• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   » புது மலர்கள்


அவ்ன் நாயகர்  தோட்டத்துப்

புது மலர்கள்

 

கலீபா  பு. முஹம்மது காசீம் B.Sc.M.Ed .பெரம்பலூர்

 

 

    பெரம்பலூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைக்கூட்டம் 24.6.2012 அன்று கலீபா முஹம்மது காசீம் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.  அன்றைய கூட்டத்தில் அமெரிக்காவிலிருந்து விடுப்பில் வந்துள்ள முரீது அஹ்மது M.C.A.,குவைத்திலிருந்து வந்துள்ள முரீது G. சபியுல்லா M.Sc. PHd,அவர்களும், இலங்கையிலிருந்து வந்துள்ள A.H. அப்துல் ரஷீது அவர்களும், பெரம்பலூரில் 12.06.2012 அன்று புதிதாக நமது சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களிடம் பைஅத் பெற்றுள்ள ஏழு முரீதீன்களும் மற்றும் பலரும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள்.  இவர்கள் தங்களின் அனுபவங்களையும் ஆன்மிக உணர்வுகளையும் இங்கு எடுத்துரைக்கிறார்கள்.  அஹமது உரையை முதலில் கேட்போம்.

  

      எனது இந்திய விஜயத்தில் நமது சங்கைமிகு வாப்பா நாயகத்தை தரிசித்தது மிகப்பெரிய பாக்கியம்: அதிலும் அவர்களின் வல்லமையையும் கராமத்தையும் நேரில் பார்த்தவுடன் என் உள்ளமும், உடலும் பூரித்தது.  அதாவது ஒரு சிறிய குழந்தைக்கு ஃபஹீமா எனப் பெயரிட்டு அதன் வாயில் தேனை ஊட்டினார்கள். இரண்டாம் முறையும் ஃபஹீமா என உரக்கக் கூறியவுடன அந்தக் குழந்தை திடீரெனத் திரும்பி வாப்பா நாயகத்தைக் கூர்ந்து பார்த்ததை நேரில் கண்டவுடன் அவர்களின் குரலுக்கும் வார்த்தைக்கும் உள்ள சக்தியைக் கண்டு அதிசயித்து விட்டேன். 

 

    அடுத்து புதிய முரீது அசாருதீன் உரையைக் கேட்போம்.  நான் வாப்பா நாயகத்திடம் புதிதாக முரீது வாங்கினேன்.  அதற்கு முன்பு டிரைவிங் லைசென்ஸ் எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு டிரைவிங் வரவில்லை.  லைசென்சும் கிடைக்கவில்லை.  ஆனால் நான் வாப்பா நாயகத்தின் முரீதான பின் அவர்களின் சொற்படி தொழுது குர்ஆன் ஓதிவந்தேன். அதன்பின் அவர்களை நினைத்துக் கொண்டு லைசென்ஸ் வாங்கச் சென்றேன், டிரைவிங் மிக சுலபமாக வந்தது; லைசென்சும் எளிமையாக உடனே கிடைத்துவிட்டது.  வாப்பா நாயகத்தின் கராமத்தை எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

 

 இரண்டாவது முரீது ஹிதாயத்துல் ஹக் பேசியது. 

 

    நான் கல்லூரிக்கு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு வாப்பா நாயகத்திடம் ‘பைஅத்’ பெற்றுக் கொண்டு திரும்பினேன்.  அடுத்த நாள் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமானால் பெற்றோருடன் தான் செல்ல வேண்டும்.  அங்கு போய் principal,HOD ஆகியவர்களைப் பார்த்து அனுமதி வாங்கி வரவேண்டும். ஆனால் நான் வாப்பாவிடம் பைஅத் வாங்கத்தானே சென்றோம். அவர்கள் நமக்குத் துணையிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே சென்றேன்.  என்ன ஆச்சரியம்! என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் என்னை உள்ளே அனுமதித்துவிட்டார்கள். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். எனக்கோ பெரிய சந்தோ­ஷம். மற்றொருநாள், நான் வகுப்புத்தேர்வு நடைபெறும் பொழுது தொழுகைக்குச் சென்றுவிட்டு,சற்றுத் தாமதாக வந்தேன். வரும்போது பேனாவையும் தொலைத்துவிட்டேன்; கையில் பணமுமில்லை; என்ன செய்வது என்று தெரியாமல் வாப்பாவை நினைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம்! திடீரென்று என் காலடியில் ஒரு பேனா கிடந்தது.  உடனே அதனை எடுத்து தேர்வு எழுதினேன்.  அதில் தேர்வு எழுதி முடியும்வரைதான் மை இருந்தது.வாப்பாவின் மகிமையே மகிமை.


      இதுபோல் இன்னும் புதிய முரீதீன்கள் முகமது இஸ்மாயில், ஆசிக் அலி மற்றும் முபாரக் ஆகியோர் தங்களின் ஆன்மிக உணர்வுகளை, சந்தோ­ஷ்ங்களை எடுத்துரைத்தனர்.  அது கேட்போர்களின் உள்ளங்களில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அல்ஹம்துலிலிலாஹ்!

 

 

 

-lanJ4eeTx