• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  நல்ல பெண்மணி


மகளிர் பக்கம்

நல்ல பெண்மணி


( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

 

    ஓர் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கிராமம் ஒன்றில் பெரும் மழைபெய்ததால் கண்மாய்கள் உடைத்துக் கொண்டு வெள்ளம் வந்து, ஊரை அழித்து விடும் ஆபத்து ஏற்பட்டது.  அப்பொழுது ஊரிலிருந்த முஸ்லிம் பெண்கள் அனைவரும்ஒன்று திரண்டு, கண்மாய் உடைப்பை அடைத்து, வெள்ளத்தை மறித்து ஊரைக் காத்தனர். ஆண்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலும், வெளி ஊர்களிலும்இருந்ததால் இந்தக் கடமையைப் பெண்களே செய்ய வேண்டியதாயிற்று.


      இவ்விதச் சந்தர்ப்பங்களில்உடை ஒழுங்கைச் சற்று கவனிக்க முடியாமலும் போகலாம்.  உஹதுப் போரின் போது ஆயிஷா (ரலி) அவர்களும், உம்மு சுலைம் (ரலி) அவர்களும் தம் முதுகுகளில்தண்ணீர் நிரம்பிய தோல் பைகளைச் சுமந்து சென்று வீரர்களுக்குத் தண்ணீர் கொடுத்தனர். “அவர்கள் தம் பைஜாமாவின் கீழ்ப் பகுதியைச் சுருட்டியவாறு ஓடோடித் தண்ணீர் கொண்டுவந்ததை நான் பார்த்தேன்” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினர்.


      இவ்விதம் ஆபத்துவேளைகளில் முஸ்லிம் பெண்கள், பெண்களைப்போல் அல்ல, பெண் புலிகளைப் போலத் தம் வீடுகளை விட்டு வெளியே பாய்ந்து கடமை புரிந்த சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றின் நிறைந்து கிடக்கின்றன.


      அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கைபர் போருக்குப் போகும்போது, மதீனா நகர்ப் பெண்மணிகள் சிலர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர்.  அவர்களைப் பார்த்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், “நீங்கள் எல்லாம் ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.  அதற்கு அவர்கள்,தங்களிடம் மருந்து இருப்பதாகவும், அதைக் கொண்டுகாயமுற்றோருக்குக் கட்டுப் போட்டுக் கவனிக்க முடியும் என்றும், அம்புகளை அகற்றுவதில் உதவ முடியும் எனறும், வீரர்களின்உணவுக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்றும் கூறினர்.


      உம்மு அதிய்யா என்னும்பெண்மணி ஏழு போர்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் உணவு தயாரித்துக்கொடுத்தார்.  உஹதுப் போரின்போது ரபீஆ பின்த்முஅவ்வித் என்னும் பெண்மணியும், மற்றும் சில பெண்களும் போர்க்களத்திலிருந்துஇறந்தவர்களத் தூக்கி வந்தனர்.  காயமுற்றவர்களைமதீனாவுக்குத் தூக்கிச் சென்றனர். போர்க்களத்தில் நின்று போரிட்ட வீரர்களுக்கும், காயமுற்றுக் கிடந்த வீரர்களுக்கும் தண்ணீர் வழங்கினர்.


      உமர் (ரலி) அவர்கள்கலீபாவாக இருந்த காலத்தில் நடந்த அக்மாத், அர்மாத் போர்களின் போது, இறந்தவர்களின் உடல்களை அடக்கபெண்கள் குழி தோண்டினர்.  காதிசியாப் போரின்போது பெண்களின் குழு ஒன்று காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவி அளித்தது.


      முஸ்லிம்கள் ரோமர்களுடன்நடத்திய போரில், உம்மு சுலைம் அவர்களும்கலந்து கொண்டனர்.  முஸ்லிம்கள் ரோமர்களின் பெரும்படையைக் கண்டு மனம் தளர்ந்த போது, உம்மு சுலைம் அவர்கள் ஆவேசச்சொற்பொழிவு ஒன்றைச் செய்தனர்.  அதைக் கேட்டுமுஸ்லிம் வீரர்களின் நாடி நரம்புகளில் முறுக்கேறியது.  அந்தப் போரின் வெற்றியில் உம்மு சுலைம் அவர்களுக்கும்பங்கு உண்டு.


      யர்மூக் போரின்போது முஸ்லிம்கள் தங்களை விட ஐந்து மடங்கு அதிகமான பகைவர்களுடன் போரிட்டனர்.  அப்பொழுது முஸ்லிம் பெண்கள் தாம், “மனம் தளர வேண்டாம்!” என்று கூறி முஸ்லிம் வீரர்களைகளத்திலிருந்து ஓடாமல் தடுத்தவர்கள் ஆவர். அத்துடன் அவர்கள் போரிலும் பங்கு கொண்டனர்.  அவர்களில் ஒருவர் முஆவியா (ரலி) அவர்களின் சகோதரிஜுவைரியா ஆவார். அவர் பெண்களின் படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு, போரின் வெற்றிக்குக் காரணமாயிருந்தார். கந்தக் போரின் போது சபிய்யா (ரலி) அவர்கள்கூடாரக் கம்பைக் கொண்டே பெண்களும்,  குழந்தைகளும் இந்தப் பகுதிக்கு வந்த பகை வீரனை அடித்துக் கொன்று ஆபத்தைத் தவிர்த்தனர்.


      உஹதுப் போரின் போதுஆவேசத்துடன் போரிட்ட ஒருவர், உம்மு அம்மாரா(ரலி) அவர்கள் ஆவர்.  அவர்களை, இப்னு கைமா தாக்கி அவர்களின் தோள்பட்டையில் ஆழ்ந்த காயத்தை உண்டு பண்ணிவிட்டான்.  ஆயினும் அவர்கள் மனம் தளரவில்லை.  அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக்குறிவைத்துச் செய்யப்பட்ட தாக்குதலிலிருந்து அவர்களைப் பாதுகாத்து நின்றவர்களில் உம்முஅம்மாரா (ரலி) அவர்களும் ஒருவர்.  அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறினர். “உம்மு அம்மாரா என் வலப்புறமும், இடப்புறமும் எதிரிகளுடன்வீரப்போர் புரிந்ததை நான் பார்த்தேன்” என்று. இப்போரில் காயம் அடைந்த தம் மகனுக்குக் கட்டுப் போட்டு, “போ மகனே!  போய் சுவர்க்கத்து வாசம்உனக்கு வீசும்மட்டும் போரிடு!” என்று கூறியவர்கள் அவர்கள்.  கைபர் போரிலும் மக்கா வெற்றியிலும்உம்மு அம்மாரா (ரலி) அவர்கள் பங்கெடுத்திருக்கின்றனர்.  ‘நானும் நபி’ என்று கூறிக் கொண்டு கிளம்பிய முஸைலமாவுடன்நடந்த போரிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.  அந்தப்போரில் அவர்களின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் பன்னிரண்டாகும். 


(இன்னும் வருவாள்)