• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  ​இஸ்லாத்தீல் ஆன்மிக நெறி


இஸ்லாத்தீல் ஆன்மிக நெறி


காயல்

ஆலிமா பேரவை

 

 

    ள்ளத்தைப் புடமிட்டுத் தூய்மைப் படுத்தி, மாசற்ற உயர் பண்புகளை வளர்த்து, அகத்தையும் புறத்தையும் ஒருசேரப் பக்குவப்படுத்துவதற்கான வழிவகைகளை அறிய  உதவும் ஞானமே தஸவ்வுஃப் ஆகும்.  நிலையான பேரின்பப் பேற்றைப் பெறுவதுதான்அதன்நோக்கம்”.  தஸவ்வுஃப் என்பது தன்னைத்துறந்து தன்னை அறிய தலைவனை உணரும் பரிபக்குவ நிலை.  படைப்பையும் படைத்தவனையும் பசித்திருந்தும் விழித்திருந்தும் தனித்திருந்தும் உற்று நோக்கி உணரும் அகநிலையாகும்.


      சூஃபி எனும்அரபுச் சொல்லுக்குப் பல்வேறு நிலையில் கருத்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

   

     சூஃபி எனும்சொல் தூய்மை எனும் பொருள் தரும் ஸஃபா எனும் சொல்லிருந்து பிறந்தது.  மெய்ஞ்ஞானிகள் அகத்தில் தூய்மை பெற்றவர்களாக விளங்குவர்.


      இறைவனையே நாளும் எண்ணியும் வணங்கியும் வருகின்ற நிலையில் றைவனின் முன்னிலையில் முதலிடம் பெறும் தகுதி பெறுகின்றனர்.  அதனை உணர்த்தும் வகையில் “ஸஃப்” என்னும் சொல்லிலிருந்து (அணி) பிறந்தது என்பர் அறிஞர் பெருமக்கள்.

 

     நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் காலத்தில் மதீனாவிலுள்ள “மஸ்ஜிதுன்நபவி” எனும் பள்ளிவாயிலின் பக்கங்களில் அமைந்த திண்ணைத் தாழ்வாரங்களில் ‘அஸ்ஹாபுஸ்  ஸுஃப்பா’ எனும் திண்ணைத் தோழர்கள் இறைவனின் சிந்தனையில் மூழ்கியவர்களாக வாழ்ந்து வந்தனர்.  இவர்களைக் குறிக்கும் ‘ஸுஃப்பா’ எனும் செல்லிலிருந்து “சூஃபி” எனும் சொல் பிறந்திருக்கலாம் என்பர். 


      கிரேக்க மொழிச்சொல்லான “சோபாஸ்” அல்லது “சோஃபியா” எனும் சொல்லிருந்து “சூஃபி” எனும் சொல் பிறந்ததென்பர்.


      சூஃபி (கம்பளி)ஆடையை அணிந்தவர்களாகத் தோற்றம் பெற்றிருந்தார்களாதலால் ‘சூஃபி’கள் எனஅழைக்கப்பட்டனர்.


      சூஃபித்துவம் என்பது இஸ்லாமியத் தத்துவத்தின் அடிப்படையில் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளவும் இறைவனைத் தரிசிக்கவும் தன்னளவில் உருவான நெறியாகும்.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே விளைந்த ஆன்மிகப்பயிராகும்.  அண்ணலாரை நேரில் காணாமலேயே அவர்கள் மீதும் ஏகத்துவத்தின் மீதும் தன்னையே கரையச்செய்த உவைசுல்கர்னி (ரலி) தனிமை வாழ்வை  நாடி வாழ்ந்த குறிப்புகள் சூஃபித் துவத்தின் தனித்துவத்திற்குச் சான்றாய் அமையும்.


      இறைமறையாம் அல்குர்ஆனில் “உலாயிகல் முகர்ரபூன்” இவர்கள்தாம் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள் எனும் பொருள்பட சொல்லாட்சி உள்ளது.  தங்கள் வாழ்நாளில் தீவிரமான காலத்தில் நன்மையான காரியங்களையே செய்து கொண்டிருந்து இதனில் இவ்வுலகைவிட்டு மறையும் வரை உறுதியாக இருந்து இறைவனின் சிந்தனையிலேயே மறைந்தவர்களையே “முகர்ரபுகள்” என்று குறிப்பர்.  இச்சொல் ‘சூஃபிகள்’ எனும் சொல்பொருளுக்குப் பொருந்த இருப்பதைக் காணலாம்.


       வெளித் தோற்றத்தால் சூஃபிகள் என்னும் பெயர் பெற்றவரே அகவாழ்வில் முகர்ரபுகளாய் வாழ்ந்தனர் என்பது இவ்விரு சொற்கள் வழிப்புலப்படுகிறது.  மறுமையில் தன்னருகில்இருக்கும் கூட்டத்தினரைக் குறிப்பிடும்போது ‘முகர்ரபு’ என்று குறிப்பிட்டுள்ளதேயன்றி ‘முத்தகர்ரபு’ என்று குறிக்கவில்லை.  இதன்வழியே இறையருளால் நெருக்கம் பெற்றோராகிய நிலையே குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளமை அறியலாம்.


சூஃபித்துவம் - அன்றுமுதல் இன்றுவரை


      அண்ணலாரும் ‘இறைவனை நீங்கள் பார்ப்பதாக நினைத்து இறை வணக்கம் செய்யுங்கள்.  இந்த நிலை உங்களுக்கு ஏற்படாவிட்டால்  இறைவன் உங்களைப் பார்க்கிறான் என்றாவது நினைத்து வணங்குங்கள்” என்று அருளினார்கள். இவ்வருள்மொழியே  சூஃபித்துவத்திற்குரிய பாதையாக அமைந்தது.  எகிப்து நாட்டில் தூபா எனும் ஊரைச் சேர்ந்த துன்னூன் அல் மிஸ்ரி (796-862) என்பவரே சூஃபி தத்துவத்தை வெளிப்படையாக எடுத்துக் கூறிய முதல்வர். -


 நஃபஹாத்துல் உலூம்


      பதினோராம் நூற்றாண்டில்  நாட்டில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தோன்றி அகவாழ்வையும் புறவாழ்வையும் விளக்கமாக எடுத்துக்கூறிப் பலநூல்களை வழங்கினார்கள். இஸ்லாமிய மக்கள் இவரின் ஆழ்ந்த சிந்தனைகளை மறுத்துரையாமல் ஏற்றுக்கொண்டனர்.


      கி.பி.  1165ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் முஹிய்யுத்தீன் அல்அரபி (ரஹ்) எனும் சூஃபி ஞானி தோன்றினார்கள்.   இவர்களை ஷைகுல் அக்பர் எனப் போற்றினர்.  மறைவாக உணர்த்தப்பட்ட ஆன்மீக இரசியங்களை வெளிப்படையாக மக்களுக்கு விளக்கிய முதல் மனிதர் இவர்களேயாவர்.  இவர்கள் 500 நூல்களை எழுதியிருந்தும் 50 நூல்கள்தான் கிட்டியுள்ளன.  இவர்களுடைய மூலக்கொள்கை வஹ்தத்துல் உஜூத் (ஏக உள்ளமை) ஆகும். ஒரே இறைவன் - இவ்வுலகின் படைப்பினங்கள் அவனிடமிருந்தே உண்டானவைகள் - சூஃபி தன்னுடைய “நான்” நீங்கி ஏக உள்ளமையில் தரித்து விடுகிறார் எனும் சிந்தனையின் உறுதிப்பாடே வஹ்தத்துல் உஜூதின் அடிப்படையாக அமைந்தது.                                               


(தொடரும்)

 

�துF3i��x