• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  கொள்ளை போகும்  முஸ்லிம்களின் பணம்


கொள்ளை போகும்  முஸ்லிம்களின் பணம்

 

    மளான் -  முஸ்லிம்கள் நன்மைகளை அறுவடை செய்யும் மாதமாக விளங்குகிறது.  ஆனால் முஸ்லிம் வேடந்தாங்கிய சிலருக்கோ நன்கொடைகளை அறுவடை செய்யும் சீசனாக மாறிவிடுகின்றது!


      வஹ்ஹாபி  இயக்கங்கள்,  ரமளான் பிறந்து விட்டாலே தங்கள் வலைகளைத்  தூசு தட்டி அப்பாவி முஸ்லிம்களின் பணத்தைச் சுருட்ட ஆயத்தமாகி விடுவார்கள்.  இணையதளம் - தொலைக்காட்சி துண்டுப் பிரசுரம் - சந்தா புத்தகம் என பல்வேறு தளங்கள் மூலமாக கையேந்தத் தொடங்கி விடுவார்கள். ஆலிம்களை “பணம்பறிக்கும் புரோகிதர்கள்” என வசைபாடும் இவர்கள்இஸ்லாத்தின் மொத்த ஏஜெண்ட் நாங்களே, எங்களுக்கே வாரி வழங்குங்கள்! என சமுதாயத்தின் செல்வத்தை அள்ள கொள்ளை கொள்ள  தூண்டில் போடுவார்கள்.


      ஏழை முஸ்லிம்களுக்கு சென்று சேர வேண்டிய ஜக்காத் பணத்தை,  “இரத்த தான முகாம் நடத்துகிறோம்- பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம் - இறந்தவரை அடக்குவதற்கு வேன் வாங்குகிறோம்- உரிமை மீட்கப் போராடுகிறோம்” என்ற பெயர்களில் போக்குக்காட்டி அநியாயமாக ஏழைகளின் உரிமையில் பங்கு கேட்பார்கள். அவர்கள் கேட்டு விட்டுப் போகட்டும். நாம் இவர்களுக்குக் கொடுக்கலாமாகொடுப்பது முறைதானா? ஷ­ரீஅத் அனுமதிக்கிறதா? என சமூகம் தான் சிந்திக்க வேண்டும்.!


      வஹ்ஹாபி இயக்கங்களால் தமிழக முஸ்லிம்களிடம் என்ன மாற்றம்- முன்னேற்றம் ஏற்பட்டிருகிறது? ஊருக்கு ஊர், மஹல்லாவுக்கு மஹல்லா பிளவு பட்டுப் போனதைத்தவிர! முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாமியச் சின்னமான தொப்பியை தூக்கி எறிந்ததைவிட! முஸ்லிம் பெண்கள் தங்கள் முகம் தெரிய தெருவில் நடக்கத் துணிந்ததைவிட! போஸ்டர், பேனர் - போராட்டம் - ஊர்வலம்-  மாநாடு - இவைகளைத் தவிர வேறு என்ன புரட்சி ஏற்பட்டிருக்கிறது!?


      இந்த, மார்க்கம் கடந்த செயல்களுக்கு நாம்ஆதரவளிக்கலாமா? ஊக்கம் கொடுக்கலாமா? கஷ்டப்பட்டு நாம் சம்பாதிக்கும் பணம்,பெருமானார் மீது ஸலவாத்து ஓதத் தடைபோடும் சண்டாளர்களுக்கு, சஹாபிகளை - இமாம்களை குறைத்துப் பேசும்குறைமதியாளருக்கு, வலிமார்களை வசைபாடும் வம்பர்களுக்குஇஸ்லாத்தின் மூல வடிவைச்சிதைக்கும் துன்மார்க்கர்களுக்குப் போய்ச் சேரலாமா? சமுதாயம் சிந்திக்க வேண்டும்!