ஹதீஸ் பக்கம்
பாகவி பின் நூரி
இருஆனந்தம்
நோன்பாளிக்கு இரண்டு ஆனந்தம். ஒன்று நோன்பு திறக்கும் போது. மற்றொன்று இறைவனை ஷுஹுது செய்யும் போது. நோன்புவிடும்(திறக்கும்) நேரத்தில். அவனின் துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
“இறைவா! உனக்காக நோன்புவைத்தேன், உனது ரிஜ்கால் நோன்பு திறக்கின்றேன். உன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். பாவங்களை மன்னிப்பவனே, எனதுபாவங்களை மன்னித்தருள்வாயாக” என்று மூன்று விடுத்தம் ஓதட்டும்.
இறைவனிடத்தில் முஃமினுக்குள்ள கண்ணியம், இறைவனை தரிசிப்பதும்,அவனுக்கு விருப்பமான ஹுருல் ஈன் மங்கையை மணப்பதும்.
கீழ் நரகில்...
குர்ஆனை ஓதி, ஹராம், ஹலாலைப் பேணவில்லையானால் அவன் குர்ஆனை முதுகிற்குப் பின் எறிந்துவிட்டவனைப் போன்றாவான். மேலும் அவன் நரகின் அடித்தட்டி ல்போய்ச் சேருவான், என்பதை அறிய மாட்டான்.
மெய்கொண்டு தீர்ப்புச் செய்யாத, அநீதவானுக்கு 70 முழ, ஆழ நரகமிருக்கின்றது. ஒரு முழத்தைமலை உச்சியில் வைக்கப்பட்டால், மலை உருகிச் சாம்பலாகிவிடும்.
புத்தாடை அணிந்தால், ஏழை ஒருவருக்கு ஏதாவது சதக்கா (தர்மம்) செய். ஒரு காரியத்திற்கென உன்னிடம் ஒரு முஃமின் உதவி தேடினால்,அவனுக்கு உதவி செய். அவ்வாறுசெய்வது, உண்மை மூமினின் அடையாளமாகும். வயோதிகரை கண்ணியப்படுத்து. சிறுவர்கள் மீது இரக்கம் காட்டு, நீ ஜெயசீலர் கூட்டத்தில் சேர்ந்து விடுவாய். குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்று,இது கண்ணியத்தின் சிரசாகும்.
அறிந்துகொள். இறைவன் ரிஜ்கை பங்கு வைத்தது போன்று எல்லாவற்றையும் பங்குவைத்து விட்டான். உங்களுக்கு நீங்கள் விரும்புவதை, மற்றமூமின் களுக்கும் விரும்புங்கள். நயவஞ்சகர்களை,அவனது செயலை வெறுப்பது போன்று அவனையும் வெறுத்து விடுங்கள். உன் மக்களைக் கண்ணியப் படுத்துவது போன்று,உனது நண்பர்களை கண்ணியப் படுத்து. உங்கள் மக்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
ஒருவன், ஜாதகம் பார்ப்பவனை உண்மைப் படுத்தினால், அவர் ஈமானை இழந்து குப்புற வீழ்ந்து விட்டான். சூனியக்காரனின் சொல்கொண்டு செயல்பட்டால், அவன் இறை மறுப்பாளனாகி விட்டான். பூமியின் மேல் பெருமையாக நடைபோட்டால், அவன் துஷ்டனாகிவிட்டான். சலாமிற்குபதில் கூறாதவன் கர்வம் கொண்டவனாகும்.
��i�