவிற் கண்டேன்.  ‘நாளைசெர்க்கவாசி யயாருவர் உம்மிடம் வருவார் அவரை நீர் மரியாதையுடன் வரவேற்க வேண்டும்’என்று அன்னார் கூறினர் என்றார்.  இந்தச்சம்பவத்திற்கு இரண்டு தினங்களுக்குப் பின் மீண்டும் யருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் கனவில் தோன்றி;


      ‘அபூபக்கர் இப்னு முஜாஹிதே! நீர் ஒரு சொர்க்கவாசிக்கு மரியாதைசெய்தது போல அல்லாஹுதஆலா உமக்கு மரியாதை செய்வானாக’ என்றனர்.  எங்கள் நாயகமே! ´ப்லிக்கு இப்படிப் பட்டமரியாதைக்குக் காரணமென்ன?’ என இப்னு முஜாஹிது வினவினார். அதற்கு அன்னார், ‘அவர் லகத் ஜாஅகும் ரசூலுன் மின்அன்புஸிகும் அஜீஸுன் அலைஹி மா அனித்தும் ஹரீஸுன் அலைகும் பில் முஃமினீன ரஊபுர்ரஹீம் என்னும் குர்ஆன் வாக்கியத்தை எண்பது வருட காலமாக ஓதி வருகிறார்’ என்றனர்.


கண்முன்னே தோன்றினார்கள்கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!


      இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் இஹ்யாவில் கூறியுள்ள வரலாறொன்றுவருமாறு :  அப்துல் வாஹிது இப்னு சைது பசரீ(ரஹ்) என்பாருடன் ஒருவர் ஹஜ்ஜுச் செய்ய திரு மக்கா சென்றார்.  அவர் எந்த நேரமும் ஓயாது ஸலவாத்தையே ஓதிக்கொண்டிருந்தார்.  அவர் அதனையே ஓதிக்கொண்டிருக்கக் காரணமென்ன,என அப்துல் வாஹிது (ரஹ்) விசாரித்தபோது அவர், ‘நான் முதல்தடவையாக ஹஜ்ஜுக்குப் போகும் போது எனது தந்தையும் கூட வந்தார்.  நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டுத் திரும்பிவரும்போது ஓரிடத்தில் நான் நித்திரையி லிருக்கும் போது கனவில் ஒருவர் தோன்றிஎழுந்திரு! உனது தந்தை இறந்து விட்டார். அவர் முகம் கறுத்து விட்டது என்றார். நான் திடுக்கிட்டு எழுந்து என் தந்தை முகத்திலிருந்த துணியை அகற்றிப்பார்த்தேன்.  உண்மையிலேயே அவர் இறந்து விட்டார்.  அவர் முகம் கறுத்திருந்தது.  எனக்குத் துக்கம் தாங்க முடியவில்லை.  அதே கவலையிலிருக்கும் போது மீண்டும் கண் மூடித்தூங்கி விட்டேன்.  அப்பொழுது என் கனவில்இரும்புத் தடிகளுடன் நான்கு ஹபஷிகள் என் தந்தையின் தலைமாட்டில்நிற்கிறார்கள்.  அதற்குள்ளாக இரு பச்சை நிறஆடை அணிந்து அழகிய முகார விந்தமுடைய ஒருவர் வந்து அந்த நால்வரையும் அவ்விடத்தைவிட்டு அகற்றி விட்டுத் தமது திருக்கரத்தால் என் தந்தையின் முகத்தைத் தடவி விட்டுஎன்னை நோக்கி எழுந்திரு! உனது தந்தையின் முகத்தை அல்லாஹு தஆலா வெண்மையாக்கிவிட்டான் என்றார்.  எனது அன்னையும்தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்.  தாங்கள்யார்? என வினவ,என் பெயர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்றனர்.  அன்று முதல் நான் எப்பொழுதும் அன்னார் மீதுஸலவாத்து ஓதுவதை விடுவதில்லை’ என்றார்.                                                           


(தொடரும்)