தோன்றினரன்றே!
- ஆலிம் புலவர்
நிச்சயமாக உங்களிலிருந்து தூதர் ஒருவர் உங்களிடத்தே வந்துள்ளார்(கள்) - அல்குர்ஆன்
மெளலிது மஜ்லிசுகளில், மேல் வந்த இந்த ஆயத்தை ஓதித் தொடங்குவதை நாம்அடிக்கடி கேட்டிருக்கிறோம்.
இந்தத் திரு வசனத்தில்அல்லாஹு தஆலா, அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அருள் வருகையை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றான். இதற்குப்பின் வரும் வசனங்களில் பெருமானாரின் பெருமிதங்களைஅல்லாஹ் விபரிக்கின்றான்.
இங்கு நாம் காணப்போவது ஜாஅ என்ற வாக்கியத்தின் நுணுக்கத்தைமட்டுமே!
அறபு மொழியில் ஜாஅ என்றால்வந்தார் என்று பொருள். ஜாஅகும் என்றால் உங்களிடத்தில் வந்தார் என்று பொருள்.
இங்கு, வந்தார்கள் என்ற சொல்லை உபயோகித்திருப்பதன்மூலம் அல்லாஹ் பெருமானாரின் பூர்வீகத்தை மறை பொருளாக சுட்டிக் காட்டுகிறான்.
அதாவது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்வந்தார்கள் எனும்போது, அவர்கள் இதற்கு முன்னர் எங்கோ இருந்திருக்கிறார்கள்எனும் பொருள் அங்கு தொக்கி நிற்கிறது.
எங்கிருந்து வந்தார்கள்? அதற்கும் அல்லாஹ் குர்ஆனில் விடை தருகின்றான்!
நபியே அகிலத்திற்கோர்அருட்கொடையாகவே நாம் உங்களை அனுப்பினோம்.
அனுப்பியது யார்? அல்லாஹ்!
எங்கிருந்து வந்தார்கள்? அல்லாஹ் விடமிருந்து!
ஆம்! இந்த பூமிக்குவருமுன்னரே, ஆதம் அலைஹிஸ்ஸலாம் மண்ணுக்கும் தண்ணீருக்கும்இடையே இருந்த காலத்திலேயே, இறைவனின் நூராக இருந்து, இறுதி நபியாக இறைவன் அனுப்பிட, இந்த பூமிக்கு வருகை புரிந்தார்கள். இந்தக் கருத்தை இந்தத் திருவசனம் நிçனைவு படுத்துகிறது.
இதே கருத்தையயாட்டி உமறுப்புலவர் சீறாப்புராணத்தில் “தோன்றினரன்றேதோன்றினரன்றே!” எனப் பெருமானாரின் அவதாரப் பாடலை நிறைவு செய்வார்.
வானில் சூரியன் தோன்றுகிறது என்கிறோம். தோன்றுவது என்றால் மறைந்திருந்த அது இப்போதுநமக்கு எதிரே காட்சியளிக்கிறது. இங்குநமக்குத் தெரிவதற்குமுன் கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ வேறுஇடத்தில் இருந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும்.
இதேபோலத்தான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்ஹக்கின் நூராக பலகாலங்களில் - பல இடங்களில் இருந்து, தற்போது இப்பூவுலகில் நம்கண்ணுக்குத் தெரியத் தோன்றியுள்ளார்கள். உமறுப் புலவர் இதனை உணர்ந்தே “தோன்றினர்” என நயமாகப் பாடியுள்ளார்.
நாம் பெருமானாரின் பூர்வீகத்தை அறிந்து ஆன்மீக உயர்வு பெறுவோம்.