தொடர்....
சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத், திருச்சி.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கோவை செய்த கிதாபுகளையும் அவற்றின் பெயர்களையும் அவற்றால் அந்தக் காலம் தொடுத்து இந்தக் காலம் வரை மனிதகுலம் அடைந்து வரும் பிரயோசனங்களையும் நற்பேறுகளையும் ஈங்கண் காண்போம்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் உஸூலுல் ஃபிக்ஹில் மிகுந்த கிதாபுகளையும் ஃபுரூ உல் ஃபிக்ஹில் மிகுந்த கிதாபுகளையும் கோவை செய்திருக்கிறார்கள். மேலும் ரிஸாலத்துல் கதீமா ரிஸாலத்துல் ஜதீதா என்னும் இரண்டு கிதாபுகள் ஃபிக்ஹிலும் உஸுலிலும் கோவை செய்திருக்கிறார்கள். அறிஞர்களுக்கு இவ்விரு நூல்களும் ஆனந்தப் பொக்கிஷங்கள் ஆகும். மேலும் இஹ்த்திலாஃபுல் அஹாதீஸ், ஜிமாஉல் இல்ம், இஜிமாஉ, இபுதாலில் இஸ்திஹ்ஸான், அஹ்காமுல் குர்ஆன் பயான் பர்ளுல்லா, ஸிஃபத்துல் அம்ரூ வன்னஹி, கிதாபு ஸனன், இஹிதிலாஃபுல் மாலிக் வஸ்ஸாபியீ இஹ்திலாபுல் இராகிய்யீன், கிதாபு ரத்து அலீ முஹமது இபுனில் ஹஸன், ஃபலா இலு குரைஸ் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கோவை செய்த கிதாபுகள் மிகப் பிரபலம் ஆனவை. ஃபுருஉல் ஃபிக்ஹில் 109 கிதாபுகள் கோவை செய்திருக்கிறார்கள். அதைத்தான் உம்மூ என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வர்ணிப்பார்கள். உஸூலுல் ஃபிக்ஹில் முதன் முதலாக கிதாபு கோவை செய்தவர்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களே என்பதாக இமாம் பைஹக்கீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அபுல் ஹஸன் ஆஸிமிய் (ரஹ்) கூறுகிறார்கள் : இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மிஸிரில் (எகிப்தில்)நான்கு வருடங்கள் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மூல வியாதி மிகக் கடுமையாகி இருந்தது. அவ்வேளையில் இமாம் அவர்கள் வாகனத்தில் ஏறினால் மூலத்தால் வெளியாகின்ற இரத்தம் கால்சட்டை மேல்சட்டை நனைந்து துவைந்து விடும். குதிரையின் கல்லனை அங்கவடி எல்லாம் நனைந்து விடும். அவ்விதம் இருப்பதுடன் தான் உம்மு என்கிற கிதாபில் இரண்டாயிரம் தாளில் சனன் என்கிற கிதாபையும் மேலும் பல கிதாபுகளையும் மூல வியாதியுடன் வேதனைகளைப் பொருட்படுத்தாமல் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் எழுதி முடித்தார்கள்.
ஹளரத் ரபீஃ (ரஹ்) கூறிகிறார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வஃபாத் (ஆவதற்கு) நான்கு நாட்களுக்கு முன் கூறினார்கள். நான் அனைத்து கிதாபுகளையும் மிகவும் பிரயாசையுடன் தான் கோவை செய்வேன். மனிதர்கள் அவற்றைப் படித்து அமல் செய்து பிரயோஜனம் அடைய வேண்டும் என மிகவும் விரும்புகிறேன். ஆனால் அந்நூல்களில் ஒரு (ஹர்ஃப்) எழுத்தைக் கூட எனது நூலில் யாரும் இடைச்செருகலாக சேர்க்கக் கூடாது என எச்சரித்துக் கொள்கிறேன்.
முஹம்மது இபுனு இஸ்ஹாக் இபுனு ராஹவைஹீ என்பவர் தமது தந்தையிடம், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இவ்வளவு கிதாபுகளையும் எவ்வாறு கோவை செய்தார்கள்? அவர்கள் வயதும் செற்பமானதாகத் தானே இருந்தது?என்று கேட்டார். அதற்கு அவர் தகப்பனார் கூறினார் :- உண்மைதான் அல்லாஹு தஆலா இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் வயதைக் குறைத்து அன்னவர்களின் அக்லை(அறிவை) விரிவாக்கினான் என்றார்கள்.
ரபீஃ (ரஹ்) கூறுகிறார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் ஒரு முறை கனவு கண்டேன். அதில் மனிதர் ஒருவர் என்னிடம் வந்து எனது கிதாபுகளை எடுத்துச் சுமந்துகொண்டு போய் ஆகாயத்திற்கு பறந்து சென்று, எனது கிதாபுகளை எல்லாம் விரித்துப் பிரித்து பரத்தி விட்டுச் சென்று விட்டார். பின்னர் நான் கண்விழித்து கனவிற்கு தஃபீர்(விளக்கம்) சொல்லக்கூடிய மனிதர் ஒருவரிடம் இதற்கான விளக்கம் கேட்டேன். அதற்கு அவர், “உங்களுடைய கிதாபுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் பட்டணங்கள் எல்லாம் பரவி விடும் . என்பதுவே இக்கனவின் விளக்கம் என்று கூறினார்.
பஸராவில் இருந்த அப்துர் ரஹ்மான் இபுனுல் மஹ்தி (ரஹ்) அவர்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களுக்குக் கடிதம் ஒன்று எழுதி வந்தார். அதில் குர்ஆன் ஷரீஃபில் உள்ள நிரூபணங்கள் (அத்தாட்சிகள்), ஹதீஸ்களுடைய வகைகள் இஜ்மாஉய ஹுஜ்ஜத்தையும் (அத்தாட்சியையும்) நாசிஹ், மன்சூஹ் உடைய விவரங்களையும் விவரித்து ஒரு கிதாபை எழுதித்தர வேண்டும் எனக் கூறியிருந்தார். அன்னாரது வேண்டுகோளை ஏற்று அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே கித்தாபுர் றிசாலா என்னும் நூலை எழுதி அவருக்கு அனுப்பி வைத்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இபுனுல் மஹ்தி (ரஹ்) அவர்களிடம் சேர்ந்ததும் அவர், அந்த கிதாபைக் கண்டு மெய் சிலிர்த்து அந்த கிதாபில் இருந்த விஷயங்களை பல முறை நன்கு படித்து விளங்கி ஹதீஸ்களுடைய இல்மில் பொறுப்பான இமாம்களில் ஒருவராக உயர்ந்த பதவியை அடைந்தார். இது குறித்து அப்துர் ரஹ்மான் இபுனுல் மஹ்தி அவர்கள், ஒரு தொழுகையிலாவது நான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்காக துஆ செய்யாமல் இருந்ததில்லை என்றார்கள்.
அலீ இபுனுல் அப்துல்லாஹில் மதனீ (ரஹ்) கூறுகிறார்.என்னை புனித மகாமே இப்றாஹீமுக்கும் ருக்குனுல் எமானிக்கு இடையில் நிறுத்தி சத்தியமாகச் சொல் எனக் கேட்கப்பட்டால் நான் கூறுவேன்; எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது ஆணை!அப்துர் ரஹ்மான் இபுனுல் மஹ்தீ (ரஹ்) அவர்களைப் போல் ஹதீஸுடைய இல்மை (அறிவை)ப் பெற்றுக் கொண்ட ஒருவரை இதுவரை நான் காணேன்.
இவ்வாறு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் மூலம் ஹதீஸ்களுடைய இல்மை (அறிவை) நன்கு கற்றறிந்த அப்துர் ரஹ்மான் இபுனுல் மஹ்தீ மற்றும் அபு ஹீதுல் கத்தான்(ரஹ்) அவர்களும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் வஃபாத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார்கள்.
ஜகரியா உஸ்ஸாஜீ (ரஹ்) கூறினார்கள்
பஸராவில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய மதுஹபை வெளியாக்கியதில் முந்தியவர்கள் எனது தகப்பனார் தான். ஒரு முறை எனது தகப்பனார் ஒழுவுடன் இருந்த போது கொம்பு வைத்து ரத்தத்தைத் துடைத்துப் போட்டு விட்டு பள்ளியில் புகுந்தார். ஒழுச் செய்யாமல் தொழுதார். இதனை மற்றவர்கள் அறிந்து இஃது என்ன புதுமை? இது என்ன புதுமையாய் இருக்கிறது? ஹனஃபி மதுஹபின் படி ஒழு முறிந்து விடுமே? என்று அனைவரும் கேட்டனர். பின்பு என் தகப்பனாருக்கு இச்செய்தி சொல்லப்பட்டது அவர் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்கள் பஃக்தாதில் இருந்த செய்தி தெரிய வந்தது. உடனே இது விஷயமாக கடிதம் எழுதினார். அப்போது தான் கிதாபுர் ரிஸாலா என்னும் கிதாபை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் எனது தகப்பனாருக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள். அதில் ஒழுச்செய்து விட்டு கொம்பு வைத்து இரத்தத்தை எடுத்தால் ஒழு முறியாது என்பதாக அந்தக் கிதாபில் எழுதப்பட்டு இருந்தது. இதனைக்கண்ட மற்றவர்கள் புதினமாகி சந்தோஷம் அடைந்தனர்.
கிதாபுர் ரிஸாலாவைக் கண்ட அப்துர் ரஹ்மான் இபுனுல் மஹ்தீ கூறினார். இந்த உம்மத்தில் (சமூகத்தில்) இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களைப் போல் ஒரு பேரறிஞரை யான் காணவில்லை.
ரபீஃ இப்னு சுலைமான் (ரஹ்) கூறுகிறார்.
நான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய வீட்டின் வாசலைக் கண்டேன். வாசலில் 700 வாகனங்கள் காணப்பட்டன. அவ்வாகனங்கள் யாருடையவை? என்று கேட்டேன். அவைகள் பற்பல தேசங்களில் இருந்து வந்து இருக்கும் அறிஞர்களுடையவை; அன்னவர்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களுடைய கிதாபுகளை ஓதிக் கொள்வதற்காக வந்து இருக்கிறார்கள் என்பதாகக் கூறப்பட்டது.
ஸுபுஹனல்லாஹ்! இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய அறிவு ஞானத்தை என்னவென்று உரைப்பது? ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களுக்கு சரியாய் இருப்பவை தாம் எனது மதுஹபு என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியது எவ்வளவு பொருத்தமானது? என்று நான் விளங்கிக் கொண்டேன். மேலும் ரபீஃ (ரஹ்) கூறுகிறார்கள். நான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய கிதாபுர் ரிஸாலா என்னும் கிதாபை சுமார் 30 விடுத்தம் ஆவது ஓதியிருப்பேன். ஒவ்வொரு முறை ஓதியபோதும் அவற்றில் சிறு சிறு மாறுதல்கள் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு வியந்து இதனைக்குறித்து இமாம் அவர்களிடமே கேட்டேன்.அதற்கு அல்லாஹு தஆலா உடைய கித்தாபு (திருக்குர்ஆன் ஷரீப்) ஒன்று தான் ஸஹீஹானது என்று கூறிவிட்டு “வலவ்கான மின் இந்தி கைரில்லாஹி லவஜதூ ஃபீஹீ இஃக்திலாபன் கஸீரா” என்பதாக ஓதிக்காட்டினார்கள். (இதன் பொருள்) அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருந்து அவர்கள் பெறக்கூடியவற்றில் பற்பல மாற்றங்களைக் காண்பார்கள். (பெற்றுக்கொள்வார்கள்) என்பதாம்.
முஹம்மதிபுனு மஸ்அலா (ரஹ்) கூறிகிறார்கள். நானும் ஸாலிஹும் இமாம் ஹன்பலி (ரஹ்) அவர்களிடம் ஓதினோம். அவர்கள் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ரிஸாலத்துல் இராகி மற்றும் ரிஸாலத்துல் மிஸிரி என்னும் இரு கித்தாபுகளையே ஓதிக் கொடுத்தார்கள்.
(தொடரும்)
ign�)�etx