பேசிப் பழகு!
(இப்னு ஸலாம்)
என்னதான் மேக்கப் போட்டு, நச்சென்று டிரெஸ் பண்ணி அழகுபடுத்திக் கொண்டாலும் நாம் பேசும்போது உச்சரிப்பும், பேசுவதில் உள்ள வியமும் கூர்மையின்றி இருந்தால் நம்மிடம் காணப்பட்ட மொத்த மிடுக்கும் மிஸ்ஸாகி, பார்ப்பவர்களுக்கு நாம் அசடுதான். பெரிய மீசை இருந்து பேச்சு குழந்தைபோல் இருந்தால்.. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
பேச்சு ஒரு பெர்ஸனாலிட்டி... மற்றவர்களைக் கவர மேடையில் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எப்படிப் பேசி நீங்கள் அசத்தலாம், உங்கள் பெர்ஸினாலிட்டியை டெவலப் செய்துகொள்ளலாம்? தமிழில் சிறந்த பேச்சாளர், படிப்பாளி இதுதவிர பன்முகங்கள் கொண்ட தமிழருவி மணியன் தரும் ஆலோசனைகள்...
1. ‘நெவர், நெவர், நெவர்,கிவ் அப்’ - ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சர்ச்சிலின் பேச்சை ரேடியோவில் கேட்க உலகமே காத்திருந்த நேரத்தில், அவர் பேசியது இந்த வார்த்தைகள்தான். மணிக்கணக்கில் பேசினால் கூட இப்படி ஒருஅழுத்தமான தாக்கத்தை எவராலும் ஏற்படுத்த முடியாது! அதனால்தான் சுருக்கென்று பேசுங்கள்.
2. விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காலம் கடந்தும் பேசப்படுவதற்குக் காரணம், அவரது பேச்சில் ஒரு வாக்கியத்தைக் கூட தேவையற்றதாகக் கருத முடியாது.
3. ஒன்றை விளக்குவதாக இருந்தால் கூட விரிவாகப் பேசாமல் தெளிவாகப் பேசவேண்டும். “govt for the people,by the people,of the people” என்று ஒரு கூட்டத்தில் பேசிய லிங்கன் ஜனநாயகத்துக்கு மிகச் சாதாரணமாக விளக்கம் கொடுத்தார். இதை விடவேறு எளிமையான விளக்கத்தை அரசியல், அறிவியல் பேரறிஞர்களால் கூட கொடுக்க முடியாது
.
4. ‘சொல்லைத் தேடு, சொல்லை அறி, சொல்லை சொல்லால் பின்பற்று என்கிறார் கபீர்தாசர். இது வளரும் பேச்சாளர்கள் மறக்கக் கூடாத சூத்திரம்.
5. பெருங்கூட்டத்துக்காக பேசாதீர்கள். உலகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருந்த புரட்சியாளர்களின் பேச்சுக்கள் எல்லாம் சிறு கூட்டங்களில் தான் நிகழ்த்தப்பட்டன.
6. கேட்பாளர்களின் தன்மை அறிந்து பேசுங்கள். பாமரர்களிடம் பிளட்டோ, சாக்ரடீஸ் என மேற்கோள் காட்டி பயமுறுத்தாதீர்கள்.
7. பேசும் பொழுது தன் மனதில் பட்ட உண்மையைப் பேசுங்கள். அது உங்களுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுக்கும். உண்மையைப் பேசும்பொழுது உங்களையறியாமல் நீங்கள் உயர்வீர்கள்.
இவை எல்லாமே, மேடைப் பேச்சுக்குரிய அடிப்படை லட்சணங்கள்.என்றாலும் சராசரியான வாழ்க்கைத் தருணங்களில் கூட, அழகான ஆடைஅணிகலன்கள் தர முடியாத கம்பீரமான தோற்றத்தை பேச்சு நமக்குத் தரும்!
�e����&�