• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Jan 2012  »  அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு

 

அத்தியாயம் : 85        ​    - இப்னு மீரான் ஹக்கிய்யுல் காதிரிய் 


 

உஹதுப் போரின் உக்கிரம் தகித்துக் கொண்டிருந்தது.  மயக்க முற்றிருந்த ஸஹாபி தல்ஹா (ரலி) அவர்கள் இப்போதுமயக்கம் தெளிந்து மெல்ல எழுந்தார்கள்.  இருப்பினும்அவரால் மேற்கொண்டு போரிட முடியாத நிலையிலிருந்ததால், அவருக்குப் பதிலாக ஸுஹ்ராவின் ஸஅதும் ஹாரித் இப்னு ஸிம்மாவும் களத்தில் இறங்கினார்கள்.  துணையாளர்கள் பெருகவே அவர்கள் குறை´யர் மீது தீவிரதக்குதல்களை மேற்கொண்டனர்.  அன்ஸாரிகள்ஐவரும் வீழ்ந்திருந்த இடத்திலிருந்து எதிரிகள் பின் வாங்கிவிட்டனர்.  வீரமரணம் அடைந்து விட்ட அன்ஸாரிகளின் உடல்களைப்பார்த்து அண்ணலார் துஆச் செய்தார்கள். ஐவரில் ஓர் அன்ஸாரி மட்டும்குற்றுயிரும் குறையுயிருமாகக் கிடந்தார்கள். அவர்கள் தம் உடல் வேதனையைக் கூடப் பொருட்படுத்தாமல் தம் உடலை நிலத்தோடுதேய்த்தவராக நபிகளாரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தர்கள்.  அதைக் கண்டுவிட்ட அண்ணலார் உடனே அவரை மெல்லத்தூக்கி வரும்படி ஆணையிட்டார்கள்.  அதன்படிஇருவர் சென்று அந்த அன்சாரித் தோழரை அண்ணலாரின் சமீபம் கொண்டு வந்துபோட்டார்கள்.  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த ஸஹாபி விரும்புவதைப் புரிந்து கொண்ட நபிகள் கோமான் தங்களின்புனித பாத கமலத்தை அவருக்கு முன் வைத்தனர். உடனே அந்த ஸஹாபி ஆவலுடன் அண்ணலாரின் திருவடியில் தமது கன்னத்தைச்சாய்த்துக் கொண்டார்.  பாவம் அவரதுஉடலிலிருந்து ரத்தம் ஒருபுறம் போய்க் கொண்டே யிருந்தது.  மறுபுறம் அவரது கண்களில் வடியும் நீர்அண்ணலாரின் பாதத்தைக் கழுவிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியை நாம் பார்த்திருந்தால் நம் உள்ளமே அழுது மடிந்துபோயிருக்கும்.  அந்த ஸஹாபியின் உயிர் அவர்உடலை விட்டுப் பிரியும் வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களதுகாலை அசைக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள். அண்ணலாரின் கால் எப்படி நோவுற்றதோ? அருமை நபிகளாரின் கருணைக்கும் பொறுமைக்கும்ஈடே கிடையாது.


      “வாள்களின் நிழலின் கீழ் சுவர்க்கம் இருக்கின்றதெனத் தெரிந்துகொள்வீர்களாக!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருக்கமாகக்கூறினார்கள், பிற்காலங்களில் ஒரு சமயம் பதுருப் போரின் போது இறைபுறத்திலிருந்து அருளப்பட்டஅற்புதமான ஆசிர்வாதத்தை நினைவுகூரத் தவறவில்லை.  பத்ருப் போரின் போதுஏற்பட்ட இழப்புகளை இப்போரில் குறை´கள் ஈடு செய்து விட்டதாகத்தான்கூற வேண்டும்.  அந்த அளவுக்கு முஸ்லிம்வீரர்கள் வீரமரணம் அடைந்திருந்தார்கள்.

      பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி வில்வீரர்கள் சிறு குழுவினராக நின்று காத்துக் கொண்டிருந்தார்கள்.  எதிரிகளின் போக்கைப் பார்த்தால்வீரர்களிடமிருந்த அம்புகள் எல்லாம் தீர்ந்துவிடும் போலிருந்தது.   அவர்கள் வாளைஉருவிப் போரிட வேண்டுமென்றால் ஒரு ஸஹாபி, நான்கு நான்காக பிரிந்து எதிர் கொள்ளவேண்டிய சூழ்நிலை.  இப்படிப்பட்ட நேரத்தில்எங்கிருந்தோ வந்தான் அந்தப் பொல்லாத குதிரை வீரன்.   அவன் தான் இப்னு காமியா என்ற கொடியோன்.  இப்பாவி ஏற்கனவே பல ஸஹாபாக்களைக்கொன்றவன்.  “எங்கே அந்த முஹம்மத்? ஒன்று  அவர் சாக வேண்டும்இல்லை நான் சாக வேண்டும்என்றவனாக வந்தான்.  அவன் பார்வை அங்கிருந்தநம் உயிரினும் மேலான அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதுபட்டுவிட்டது.   அவ்வளவுதான் இன்ன வேகம்தான் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவன் வாளை அண்ணலாரை நோக்கி வீசினான்.  உடனே அருகில் நின்ற உயிர்த் தோழர் தல்ஹா (ரலி)அதைத் தம் கையால் தடுக்கப் பார்த்தார்கள். அவரின் விரல்கள் வெட்டுப்பட்டு வீழ்ந்தது தான் மிச்சம்.  இருப்பினும் வாள் வீச்சின் வேகம் சிறிதுதடைபட்டது என்றே சொல்லலாம்.  அந்தக்கொடியோனின் வாள், அண்ணலாரின் தலைக் கவசத்தில் பட்டு,   அருமை அண்ணலாரின் திருவதனக்கன்னத்தில் உராய்ந்து, தலைக் கவசத்திலிருந்து இரண்டுவளையங்களை அப்புனிதமிக்க கன்னத்தில் புகுத்திவிட்டு, அண்ணலாரின்தோள்களை மறைத்திருந்த இரட்டைக் கவசத்தின் மீது விழுந்தது. சற்றும் எதிர்பாராமல்இப்படி திடுமென நேர்ந்த தாக்குதலினால் அண்ணல் எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அப்படியே கீழே விழுந்து       விட்டார்கள். சுற்றி நின்றவர்களுக்கு     சற்று நேரத்திற்கு ஒன்றும் ஓட வில்லை.  அப்படியே பதறிப்போய் நின்றுவிட்டார்கள்.  அதற்குள் அந்தக் கொடியவன் சடக்கெனத் திரும்பிப்பாய்ந்து சென்றுவிட்டான்.  சென்றவன் சும்மாசெல்லவில்லை, “முஹம்மதைக்கொன்று விட்டேன்”. முஹம்மத் கொல்லப்பட்டார் (நஊதுபில்லாஹ்) என்று உரக்கக் கத்திக்கொண்டே சென்றான்.  குறை´க் காஃபிர்கள் முஹம்மத்கொல்லப்பட்டுவிட்டார் என்று கூக்குரலிட்டனர். உஸ்ஸா தெய்வத்திற்கும் ஹுபல் தெய்வத்திற்கும் நன்றிதெரிவித்துக்கொண்டனர்.  போர்க் களத்தில்ஒரே குழப்பம். போரைக் கண்டு பயந்து ஓடிச் சென்ற முஸ்லிம்கள் ஐயோ கைசேதமே! நாம்அண்ணலாரைக் காப்பாற்றத்  தவறி விட்டோமேஎன்று அழத்தொடங்கி விட்டனர்.  போரில்முன்னேறிக் கொண்டிருந்த முஸ்லிம் வீரர்கள் மனமும் பலமும் குன்றியவர்களாக மெல்லப்பின் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.


      அண்ணலாரை அப்படியே சூழ்ந்து காத்துக் கொண்டே போரிட்டவர்களும்ஒருவர்பின் ஒருவராக கொல்லப்பட்டனர். அப்படி அண்ணலாரின் முன்நின்று வந்தவெட்டுகளையயல்லாம் தாங்கி நின்ற மக்ஸும் கோத்திரத்தின் ­ம்மாஸ் என்பவரைப்பார்த்து அண்ணலார்,“உலாவும் கேடயம்” என்று வர்ணித்தார்கள்.                  


(தொடரும்)